Home
News

இன்னும் 24 நாட்கள் தான்.. பதட்டத்தில் பேசிய நிறுவனர் விஜய்.. Paytm கதை க்ளோஸ்? பின் வாங்காத RBI வங்கி!

"தொடர்ச்சியான இணக்கமின்மை" காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கியானது, பேடிஎம் ஆப்பை பயன்படுத்துவதில் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து, அவைகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று.. அதாவது இன்னும் 25 நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது.

பேடிஎம் நிறுவனம் மீது என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது? மார்ச் 1 முதல் என்னென்ன புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்? இந்த நெருக்கடி குறித்து பேடிஎம் நிறுவனர் ஆன விஜய் சேகர் ஷர்மா (Vijay Shekhar Sharma) என்னென்ன கூறியுள்ளார்? பேடிஎம் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கைகளை எடுக்குமா? இதோ விவரங்கள்:

பின் வாங்காத RBI.. பதட்டத்தில் பேசிய Paytm நிறுவனர் விஜய்!

பேடிஎம் நிறுவனத்தின் கதை முடிந்ததா? பிபிபிஎல் (PPBL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேடிஎம் பேமண்ட் பேங்க் லிமிடெட் (Paytm Payment Bank Ltd) மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை தொடர்ந்து, பேடிஎம் நிறுவனமானது பிற வங்கிகள் உடனான கூட்டாண்மைகளை (Partnerships with other banks) தேடி வருகிறது.

அதாவது மெர்ச்சன்ட் பேங்க் அக்கவுண்ட் டிரான்ஸ்பர்கள் (Merchant bank account transfers), பயனர்களுடனான தொடர்பு மற்றும் பங்கு விலையின் நிலைத்தன்மை (Stock Price Stability) தொடர்பான சவால்களை சமாளிக்க பேடிஎம் நிறுவனமானது மற்ற வங்கிகளின் ஒத்துழைப்பை நாடுகிறது.

பின் வாங்காத RBI.. பதட்டத்தில் பேசிய Paytm நிறுவனர் விஜய்!

பங்கு மதிப்பில் $2 பில்லியன் சரிவை தொடர்ந்து, பங்கு சந்தைகள் பேடிஎம்-க்கான தினசரி வர்த்தக வரம்புகளை (Daily trading limits) 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பேடிஎம் நிறுவனத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் ஐசிஐசிஐ (ஈஸிஸி) வங்கி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேடிஎம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்களா? ஒரு விர்ச்சுவல் மீட்டிங் வழியாக தனது ஊழியர்களிடம் பேசிய பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா, நிறுவனத்திற்கு பெரும் நெருக்கடி இருக்கும் போதிலும் கூட பணிநீக்கங்கள் எதுவும் இருக்காது என்று கூறி உள்ளார். நிறுவனத்தை சுற்றியுள்ள நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஊழியர்களுக்கு சற்றே மன உறுதி அளிக்கும்படி அவர் பேசியுள்ளார்.

பின் வாங்காத RBI.. பதட்டத்தில் பேசிய Paytm நிறுவனர் விஜய்!

மார்ச் 1 ஆம் தேதி முதல் என்னென்ன பேடிஎம் சேவைகளை அணுக முடியாது? ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி பிப்.29-க்கு பிறகு, பண பரிமாற்றங்கள் (ஏஇபிஎஸ், ஐஎம்பிஎஸ் போன்ற சேவைகளின் வகையை பொருட்படுத்தாமல்), பில் செலுத்துதல் அல்லது யுபிஐ வசதிகள் போன்ற சேவைகளை பேடிஎம் வழங்கக்கூடாது.

மேலும் பிப்.29-க்கு பிறகு, பேடிஎம் பேமன்ட்ஸ் பேங்க்கின் (Paytm Payments Bank) கீழ் புதிய பயனர்கள் சேர முடியாது . நீங்கள் ஏற்கனவே ஒரு பேடிஎம் பயனராக இல்லையெனில், குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு, பேடிஎம் பிளாட்ஃபார்மில் உங்களால் புதிய அக்கவுண்ட்டை உருவாக்க முடியாது. ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஒரு பேடிஎம் பயனராக இருந்தால், உங்களால் பேடிஎம் வேலட்கள், பேடிஎம் ஃபாஸ்டாக்ஸ் அல்லது மொபிலிட்டி கார்டுகளை பயன்படுத்த முடியாது.

பின் வாங்காத RBI.. பதட்டத்தில் பேசிய Paytm நிறுவனர் விஜய்!

இதுதவிர்த்து பேடிஎம் ஆப் ஆனது எந்த புதிய டெபாசிட்களையும் (New Deposites) ஏற்காது. அதாவது உங்கள் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்கில் நீங்கள் நிதியை சேர்க்க விரும்பினால், அதை செய்வதற்காக கடைசி தேதி - பிப்ரவரி 29 தான். அதன் பின்னர் உங்கள் சேவிங்ஸ் அக்கவுண்டில் பணத்தை சேர்க்க முடியாது.

மேலும் வேலட்கள் உட்பட டெபிட் அல்லது கிரெடிட் பரிவர்த்தனைகளும் கூட அனுமதிக்கப்படாது. இருப்பினும் (ஆர்பிஐ அறிவிப்பின்படி) வாடிக்கையாளர்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வித்ட்ரா (Withdraw) செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது உங்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை பெறவோ அல்லது அனுப்பவோ முடியாது, ஆனால் உங்கள் பேடிஎம் அக்கவுண்ட்டில் நீங்கள் வைத்திருக்கும் பேலன்ஸ் பணத்தை அணுக முடியும்; திரும்ப பெற முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New RBI Restrictions on Paytm Payment Bank Founder Vijay Shekhar Sharma assured No Layoffs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X