Home
News

Paytm தடையில் திடீர் திருப்பம்.. RBI-யின் புதிய பரிந்துரை.. அப்போ மார்ச் 15 கெடு அவ்ளோ தானா?

வருகிற மார்ச் 15 ஆம் தேதியோடு பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் கதை முடிந்துவிட்டது என்று நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், பேடிஎம்-க்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்த இந்திய ரிசர்வ் வங்கியே (RBI), தற்போது புதிய ஆலோசனை (New Advisory) ஒன்றை வழங்கியுள்ளது!

2024 பிப்ரவரி 29 ஆம் தேதி முதல், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் (Paytm Payments Bank) ஆனது அதன் அக்கவுண்ட்கள் அல்லது வாலட்களில் புதிய வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு ஆர்பிஐ உத்தரவிட்டு இருந்தது. பின்னர் அந்த காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Paytm தடையில் திடீர் திருப்பம்.. RBI-யின் புதிய பரிந்துரை!

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி அறிவிப்பானது, யுபிஐ (UPI) உட்பட பேடிஎம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சேவைகளையும் கேள்விக்கு உள்ளாக்கியது. எதெல்லாம் வேலை செய்யும்? எதெல்லாம் வேலை செய்யாது? பேடிஎம் வாடிக்கையாளர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் என்னென்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் அங்குமிங்குமாய் பறந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் பேடிஎம் நிறுவனத்திற்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்த இந்திய ரிசர்வ் வங்கி ஆனது, என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திற்கு (National Payments Corporation of India) புதிய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது!

Paytm தடையில் திடீர் திருப்பம்.. RBI-யின் புதிய பரிந்துரை!

ஆர்பிஐ-யின் புதிய ஆலோசனை என்ன சொல்கிறது? விதிமுறைககுக்கு கட்டுப்பட்டு பேடிஎம் ஆப் ஆனது தொடர்ந்து யுபிஐ செயல்பாடுகளை நடத்த, தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் ப்ரொவைடர் (Third-party application provider - TPAP) ஆக இருக்க வேண்டும் என்கிற பேடிஎம் நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்திற்கு ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க, அனைத்து '@paytm' ஹேண்டில்களும் பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியிலிருந்து புதிதாக அடையாளம் காணப்பட்ட வங்கிகளுக்கு தடையின்றி மாற்றப்படுவதை உறுதிசெய்யுமாறும் ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே உள்ள அனைத்து பயனர்களும் ஒரு புதிய ஹேண்டுலுக்கு திருப்திகரமாக மாற்றப்படும் வரை, தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் ப்ரொவைடரால் புதிய பயனர்களை சேர்க்க முடியாது.

Paytm தடையில் திடீர் திருப்பம்.. RBI-யின் புதிய பரிந்துரை!

மேலும் "தடையற்ற இடம்பெயர்விற்காக" அதிக அளவிலான யுபிஐ பரிவர்த்தனைகளை செயல்படுத்தும் திறன்களை (Capabilities to process high-volume UPI transactions) கொண்ட நான்கைந்து வங்கிகளை பேமெண்ட் சேவை வழங்குநர் (Payment Service Provider - PSP) வங்கிகளாக சான்றளிக்குமாறும் ஆர்பிஐ, என்பிசிஐ-யிடம் கேட்டுள்ளது.

ஆகமொத்தம் ரிசர்வ் வங்கியின் மார்ச் 15 ஆம் தேதி என்கிற காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை. பேடிஎம் நிறுவனத்தின் யுபிஐ சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்ய "இன்னும் சிறிது நேரம்" அனுமதிக்க வேண்டும் என்பதே ஆர்பிஐ-யின் புதிய ஆலோசனையாகும். இம்மாத தொடக்கத்தில், எஸ்க்ரோ அக்கவுண்ட் (Escrow account) திறப்பதன் மூலம்.. பேடிஎம் நிறுவனம் அதன் நோடல் அக்கவுண்ட்டை ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து மார்ச் 15 ஆம் தேத்திக்கு பின்னர்அமலுக்கு வரும் புதிய ஆர்பிஐ கட்டுப்பாடுகளுக்கு பிறகும் கூட, பேடிஎம் நிறுவனத்தின் க்யூஆர் கோட் (QR Code) மற்றும் சவுண்ட்பாக்ஸ் (Soundbox) வசதியானது தொடர்ந்து செயல்படும் என்று பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான விஜய் சேகர் சர்மா ( Vijay Shekhar Sharma) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ட்வீட்டில், "பேடிஎம் க்யூஆர், சவுண்ட்பாக்ஸ் மற்றும் இடிசி கார்டு மெஷின் (EDC Card Machine) வசதிகளானது மார்ச் 15 க்கு பிறகும் கூட, எப்போதும் போல தொடர்ந்து செயல்படும். புள்ளி #21-இல் ஆர்பிஐ வழங்கிய சமீபத்திய FAQ-வில் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு வதந்திகளையும் நம்ப வேண்டாம்!" என்று விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New RBI Advisory On Paytm UPI Payments All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X