ரேஷன் கார்டு வச்சிருந்தா குட் நியூஸ்.. தமிழ்நாடு முழுக்க புது மாற்றம்.. கையில காசு வேண்டாம்.. இனி UPI போதும்!
தமிழ்நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த ரேஷன் கார்டு உரிமையாளருக்கும் அடுத்தாண்டுக்குள் மிகப்பெரும் மாற்றம் வர இருக்கிறது. ஏற்கனவே, 10,661 ரேஷன் கடைகளில் இந்த மாற்றம் வந்துவிட்டது. மீதமுள்ள கடைகளில் 2026ஆம் ஆண்டுக்குள் அமல் செய்யப்பட இருக்கிறது. இதை ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு குட் நியூஸ் என்றே சொல்லலாம். ஏனென்றால், இனிமேல் கையில் பணத்தை கொண்டு சென்று பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் இருக்காது. அப்படி என்ன மாற்றம் வர இருக்கிறது?
கையில் காசு எடுத்து கொண்டு செலவு செய்த காலம் மாறிவிட்டது. இப்போது, பொட்டிக்கடைகள் முதல் பல சரக்கு கடைகள் வரையில் யுபிஐ பேமெண்ட்கள் (UPI Payments) வந்துவிட்டன. இதில் ரேஷன் கடைகள் மட்டும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே, தமிழ்நாடு அரசானது, மாநிலம் முழுவதும் 10,661 ரேஷன் கடைகளில் யுபிஐ பேமெண்ட்களை செயல்படுத்திவிட்டது. இப்போது, அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 37,328 ரேஷன் கடைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இதில் 37 மாவட்டங்களில் இருக்கும் 10,661 ரேஷன் கடைகளில் யுபிஐ பேமெண்ட்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆகவே, அந்த கடைகளில் ஜிபே (GPay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்கள் மூலம் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இதற்காக கியூஆர் கோட் ஸ்கேனிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, ரேஷன் கடைகளில் சில்லறைக்கு பதிலாக தீப்பெட்டி போன்ற ஏதாவது ஒரு பொருளை கொடுக்க வேண்டி இருந்தது. இல்லையென்றால், சில்லறை கிடைக்காமல் சரியாக தேவைப்படும் பணத்தை எடுத்து செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது யுஐபி பேமெண்ட்கள் வந்துவிட்டதால், கையில் காசு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கப் போவதில்லை.
இந்த 10,661 ரேஷன் கடைகளை தவிர மீதமுள்ள கடைகளில் 2026ஆம் ஆண்டுக்குள் யுபிஐ பரிவர்த்தனை செய்யும்படியான வசதிகள் செய்யப்படும் என்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதற்காக எல்காட் (ELCOT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (Electronics Corporation of Tamil Nadu) ஆனது வசதிகளை செய்து கொடுத்துவருகிறது.

இதில் டிஜிட்டல் பேமெண்ட்களை செய்வதற்காக ஸ்கேனர்கள் மற்றும் பிஓஎஸ் டிவைஸ்களும் அடங்கும். இந்த டிவைஸ்கள் மூலம் கியூஆர் கோட் மூலம் பணத்தை அனுப்புவது மட்டுமல்லாமல், கார்டுகள் மூலம் பணத்தை அனுப்பி கொள்ளும் வசதி கிடைக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் தமிழ்நாடு அரசு ரூ.20,000 செலவு செய்ய இருக்கிறது.
அதே நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ (ISO) தரச்சான்றிதழ் கொடுக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அடுத்தாண்டு முதல் ஒட்டுமொத்த ரேஷன் கடைகளிலும் யுபிஐ பேமெண்ட்கள் மூலம் பணத்தை அனுப்பி கொள்ளாலம். கையில் பணத்தை எடுத்து சென்று சில்லறைக்காக அவதியடைய வேண்டியது இருக்காது. மேலும், யுபிஐ ஆப்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலாகின்றன.
இந்த விதிகளில் தினசரி பேலன்ஸ் செக் செய்வது 50 முறையாக இருக்கிறது. அதாவது, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஏதாவது ஒரு யுபிஐ ஆப் மூலம் ஒரு நாளுக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸ் செக் செய்ய முடியும். 2 ஆப்கள் வைத்திருந்தால், உங்களால் 100 முறை பேலன்ஸ் சரிபார்ப்பை செய்ய முடியும். டிரான்ஸ்சாக்சன் ஸ்டேட்டஸ் செக் செய்வதும் 3 முறையாக இருக்கிறது.
அதாவது, ஒரு பரிவர்த்தனை முடிந்த பிறகு 90 நொடிகள் இடைவெளியில் 3 முறை பேலன்ஸ் சரிபார்த்து கொள்ளலாம். இதில் ஆட்டோபே டைமிங்கும் மாற்றப்பட்டுள்ளது. ஆகவே, காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகு மட்டுமே ஆட்டோபே பேமெண்ட்களை செய்ய முடியும். இப்படி பல்வேறு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








