Home
News

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. ரேஷன் கார்டு, பேங்க் அக்கவுண்ட்.. ஒரே நேரத்தில் வரும் 3 முக்கிய மாற்றங்கள்!

வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல், ரேஷன் கார்டு (Ration Card), பேங்க் அக்கவுண்ட் (Bank Account), கிரெடிட் ஸ்கோர் (Credit Score) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இவை நேரடி மாற்றங்களாகும். ஆகவே, பேங்க் கஸ்டமர்கள் மற்றும் ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது முதல் பேங்க் அக்கவுண்ட் வைத்து கடன் வாங்குதல் மற்றும் செலுத்தல் வரையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இதில் ரேஷன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் நேரம் இருக்கிறது. இதை செய்தால் தப்பித்து கொள்ளலாம்.

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. ரேஷன் கார்டு, பேங்க் அக்கவுண்ட்!

1. ரேஷன் கார்டு பயனர்களுக்கும் கேஒய்சி சரிபார்ப்பு: மத்திய, மாநில அரசுகளின் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் கேஒய்சி புதுப்பிப்பை செய்ய வேண்டும். இதில் கைரேகை சரிபார்ப்பு இருக்கிறது. இதை குடும்பத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பேரும் செய்து முடிக்க வேண்டும்.

இதை செய்ய தவறினால், ரேஷன் கார்டில் பெறும் தானியங்கள், அரிசி உள்ளிட்டவற்றை பெற முடியாமல் போகலாம். ஒட்டுமொத்த ரேஷன் கடைகளிலும் இந்த கேஒய்சி சரிபார்ப்பை செய்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் நபர்களின் கைரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், ரேஷன் பொருட்களை பெற முடியாமல் போக வாய்ப்புள்ளது.

2. பேங்குகள் கிரெடிட் ஸ்கோர் புதுப்பிப்பு: ஒட்டுமொத்த பேங்குகளும் 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோர் புதுப்பிப்பை கொடுக்கின்றன. ஆனால், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல், 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக, கடன் தகவல் நிறுவனங்கள் ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோரை புதுப்பிக்க வேண்டும்.

இந்த விதிகள் அமலுக்கு வந்துவிட்டால், லோன் செலுத்துதல் மற்றும் லோன் பெறுதல் மற்றும் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் பேங்க் கஸ்டமர்களுக்கு லோன் பெறுவதற்கான தகுதி மற்றும் வட்டி விதிக்கப்படுவதில் நேரடியாக பாதிப்பு ஏற்படும். கடன் மதிப்பீடுகளை தவிர, கடன் வாங்குபவர்களுக்கு புதிய கடன், அதிக கடன் ஆகியவற்றில் சலுகைகள் இருக்கும்.

3. நகர்ப்புற கூட்டுறவு வங்கி மாற்றங்கள்: ஆர்பிஐ (RBI) என்கிற இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது இந்த விதிகளை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவருகிறது. இந்தியாவில் இருக்கும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான (Urban Co-operative Banks) இந்த விதிகள் நேரடி மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது.

இதில் வியூ ஒன்லி (View Only) மற்றும் டிரான்ஸாக்ஷனல் (Transactional) ஆகியவற்றில் விதிகள் மாறுகின்றன. இதில் வியூ ஒன்லி ஆனது சிபிஎஸ் (CBS) என்கிற கோர் பேங்கிங் சொல்யூஷன் (Core Banking Solution) மற்றும் ஐபிவி6 (IPv6) ஆகியவற்றால் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆகவே, பேலன்ஸ் சரிபார்ப்பு போன்றவற்றை வியூ ஒன்லி சேவையில் பெற்று கொள்ளலாம்.

இதை ப்ராவா (PRAVAAH) போர்டல் வழியாக தொடங்கலாம். ஆனால், இது ஜிஏஐசிஏ (GAICA) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகே தொடங்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைச் சேவைகளுக்கு வங்கிகள் குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் மூலதனம்/நிகர மதிப்பு கொண்டிருக்க வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி கட்டாயமாக இருக்கிறது.

இந்த அடிப்படையில் டிரான்ஸாக்ஷனல் சேவைகள் கொடுக்கப்பட இருக்கிறது. வங்கிகள் வெளிப்படையான வாடிக்கையாளர் ஒப்புதலைப் பெற வேண்டும். விதிமுறைகளின் வெளிப்படையான தொடர்பை உறுதி செய்ய வேண்டும், நெட்வொர்க்-இன்டிபென்டென் மொபைல் பேங்கிங்களை வழங்க வேண்டும். இந்த விதிகளை ஆர்பிஐ அமல்படுத்த உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Ration Card Rules Including Aadhaar KYC Verification Bank Account Come to Effect From January 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X