Home
News

2026 புது ரேஷன் கார்டு.. ரூ.3,000 இப்ப இல்ல.. வீட்டில் இருந்தே ஸ்மார்ட் கார்டு.. உடனே இதை மட்டும் பண்ணிடுங்க!

2026 ஆம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கு புதிதாக திருமணமான தம்பதிகள், கூட்டு குடும்பத்தில் இருந்து தனியாக செல்பவர்கள் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட் கார்டை ஆன்லைனில் அப்பளை செய்து வாங்கி கொள்ளலாம். பொங்கல் கிப்ட் ரூ.3,000 கிடைக்க வாய்ப்பில்லை. இருப்பினும், அடுத்த முறைக்கு புதிய ரேஷன் கார்டு வாங்கி வைத்து விடலாம்.

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு (Ration Card) வைத்து இருக்கும் குடும்பங்களுக்கு ரூ.3,000 பொங்கல் கிப்ட் கொடுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் புதிதாக திருமணம் செய்த தம்பதிகள், கூட்டு குடும்பத்தில் இருந்து தனியாக மாறிவர்கள் உள்ளிட்டடோர் புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கான மும்முரத்தில் இருக்கின்றனர். இப்போது, அப்ளை செய்தாலும் பொங்கல் கிப்ட் கிடைக்காது.

2026 புது ரேஷன் கார்டு.. ரூ.3,000 இப்ப இல்ல.. வீட்டில் இருந்தே அப்ளை!

புதிய ஸ்மார்ட் கார்டு வருவதற்குள் பொங்கல் பண்டிகை முடிந்துவிடும். இருப்பினும், அடுத்த பொங்கல் மட்டுமல்லாமல், அத்தியாவசிய பொருட்களுக்கு தவிர்க்க முடியாத ரேஷன் கார்டை வாங்கி வைத்துவிடுவது அவசியமானதாகும். ஆகவே, தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வீட்டில் இருந்தே ஆன்லைனில் அப்ளை செய்துவிடுங்கள். இதை எளிதாக செய்யலாம்.

புதிய ரேஷன் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

1. தமிழ்நாடு அரசின் tnpds போர்டலுக்கு சென்று கொள்ளுங்கள். முகப்பு பக்கத்தின் வலது புறத்தில் மின்னணு அட்டை சேவைகள் விருப்பம் இருக்கும். இதற்கு கீழே புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை, மறுபரிசீலனை விண்ணப்பம் ஆகிய மூன்று விருப்பங்கள் தோன்றும்.

2. இதில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, குடும்ப தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி ஆகிய விவரங்கள் கேட்கப்படும். இதை ஆங்கிலத்தில் மற்றும் தமிழில் கொடுக்க வேண்டும். மேலும், மாவட்டம், மண்டலம், வட்டம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. அதாவது, மாவட்டத்தை கொடுத்த பிறகு மண்டலம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்கள் தானாகவே வரும். அதை சரியாக தேர்ந்தெடுத்தால் மட்டுமே போதும். மேலும், அஞ்சல் குறியீடு, மொபைல் நம்பர் (கைப்பேசி எண்) தொலைபேசி எண் (லேண்ட்லைன் நம்பர்) கொடுக்க வேண்டும். மேலும், மின்னஞ்சல் (இமெயில்) முகவரையை கொடுக்க வேண்டும்.

4. உறுப்பினரைச் சேர்க்க என்ற விருப்பம் தோன்றும். இதில் மனைவி, குழந்தைகள் விவரங்களை கொடுக்க வேண்டும். இதில் பெயர், பாலினம், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். இதற்கு அடுத்ததாக அட்டை தேர்வு செய்ய வேண்டும். இதில் நான்கு அட்டை விருப்பங்கள் இருக்கும். இதில் மூன்று மட்டுமே பெரும்பாலும் தேர்வு செய்யப்படும்.

5. அரிசி அட்டை (Rice Card), சர்க்கரை அட்டை (Sugar Card), பண்டகமில்லா அட்டை (No Commodity Card) மற்றும் மற்றவை (Others) ஆகியவை இருக்கும். இதில் தேவையான அட்டையை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இப்போது, குடும்பத் தலைவர் புகைப்படம் மற்றும் குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6. இந்த குடியிருப்புச் சான்றுக்கு ஆதார் அட்டை, மின்சார கட்டண ரசீது, வங்கி புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, சொத்து வரி ரசீது (சொத்த வீட்டுக்கு மட்டும்), பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வாடகை ஒப்பந்த ஆவணம், தொலைப்பேசி கட்டண ரசீது ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் நகலை பதிவேற்ற வேண்டும்.

7. எரிவாயு இணைப்பு இருந்தால், விவரங்களை கொடுக்க வேண்டும். இறுதியாக உறுதிப்படுத்தல் பாக்ஸை டிக் செய்துவிட்டு, பதிவு செய் விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் புதிய ஸ்மார்ட் கார்டுக்கான பதிவு செயல்முறை முடிந்துவிட்டது. மொபைல் நம்பருக்கு ஒப்புகை எண் கொடுக்கப்படும். இதை வைத்து டிராக் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Ration Card For Tamil Nadu How to Get Smart Ration Card Online Ahead of Pongal 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X