வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே புதிய ஏற்பாடு.!

By Prakash
|

இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி(IRCTC) வலைதளத்தின் வேகம் பொறுத்தவரை போதிய வேகம் இல்லை என மக்கள் கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வலைதளத்தில் பல சிக்கல்கள் நீடிக்கிறது. இதை தொடர்ந்து புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது இந்திய ரயில்வே.

வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்ய இந்திய ரயில்வே புதிய ஏற்பாடு.!

பொதுமக்கள் எளிமையாகவும், வேகமாகவும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய ஆப் ஒன்றை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஆப் பொறுத்தவரை அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

தற்போது பயன்படுத்தும் இந்த வலைதளத்திற்கு மாற்றாக புதிய வலைதளம் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படும் மொபைல்
ஆப் போன்றவற்றை கொண்டுவந்துள்ளது இந்திய ரயில்வே அமைப்பு.

நேரம்:

நேரம்:

இப்போது வரும் இந்த புதிய ஆப் பொறுத்தவரை ரயில் வந்து செல்லும் நேரம், ரயில் நேரம் தாமதமாவது, போன்றவை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு:

முன்பதிவு:

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் உள்ள நேர விரயம் மற்றும் தட்கல் முறையில் நடைபெறும் சிக்கல் போன்றவை இதன்மூலம் தடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்:

பொதுமக்கள்:

இப்போது கொண்டுவரும் இந்த சேவை பொறுத்தவரை மக்களுக்கு மிக எளிமையாக பயன்படும் வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் அனைத்து இடங்களிலும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.

இஸ்ரோ:

இஸ்ரோ:

இந்த புதிய ஆப் பொறுத்தவரை இஸ்ரோவின் உதவியுடன் சேர்க்கப்படலாம் என்றும், இதற்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள்:

பயனர்கள்:

இந்த ஆப் பொதுவாக பயணிக்கும்போது எந்த இடத்தில் இருக்கிறோம், எப்போது ரயில் சென்றடையும் போன்ற தகவல்களை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
New rail website app soon to help book tickets faster ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X