Home
News

Aadhaar கார்டுக்கு வரும் ஆப்லைன் வசதி.. இனி எல்லாமே இந்த QR கோட் தான்.. UIDAI அறிவிப்பு!

டெஸ்டிங்கில் உள்ள ஒரு புதிய ஆதார் ஆப் (New Aadhaar App) ஆனது இந்திய குடிமக்களுக்கான மிகவும் முக்கியமான 12 இலக்க அடையாளங்காட்டி ஆக செயல்படும் ஆதார் கார்டுக்கு (Aadhaar Card) ஒரு புதிய ஆப்லைன் (Offline) வசதியை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த புதிய ஆப் ஆனது - பயனர்கள் ஹோட்டல்கள் போன்ற பொது இடங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஆதார் கார்டு தொடர்பான தரவுகளின் அளவை குறைக்கும் மற்றும் தேவைப்படும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர உதவும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன புவனேஷ் குமார் தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Aadhaar கார்டுக்கு வரும் ஆப்லைன் வசதி.. இனி எல்லாமே இந்த QR கோட் தான்!

ஆதார் ஆப்பில் உள்ள ஒரு அடர்த்தியான க்யூஆர் கோட்-ஐ காட்டி "இதுதான் நாங்கள் ஆதார் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம் என்றும் புவனேஷ் குமார் கூறினார். கூடுதல் அம்சங்களை இணைத்து, இந்த புதிய ஆப் பொது சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, முறையாக அறிமுகம் செய்யப்பட்டு விளம்பரப்படுத்தப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்

குறிப்பிட்ட "அடர்த்தியான" க்யூஆர் கோட் ஆனது ஆதார் பயனரின் அனைத்து தரவையும், அவர்களின் புகைப்படம் உட்பட அனைத்தையும் கொண்டிருக்கும் ஆனால் அவைகள் எல்லாமே ஆஃப்லைன் ஆக பகிரப்படும். அதாவது க்யூஆர் கோட்-ஐ ஆதார் ஆப்பை பயன்படுத்தி மற்றவர்கள் ஸ்கேன் செய்வார்கள். இது யுஐடிஏஐ-ஆல் நிலையான கிரிப்டோகிராஃபிக் நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்படுவதால், இதை போலியாக உருவாக்குவது நடைமுறையில் சாத்தியமற்றது.

ஆக இந்த ஆப்லைன் அம்சம் போலியான ஆதார் விவரங்களை கொண்ட படங்கள் அல்லது பிடிஎப் ஆவணங்கள் உருவாக்கப்படும் சிக்கலையும் குறைக்கும். இது ஆதாரை "ஆஃப்லைனில் சரிபார்க்கக்கூடிய" ஒரே ஐடியாக மாற்றும் என்று புவனேஷ் குமார் கூறினார். இருப்பினும் பிஸிக்கல் அடையாள விவரங்களை சேமிப்பதை முற்றிலுமாக தடை செய்ய முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்தார். இது ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பாதிக்கக்கூடும் என்கிறார்.

இதுவொருபக்கம் இருக்க பான் (PAN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (Permanent Account Number) வைத்து இருப்பவர்களுக்கான புதிய விதிகள் (New Rules) வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிபிடிடி (CBDT) என்கிற மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஆனது - பான் நம்பரை ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 என்று நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஆணை - வங்கி, நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வருமான வரி தாக்கல் ஆகிய நோக்கங்களுக்காக சிங்கிள், சரிபார்க்கப்பட்ட அடையாள அமைப்பை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஆக டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பை செய்து முடிப்பவர்களுக்கும் (மற்றும் ஏற்கனவே இதை செய்து முடித்து விட்டவர்களுக்கும்) 2026 ஜனவரி 1 ஆம் தேதி முதல் எந்த சிக்கலும், எந்த விதிமுறைகளும், எந்த இடையூறுகளும் இருக்காது. மறுபக்கம் பான்-ஆதார் இணைப்பை செய்யாதவர்கள் பல வகையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஒரு பான் கார்டு உரிய தேதிக்குள் டிச.31 க்குள்) ஆதார் கார்டு இணைக்கப்படாவிட்டால், அது ஜனவரி 1, 2026 முதல் 'செயல்படாததாகிவிடும். செயல்படாத பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதிலும், பணத்தைத் திரும்ப பெறுவதிலும், நிதி பரிவர்த்தனைகளில் இடையூறுகளையும் சந்திக்க நேரிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New QR Code in Aadhaar App To Encourage Offline Sharing With Less Data UIDAI CEO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X