இஷ்டத்துக்கு INSTAAL ஆகுது.. 2 OnePlus போன்களில் திடீர் சிக்கல்.. கம்பெனியின் நக்கல் பதில்.. ஓனர்கள் ஷாக்!
கடந்த பிப்ரவரி மாதம் "காசு திருப்பி கொடுத்துடுறோம்!" என்று சரண்டர் ஆகும் அளவிற்கு ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு பிரச்சனையில் சிக்கியது. அந்த பிரச்சனைக்கு காரணம் ஒன்பிளஸ் 12ஆர் தான். வெளியீட்டின் போது, இதன் 256ஜிபி வேரியண்ட் ஆனது யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜுடன் வருமென்று அறிவிக்கப்பட்டுருந்தது.
அதை நம்பி ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட்டை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்ஸ் (Lower read and write speeds) குறித்து சந்தேகம் எழுப்பினர். அதன் பின்னரே ஒன்பிளஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதாவது ஒன்பிளஸ் 12ஆர்-ன் அனைத்து வேரியண்ட்களுமே யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் (UFS 3.1 Storage) உடன் வருகின்றன.

இந்த பிரச்சனையை யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அப்படியே முடிக்கும் நோக்கத்தின்கீழ் ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைவரும், சிஓஓ-வுமான கிண்டர் லியு (Kinder Liu) புதிய செயல் திட்டமொன்றை அறிவித்து, அதன்கீழ் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கிய பயனர்களுக்கு ரீபண்ட் கிடைக்கும் என்று அறிவித்தார். அந்த சிக்கல் முடிந்த கையோடு தற்போது புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஆகிய 2 மாடல்களிலும் புதிய சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இவ்விரு மாடல்களையும் வாங்கிய பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் 'ப்ளோட்வேர்' ஆப்களை இன்ஸ்டால் செய்ய முன்வந்ததாக புகார் அளித்துள்ளனர்.
அதாவது டிவைஸ் செட்டப் ப்ராசஸின் போது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 4 கூடுதல் தேர்ட் பார்ட்டி ஆப்கள் இன்ஸ்டால் ஆவதாக இந்திய பயனர் ஒருவர் எக்ஸ் தளம் வழியாக புகார் அளித்துள்ளார். இந்த தேவையற்ற கூடுதல் ஆப்கள் ஆனது "ஒன்பிளஸில் இருந்து" என்கிற தலைப்பின் கீழ் தோன்றும் "ரிவ்யூ அடிஷனல் ஆப்ஸ்" என்கிற ஸ்க்ரீனில் தோன்றுவதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.
தற்போது இந்த பிரச்சினை ஒன்பிளஸ் நிறுவனத்தால் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த சிக்கலை ஒரு 'எரர்' என்று குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் உள்ள சாஃப்ட்-ப்ரீலோட்கள் சோதனையின் போது ஏற்பட்ட பிழை என்று இதை கூறுகிறது. ஒன்பிளஸ் 12-ல் இந்த ஆப்கள் எதனுடனும் ப்ரீ-லோலட் செய்யப்படவில்லை மற்றும் தொடர்ந்து இலகுவாகவும் வேகமாகவும் மென்மையாகவும் இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்த இடத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போனில் இரண்டு ப்ரீ-லோடட் ஆப்கள் (இன்ஸ்டாகிராம் மற்றும் அகோடா) இருந்ததை ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்புக்கொள்கிறது. மேலும் இந்த ஆப்களை டெலிட் செய்வது அல்லது அன்இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிமையான காரியம் என்றும் ஒன்பிளஸ் கூறியுள்ளது.
ஆனால் எக்ஸ் தளத்தில் உள்ள முக்கிய டிப்ஸ்டர்களில் ஒருவரான 1NormalUsername, சமீபத்திய ஆக்சிஜன் ஓஎஸ் வெர்ஷன் வழியாக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கு அதிக ப்ளோட்வேர் செல்லும் என்று தெரிவித்துள்ளார். Fitbit, Bubble Pop, Facebook, Amazon, Amazon Music, Amazon Prime Video, Zomato, Agoda மற்றும் Swiggy போன்ற மூன்றாம் தரப்பு ஆப்கள் ப்ரீலோடட் செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது ஏபிகே ஷார்ட்கட்களாக காட்டப்படலாம் என்கிறார்.
ஒன்பிளஸ் 12ஆர்-ன் யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் பிரச்சனையிலும் கூட, ஒன்பிளஸ் நிறுவனம் மிகவும் சாதாரணமான விளக்கத்தையே அளித்தது. அது குறித்த விளக்கத்தில்.. "ஒன்பிளஸ் 12ஆர் அறிமுகத்தின் போது, டிரினிட்டி எஞ்சின் (Trinity Engine) என்கிற புதிய மென்பொருள் அல்காரிதம்களை (Software algorithms) நாங்கள் அறிவித்தோம், இது உங்கள் போனின் மெமரி மற்றும் ஸ்டோரேஜை பல ஆண்டுகளுக்கு வேகமாகவும் சீராகவும் வைத்திருக்க உதவும் ஒரு தொழில்நுட்பமாகும்."
"ஒரு பிழையின் காரணமாக, டிரினிட்டி இன்ஜினால் மேம்படுத்தப்பட்ட ஸ்டோரேஜ் - சில வேரியண்ட்களில் - யுஎப்எஸ் 4.0 ஆக இருக்கும் என்று நாங்கள் தெரிவித்தோம். ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் அனைத்து வகைகளிலும் உள்ள ஸ்டோரேஜ் இன்னமும் டிரினிட்டி இன்ஜினால் மேம்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் அது யுஎப்எஸ் 3.1 தான் என்பதை இப்போது எங்களால் உறுதிப்படுத்த முடியும்" என்று ஒன்பிளஸ் விளக்கமளித்து இருந்தது.


Click it and Unblock the Notifications








