Home
News

NETFLIX இல் புதிய செட்டிங்.. ஓசியில் படம் பார்க்கும் கும்பலுக்கு ஆப்பு.. பணம் கொடுக்கும் பயனர்கள் பெருமூச்சு!

10 பைசா செலவு இல்லாமல்.. சந்தா பணம் செலுத்தாமல்.. நெட்பிளிக்ஸில் உள்ள திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து வந்தவர்களின் தலையில் ஒரு பெரிய குண்டை தூக்கிபோட்டுள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்; இதனால் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்!

Netflix-ன் அதிரடி நடவடிக்கை!

கடந்த பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட பாஸ்வேர்ட் ஷேரிங் (Password Sharing) மீதான தடையை ஒருவழியாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

எல்லோருமே பாஸ்வேர்ட்களை பகிர்வதால், பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது என்கிற காரணத்தால் 4 நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேரிங்கை தடை செய்வதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது!

NETFLIX இல் புதிய செட்டிங்.. ஓசியில் படம் பார்க்கும் கும்பலுக்கு ஆப்பு

அதென்ன நாடுகள்?

நெட்பிளிக்ஸ் நிறுவனம் கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நான்கு நாடுகளில் பாஸ்வேர்ட் ஷேரிங்கை தடை செய்துள்ளது. நல்லவேளையாக (தற்போது வரை) இந்த பட்டியலில் இந்தியா இணையவில்லை; ஆனால் அதற்கு வெகுநாட்கள் ஆகாது என்பதே நிதர்சனம்.

இனிமேல் Netflix உங்களுடைய Primary Location-ஐ கேட்கும்!

மேற்குறிப்பிட்ட 4 நாடுகளில், அதாவது கனடா, நியூசிலாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இந்த பிராந்தியங்களில் உள்ள நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள், நெட்பிளிக்ஸ் வழியாக தங்களது ப்ரைமரி லோக்கேஷனை (Primary Location) செட் செய்யும்படி கேட்கப்படுவார்கள்.

அதன் மூலம் ஒரே வீட்டில் உள்ள வெவ்வேறு நெட்பிளிக்ஸ் பயனர்கள், தனித்தனி அக்கவுண்ட்களை பயன்படுத்துகிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படும்.

ஜஸ்ட் மிஸ் ஆனாலும் அக்கவுண்ட் காலி!

ப்ரைமரி லோக்கேஷன் உடன் சேர்த்து, ஒரு அக்கவுண்ட்டின் உண்மையான உரிமையாளருக்கு குறிப்பிட்ட அக்கவுண்ட்டை அணுகக்கூடிய மெம்பர்களை நிர்வகிக்க உதவும் 'மேனேஜ் அக்செஸ் அண்ட் டிவைசஸ்' (Manage Access and Devices) என்கிற புதிய பக்கமும் அணுக கிடைக்கும்!

இருப்பினும் அக்கவுண்ட்டின் உண்மையான உரிமையாளர், மெம்பர்களின் லாக் இன்-ஐ அங்கீகரிக்க வேண்டும். மேலும் அக்கவுண்ட்டின் மெம்பர்கள் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஹோம் நெட்வொர்க்குடன் கனெக்ட் ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தங்களது அக்கவுண்ட்டை இழக்க நேரிடும்!

ஒருத்தர் ரெண்டு பேருன்னா பரவாயில்ல!

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் ப்ரொடெக்ட் இன்னோவேஷனின் இயக்குனரான (Director of Product Innovation) செங்கி லாங், "100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் தங்களுடைய நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட்களை பகிர்ந்து கொள்கின்றன. இது சிறந்த திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் முதலீடு செய்யும் திறனை பாதிக்கிறது" என்று கூறியுளளார்.

நஷ்டம் தான்.. இருந்தாலும் இந்த தடை 4 நாடுகளோடு நிற்காது!

முதலீடுகள் பாதிக்கப்படும் என்பது ஒருபக்கம் இருக்க, பாஸ்வேர்ட் ஷேரிங்கை தடுப்பதன் மூலம் அல்லது நிறுத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 30 மில்லியன் பயனர்களின் வழியாக கிடைக்கும் 721 மில்லியன் டாலர்கள் என்கிற வருவாயை, நெட்பிளிக்ஸ் நிறுவனம் இழக்க நேரிடும் என்று கோவன் ஆய்வாளர்கள் (Cowen Analysts) மதிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் கூட நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை 4 நாடுகளுடன் நின்றுவிடப்போவதில்லை. மேற்கண்ட புதிய மாற்றங்கள் வரும் மாதங்களில் பரவலாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

More from GizBot

Best Mobiles in India

English summary
New Primary Location Setting Introduced in Netflix to End Password Sharing In These 4 Countries
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X