Nothing Phone 1-இன் "புதிய விலை" விவரம்; ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்!

|

பில்ட்-அப் செய்யப்பட்ட அளவிற்கு "முற்றிலுமான" டிரான்ஸ்பிரென்ட் டிசைனில் வரவில்லை என்றாலும் கூட நத்திங் போன் 1 (Nothing Phone 1) மீதான எதிர்பார்ப்பு "கொஞ்சம் கூட" குறைந்தபாடில்லை என்பதே உண்மை. அதற்கு முக்கிய காரணம் - இதன் விலை தான்.

கடந்த முறை வெளியான ஒரு லீக் தகவல் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.31,300 என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவலை நமக்கு வழங்கியது.

ஆனால் இப்போது வெளியாகி உள்ள ஒரு தகவல்..?

ஆனால் இப்போது வெளியாகி உள்ள ஒரு தகவல்..?

தற்போது நமக்கு கிடைத்துள்ள ஒரு தகவல், நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் "புதிய விலை" நிர்ணயத்தை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது.

சுவாரசியமான விடயம் என்னவென்றால், புதிய விலை விவரங்கள் முன்னர் வெளியான விலை விவரங்களை விட குறைவானதாக உள்ளன.

Flipkart இல் கிடைக்கும் ப்ரீ-ஆர்டர் பாஸ்-ஐ நம்பி வாங்கலாமா?

Flipkart இல் கிடைக்கும் ப்ரீ-ஆர்டர் பாஸ்-ஐ நம்பி வாங்கலாமா?

ஜூலை 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யட்டப்பட உள்ள, நத்திங் நிறுவனத்தின் இந்த முதல் ஸ்மார்ட்போனை நீங்கள் முன்பதிவு செய்ய விரும்பினால், பிளிப்கார்ட் (Flipkart) வழியாக கிடைக்கும் ப்ரீ-ஆர்டர் பாஸ்-ஐ வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

அதன் விலை ரூ.2000 ஆகும், இந்த தொகை நீங்கள் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனை வாங்கும் போது, மொத்த தொகையில் இருந்து கழித்துக்கொள்ளப்படும் என்பதால், நம்பி முன்பதிவு செய்யலாம்.

போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!

ஆனாலும் முழு விலை தெரியாமல் முன்பதிவு செய்வது Safe-ஆ?

ஆனாலும் முழு விலை தெரியாமல் முன்பதிவு செய்வது Safe-ஆ?

நியாமான கேள்வி! ஒரு ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்று தெரியாமல் அதை முன்பதிவு செய்வது, நிச்சயமாக ஒரு நல்ல பழக்கம் அல்ல.

குறைந்தபட்சம, குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலையையாவது நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில், நத்திங் போன் 1-ஐ வாங்க விரும்புபவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஏன் கொடுத்து வைத்தவர்கள்?

ஏன் கொடுத்து வைத்தவர்கள்?

ஏனெனில் இதுவரை வெளியான எல்லா லீக்ஸ் மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களுமே, இந்த ஸ்மார்ட்போன் ஒரு மிட்-ரேன்ஜ் பிரீமியம் மாடலாகத்தான் இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளன.

பற்றாக்குறைக்கு, தற்போது வெளியாகியுள்ள புதிய விலை நிர்ணயங்கள் நத்திங் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ள அனைவருக்கும் கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது என்றே கூறலாம்.

7GB RAM, 50MP கேமரா.. இந்த கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு பட்ஜெட் Phone-ஆ!7GB RAM, 50MP கேமரா.. இந்த கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு பட்ஜெட் Phone-ஆ!

ஆரம்பத்தில் சொன்னபடி ரூ.31.300 க்கு வராதாம்!

ஆரம்பத்தில் சொன்னபடி ரூ.31.300 க்கு வராதாம்!

முன்னதாக கிடைக்கப்பெற்ற ஒரு தகவலானது, நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.31,300 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறியது

மறுகையில் உள்ள 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.33,000 க்கும் மற்றும் டாப்-ஆஃப்-லைன் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.35,900 க்கும் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் லேட்டஸ்ட் தகவல் வேற மாதிரி சொல்லுது!

ஆனால் லேட்டஸ்ட் தகவல் வேற மாதிரி சொல்லுது!

தற்போது வெளியாகியுள்ள ஒரு லீக், நத்திங் போன் (1) ஸ்மார்ட்போன் ஆனது 8GB + 128GB, 8GB+ 256GB மற்றும் 12GB + 256GB என்கிற 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வரும் என்கிற தகவலை உறுதிபடுத்தி உள்ளது.

ஆனால் விலையில் சில மாற்றங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளது. அதன்படி, பேஸிக் வேரியண்ட் ஆனது சுமார் ரூ.31,000 க்கும், 256GB மாடல் ஆனது சுமார் ரூ. 32,000 மற்றும் 12GB ரேம் மாடலானது தோராயமாக ரூ.36,000 க்கும் அறிமுகம் ஆகும்.

ரூ.300. ரூ.100னு... இதெல்லாம் ஒரு வித்தியாசமா?

ரூ.300. ரூ.100னு... இதெல்லாம் ஒரு வித்தியாசமா?

அதாவது பேஸிக் வேரியண்ட்டில் ரூ.300 என்கிற அளவிலும், 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் ரூ.1000 என்கிற அளவிலும் விலை குறைந்துள்ளது. ஆனால் ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.100 என்கிற அளவிலான விலை அதிகரிப்பை பெற்றுள்ளது.

மேலோட்டமாக பார்த்தால், இது பெரிய அளவிலான வித்தியாசத்தை வழங்காது தான். ஆனால் அறிமுக சலுகைகள் மற்றும் சில மாதங்களுக்கு பின் அறிவிக்கப்படும் விலை குறைப்புகளை மனதில் கொண்டு பார்த்தால், இது நிச்சயம் ஒரு நல்ல வித்தியாசத்தை வழங்கும்.

1-இன்ச் கேமராவுடன் வரும் அடுத்த Xiaomi போன்; iPhone-களின் ஆட்டம் முடிந்தது!1-இன்ச் கேமராவுடன் வரும் அடுத்த Xiaomi போன்; iPhone-களின் ஆட்டம் முடிந்தது!

கரெக்ட்-ஆ... ரூ.31,000 க்கு வந்தால்? இதை வாங்கலாமா?

கரெக்ட்-ஆ... ரூ.31,000 க்கு வந்தால்? இதை வாங்கலாமா?

கண்டிப்பாக! அறிமுகம் செய்யப்படும் முன்பே நத்திங் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போன் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டது. போதாக்குறைக்கு இது விலைக்கு ஏற்ற நேர்மையான அம்சங்களையே வழங்குகிறது.

அதாவது பின்புறம் "|முழுவதும்" எல்இடி லைட்ஸ், 6.55-இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 50எம்பி மெயின் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ SoC, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் போன்ற (சில எதிர்பார்க்கப்படும் மற்றும் சில உறுதிசெய்யப்பட்ட) அம்சங்களை கொண்டு வரலாம் / வருகிறது.

Best Mobiles in India

English summary
New Price details of Nothing Phone 1 gives you the confidence to buy or not ahead July 12 India Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X