Home
News

புது ரூல்ஸ்.. மே.1 முதல் அமல்.. இனி ரூ.25000 லிமிட்.. பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு இது லிமிட்!

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல் செய்யப்பட இருக்கின்றன. பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய புதிய லிமிட் வர இருக்கிறது. மேலும், ப்ரீபெய்ட் கார்டுகள் அல்லது வாலெட்டுகள் வழியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் விதிகளும் லிமிட் மாற்றப்பட்டு இருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது ப்ரீபெய்ட் கார்டுகள் அல்லது வாலெட்டுகள் வழியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும் ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) தொடர்பான விதிகளை மாற்றி இருக்கிறது. ஒரு மாதத்துக்கு ரூ.2 லட்சம் லிமிட் மற்றும் தனி நபர்களுக்கு பரிமாற்றம் செய்தால் ரூ.25,000 லிமிட் விதிக்கப்பட உள்ளது.

புது ரூல்ஸ்.. மே.1 முதல் அமல்.. இனி ரூ.25000 லிமிட்.. என்ன மாறகிறது?

இந்த புதிய ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் விதிகள் (Prepaid Payment Instrument Rules) அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, பேங்க் அக்கவுண்ட் வழியாக டிஜிட்டல் பேமெண்ட்களை செய்யும் ஒட்டுமொத்த கஸ்டமர்களும் இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பிபிஐ ஆனது வாலெட் போல பரிவர்த்தனைகளை செய்ய கிடைக்கிறது.

அதாவது, பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து குறிப்பிட்ட தொகையை வாலெட் அல்லது ப்ரீபெய்ட் கார்டுகளில் கிரெடிட் செய்து வைத்து கொள்ளலாம். இதில் இருந்து பரிமாற்றம் செய்தால், பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் செல்லாமல், வாலெட்டில் இருந்து மட்டுமே செல்லும். ஆகவே, பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்பும்போது, இதை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் லிமிட்டில் இந்திய ரிசர்வ் வங்கி ஆனது மாற்றங்களை செய்துள்ளது. ஆகவே, ஒரு மாதத்தில் முழுமையான கேஒய்சி (KYC) செய்யப்பட்ட ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் வாலெட் அல்லது கார்டுக்கு புதிய மாதாந்திர லிமிட் வருகிறது.

புது ரூல்ஸ்.. மே.1 முதல் அமல்.. இனி ரூ.25000 லிமிட்.. என்ன மாறகிறது?

ஆகவே, மாதத்துக்கு தனி நபர் மற்றும் வணிக பரிவர்த்தனைகளுக்கு சேர்ந்து ரூ.2 லட்சம் லிமிட்டாக இருக்கிறது. இதற்கு மேல் ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் லிமிட் செல்ல கூடாது. அதேபோல தனி நபர்களுக்கு ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் வாலெட்டில் இருந்து பரிவர்த்தனை செய்தால் ரூ.25,000 லிமிட் இருக்கிறது.

இது ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் வாலெட்டில் இருந்து மற்றொரு வாலெட்டுக்கோ அல்லது பேங்க் அக்கவுண்ட்டுக்கோ பரிமாற்றம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். இது முழுமையான கேஒய்சி செய்யப்பட்ட ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் வாலெட்களுக்கு பொருந்தும். மினிமம் கேஒய்சி செய்யப்பட்டால், லிமிட் குறையும்.

அதாவது, ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் சேவைகளை கொடுக்கும் நிறுவனங்கள் மினிமம் கேஒய்சி செய்யப்பட்ட வாலெட்களில் இருந்து செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10,000 லிமிட்டை மட்டுமே கொடுக்க வேண்டும். டெபிட் செய்யப்படும் தொகையும் ரூ.10,000 லிமிட்டில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த வாலெட்டை முழுமையான கேஒய்சி செய்து கொள்ளலாம்.

இப்படி செய்தால், லிமிட் அதிகரிக்கப்படும். இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இப்போது, மே 1ஆம் தேதி முதல் அமலுக்க வர இருக்கும் இருக்கும் விதிகளை பார்க்கலாம். இதில் பேங்க் கஸ்டமர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும்போது டூ பேக்டர் அங்கீகாரம் வர இருக்கிறது. ஆகவே, ஓடிபி மட்டுமல்லாமல், கூடுதலாக ஒரு அங்கீகாரம் கொடுக்கப்படும்.

இது ஓடிபி வழியாக செய்யப்படும் ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். ஏடிஎம்களில் பணத்தை எடுக்கும்போது, டெபிட் கார்டு மற்றும் யுபிஐ ஆகிய 2 வழிமுறைகள் இருக்கின்றன. இதில் யுபிஐ வழிமுறையானது, ஏடிஎம் லிமிட்டில் சேர்க்கப்படாமல் இருந்தது. இனிமேல் சேர்க்கப்பட இருக்கிறது. ஆகவே, கூடுதலாக எடுத்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.

இது பேங்குக்களுக்கு பேங்க் மாறும். ஏற்கனவே, எச்டிஎப்சி பேங்க் இந்த விதிகளை அமலுக்கு கொண்டுவந்துவிட்டது. மற்ற பேங்குகளும் கொண்டுவர இருக்கிறது. மேலும், மே 1ஆம் தேதியில் இருந்து பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் கஸ்டமர்கள் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்குள் பான் விவரங்கள் இல்லாமல், டெபாசிட் செய்யலாம் மற்றும் பணத்தை எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
New PPI Rules From RBI PAN Card Rules From May 1 2026 Bank Account Holders Need To Know This
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X