பிளாஸ்டிக் குப்பைக்கு ஆப்பு.! கண்ணனுக்கு தெரியாம மென்னு தின்றுவிடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு.!
இதுவரை எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. ஆனால், இப்படி ஒரு விசித்திரமான, நம்ப முடியாத ஒரு படைப்பை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை மக்களே.! அப்படி என்னப்பா கண்டுபிடிப்புனு கேட்கிறீர்களா? வாங்க சொல்கிறோம்.
பூமியில் மக்கள் ஜனத்தொகை ஆண்டுக்கு-ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. எவ்வளவுக்கு வேகமாக 'இது' அதிகரிக்கிறதோ, அதை விட வேகமாகப் பூமியில் (Earth) சேரும் கழிவுகளின் (Waste) அளவும் எவரெஸ்ட் மலைப் (Everest Hill) போலப் பெருகிக் கொண்டே போகிறது. இவற்றில் சில குப்பைகள் சில பல ஆண்டுகளில் மங்கிவிடும் தன்மை கொண்டவையாக இருக்கிறது. ஆனால், பூமியின் ஆயுளை அடியோடு உறிஞ்சிக் குடிக்கும் அசுரனாகத் திகழ்வது தான் பிளாஸ்டிக் (Plastic) குப்பைகள்.

பூமியின் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று செமிக்கப் போகும் பாக்டீரியாக்கள்.!
பூமியின் உயிரைக் கொல்லும் நஞ்சாக விஞ்ஞானிகள் இந்த பிளாஸ்டிக்கை பார்க்கிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகள் (Plastic wastes) சாமானியமாக மக்கிப் போவதில்லை. இவற்றை மறுசுழற்சி (Recycling plastic) செய்ய பல நாடுகளில் திட்டம் இருந்தாலும், பிளாஸ்டிக் கழிவுகளை அடியோடு ஒழிக்கவே விஞ்ஞானிகள் (Scientists) மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, இப்போது பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் (Plastics on sea) கூட கலந்துவிட்டது, ஏன் நமது உணவிலும் கூட மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் (Micro plastic wastes on human food) கலந்துவிட்டது என்பது தான் வேதனையே.
இப்படி பூமி முழுக்க பறந்து, விரிந்து, பாதிப்பை ஏற்படுத்தி வரும் பிளாஸ்டிக் குப்பைகளை தின்று செமிக்கும் புதிய வகை என்சைம்களை (New Plastic Eating Bacteria) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். எது பிளாஸ்டிக்கை உண்டு ஜீரணம் செய்யும் என்சைம்களா (Plastic eating enzymes)? என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேள்வி கேட்கலாம். ஆனால், உண்மையில் இப்படியான ஒரு என்சைம் வகையைத் தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பிளாஸ்டிக்கை உணவாக உண்டு செமித்துவிடும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பை விட வேகமாக பிளாஸ்டிக்கை உண்ணுகிறதா இந்த என்சைம்கள்?
கடந்த சில ஆண்டுகளாக PET போன்ற பொதுவான பிளாஸ்டிக்குகளை அழிக்கும் என்சைம்களை (PET) நமது விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இருப்பினும், இந்த செயல்முறையால் பின்தங்கியிருக்கும் முக்கிய பிளாஸ்டிக் கட்டுமானத் தொகுதிகளில் ஒன்றை உடைக்கக்கூடிய புதிய வகை என்சைம் ஒன்றை இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நியூ அட்லஸால் முதலில் அறிவிக்கப்பட்ட புதிய என்சைம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பானில் முதன்முதலில் அறிமுகமானது.
இது உண்மையில் ஒரு பாக்டீரியாவை (Bacteria) அடிப்படையாகக் கொண்டது. இது PET பிளாஸ்டிக்களை உணவாக உண்ணும் விதம் அதிக பசியைக் கொண்டது. சில வாரங்களில் இது பிளாஸ்டிக்கை சிதைத்து அழித்துவிடுகிறது. இது பின்னர் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் PETase என்று அழைக்கப்பட்டது. பின்னர், MHETase என அழைக்கப்படும் மற்றொரு மேம்படுத்தப்பட்ட என்சைம் (Upgraded plastic eating bacteria enzyme) வகையாக உருவாக்கப்பட்டுப் பெயர் மாற்றப்பட்டது.

இந்த பாக்டீரியாக்கள் பூமியை பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து காப்பாற்றுமா?
இது PET பிளாஸ்டிக்கை ஆறு மடங்கு வேகமாக உண்ணும் திறன் கொண்ட சூப்பர் என்சைமாக (Super enzymes to eat plastics) இது உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், இந்த ஆராய்ச்சி நின்றுவிடவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் இதை விட இன்னும் வேகமாக பிளாஸ்டிக்கை அழிக்கும் என்சைம்களை விஞ்ஞானிகள் உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கண்டுபிடிப்பு மூலம், உலகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நம்மால் பூமியில் இருந்து அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கொஞ்சம் யோசித்து பாருங்கள், தண்ணீரில் விழுந்த பஞ்சுமிட்டாய் (cotton candy) போல, பிளாஸ்டிக்கை என்சைம்கள் வேகமாக உண்ணும் காட்சியை நீங்கள் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில், மிகவும் சக்தி வாய்ந்த என்சைமை விஞ்ஞானிகள் உருவாக்கினால், இந்த கற்பனை காட்சியை நாம் நேரில் காண வாய்ப்புள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதைக் கீழே கமெண்டில் பதிவிடுங்கள். மற்றவர்களுடன் இந்த பதிவை பகிர்ந்து, அவர்களின் கருத்தையும் கேளுங்கள். பூமியை பாதுகாக்க வேறு ஏதேனும் வினோதமான ஐடியா உங்களிடம் இருந்தால், அதையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








