Home
News

மே 14.. ஆண்ட்ராய்டு போன் வைத்து இருக்கும் ஒவ்வொரு யூசருக்கும் மிக முக்கியமான நாள்.. ஏன்னா?

கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர ஐ/ஓ டெவலப்பர் மாநாடானது மே 14 அன்று தொடங்குகிறது. இந்நிகழ்வின் மிக முக்கியமான வெளியீடாக ஆண்ட்ராய்டு 15 அப்டேட் இருக்கும். கூகுளின் இந்த லேட்டஸ்ட் ஓஎஸ் ஆனது ஏஐ அம்சங்களில் அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியான புதிய ஆண்ட்ராய்டு 15 ஆப்ரேட்டிங் சிஸ்டமும் (Android 15 OS), அதன் வழியிலான புதிய அம்சங்களும் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் வரும் என்றாலும் கூட, முதலில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு தான் வந்து சேரும். அதன் பின்னரே மற்ற ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும்.

மே 14.. ஆண்ட்ராய்டு போன் யூசரக்ளுக்கு மிக முக்கியமான நாள்.. ஏன்னா?

அப்படியாக, கூகுளின் ஆண்ட்ராய்டு டெவலப்பர் பக்கத்தின்படி, என்னென்ன கூகுள் பிக்சல் டிவைஸ்களுக்கு ஆண்ட்ராய்டு 15 பீட்டா அப்டேட் கிடைக்கும்? ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ன் முக்கிய அம்சங்கள் என்னென்ன? கூகுளின் 2024 ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டில் (Google I/O Developer Conference 2024) ஏதேனும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் வெளியாகுமா? இதோ விவரங்கள்:

என்னென்ன பிக்சல் டிவைஸ்களுக்கு ஆண்ட்ராய்டு 15 பீட்டா அப்டேட் கிடைக்கும்?
கூகுள் பிக்சல் 6
கூகுள் பிக்சல் 6 ப்ரோ
கூகுள் பிக்சல் 6ஏ
கூகுள் பிக்சல் 7
கூகுள் பிக்சல் 7 ப்ரோ
கூகுள் பிக்சல் 7ஏ
கூகுள் பிக்சல் ஃபோல்ட்
கூகுள் பிக்சல் டேப்லெட்
கூகுள் பிக்சல் 8
கூகுள்பிக்சல் 8 ப்ரோ

மே 14.. ஆண்ட்ராய்டு போன் யூசரக்ளுக்கு மிக முக்கியமான நாள்.. ஏன்னா?

அதாவது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் ஆனது கூகுள் நிறுவனத்தின் டென்சர் சிப்களால் இயக்கப்படும் அனைத்து பிக்சல் டிவைஸ்களுக்கும் கிடைக்கும். இது ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த பயோனிக் சிப்செட்டை போல சக்திவாய்ந்ததாக இல்லாவிட்டாலும் கூட, கூகுளின் டென்சர் சிப்கள் ஆனது ஏஐ மற்றும் எம்எல் பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆண்ட்ராய்டு 15 வழியாக என்னென்ன புதிய அம்சங்கள் கிடைக்கும்? முழுமையாக நிரப்பப்படாத ஸ்க்ரீனில் இருக்கும் ஆப்கள் ஆனது ஃபுல் ஸ்க்ரீனையும் நிரப்பும் நோக்கத்தின் கீழ் தானாகவே அளவை மாற்றும் திறனை ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கொண்டு வந்துள்ளது. மேலும் நீண்ட காலமாக கோரப்படும் அம்சங்களில் ஒன்றான - ஆப் ஆர்க்கைவிங் அன்ட் அன்ஆர்க்கைவிங் (App Archiving and Unarchiving) ஆதரவும் ஆண்ட்ராய்டு 15 வழியாக கொண்டுவரப்பட்டுள்ளது.

மே 14.. ஆண்ட்ராய்டு போன் யூசரக்ளுக்கு மிக முக்கியமான நாள்.. ஏன்னா?

ஆப் ஆர்க்கைவிங் அன்ட் அன்ஆர்க்கைவிங் ஆதரவானது வாட்ஸ்அப்பில் உள்ள ஆர்க்கைவ் அன்ட் அன்ஆர்க்கைவ் அம்சத்தை போலவே தான் செயல்படும். தேவையில்லாத ஆப்களை ஒதுக்கி.. மற்ற ஆப்களுக்கு தேவையான இடத்தை கொடுக்கும் மற்றும் தேவையான நேரத்தில் குறிப்பிட்ட ஆப்களை அணுக, ஒரு எளிமையான பாதையை உருவாக்கி கொடுக்கும்.

இதுதவிர்த்து ஆண்டராய்டு 15 வழியாக மேம்படுத்தப்பட்ட பிரெய்லி ஆதரவும் (Improved Braille Support) கொண்டுவரப்பட்டுள்ளது. கூடவே செல்லுலார் நெட்வொர்க்கிற்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் (Cellular Network Security Controls), வைஃபை நெட்வொர்க்கிற்கான டிவைஸ் அடையாள மேலாண்மை (Wi-Fi Network Device Identification Management) போன்ற மேம்பாடுகளை ஆண்ட்ராய்டு 15 கொண்டுவந்துள்ளது.

எல்லாவற்றை விட முக்கியமான ஆண்ட்ராய்டு 15 ஆனது டீஃபால்ட் வாலட் ஆப்பையும் (Default Wallet App) கொண்டுவருகிறது. அதாவது டீஃபால்ட் போன் கால் ஆப், டீஃபால்ட் மெசேஜிங் ஆப்பை போல.. பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வாலட் ஆப்பை டீஃபால்ட் ஆப் ஆக செட் செய்துகொள்ள முடியும்.

கவனிக்கப்பட வேண்டிய பிரத்யேக அம்சத்தை பொறுத்தவரை.. பிக்சல் வெதர் விட்ஜெட்டுகளை (Pixel Weather Widgets) சொல்லலாம். பெயர் குறிப்பிடுவது போலவே இது பிக்சல் போன்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதன்கீழ் பிக்சல் போன் பயனர்கள் புதிய பிக்சல் வெதர் விட்ஜெட்டுகளுக்கான அணுகலை பெறுவார்கள்.

கூகுளின் 2024 ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டில் ஏதேனும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் வெளியாகுமா? இதோ விவரங்கள்: ஆம்! இந்நிகழ்வில் 7 வருட சாஃப்ட்வேர் ஆதரவுடன் கூகுள் பிக்சல் 8ஏ அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் பழைய கூகுள் பிக்சல்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 3 வருட சாஃப்ட்வேர் ஆதரவை மட்டுமே பெறுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Pixel 8a Android 15 AI Features Eligible Devices 2024 Google IO Developer Conference on May 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X