இந்தியக் கொடியை மாற்றிப் பறக்கவிட்ட சியோமி.! சிக்கலில் பிளாக் ஷார்க் 2.!

|

சியோமி நிறுவனம் இந்தியச் சந்தையில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை நேற்று அறிமுகம் செய்தது. பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனின் அறிமுக விளம்பரமாக சியோமி அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்ட பதிவிற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிக்கலில் சிக்கிய பிளாக் ஷார்க் 2

சிக்கலில் சிக்கிய பிளாக் ஷார்க் 2

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அதிக வரவேற்பு பெற்றது, அதனைத் தொடர்ந்து இந்தியச் சந்தையில், இந்த ஸ்மார்ட்போன் நேற்று வெளியிடப்பட்டது. புது ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்காக அந்நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில் இந்தியக் கொடியின் படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

வீணாய் போன நமஸ்தே இந்தியா விளம்பரம்

வீணாய் போன நமஸ்தே இந்தியா விளம்பரம்

இந்த பதிவில் "பிளாக் ஷார்க் எனக் குறிப்பிட்டு நமஸ்தே இந்தியா" என்ற வாக்கியத்துடன் இந்தியாவின் தேசிய கோடி வண்ணமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் தாய்நாடு கொடியின் மூன்று நிறங்களையும் தலை கீழாகப் விளம்பரத்தில் பயன்படுத்தி இருப்பது தான்.

நெட்டிசன்ஸ்கள் கோபம்

நெட்டிசன்ஸ்கள் கோபம்

தாய்நாடு கோடியை மேலும் கீழுமாக மாற்றி அவமானம் செய்துவிட்டதாக நெட்டிசன்ஸ்கள் சியோமி நிறுவனத்தைக் கொடூரமாக விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்களில் இந்த படங்களை ஷேர் செய்து எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

பதிவை நீக்கக் கோரி கருத்து

பதிவை நீக்கக் கோரி கருத்து

அதுமட்டுமின்றி நிறுவனம் பதிவிட்டுள்ள அந்த பதிவை உடனே நீக்கக் கோரியும், தேசிய கோடியை அவமதித்ததற்கு மன்னிப்பு கேட்க கூறியும் பலர் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சியோமி உடனே இதற்குத் தீர்வு காண வேண்டும்

சியோமி உடனே இதற்குத் தீர்வு காண வேண்டும்

இந்த தவறான பதிவை அந்நிறுவனம் பதிவிட்டு இரண்டு நாட்கள் ஆகிய நிலையில் இன்னும் அந்த டிவிட்டர் போஸ்ட், அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து நீக்கப்படாமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சியோமி நிறுவனம் முடிந்த வரையில் உடனே இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New Phone Brand Launches In India Angry Fans Find It Disrespected Indian Flag Online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X