புது ரூல்ஸ்.. பிஎப் பணத்தை எடுப்பதில் திடீர் மாற்றங்கள் அமல்.. இனி 90% வரை.. ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம்
இபிஎப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (Employees Provident Fund Organization) ஆனது அதன் புகார் அமைப்பில் புகார் "7 நாட்களுக்குள்" என்கிற புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ள நிலையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெறும் விதிகளை (EPF Withdrawal Rules) திருத்தியுள்ளது.
1952 ஆம் ஆண்டு இபிஎப் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரா 68-பிடி இன் (Para 68-BD of the EPF Scheme) கீழ், இபிஎப்ஓ மெம்பர்கள் இப்போது ஒரு குடியிருப்பு சொத்தை வாங்குதல், கட்டுமானம் அல்லது இஎம்ஐ செலுத்துதலுக்காக தங்கள் பிஎப் கார்பஸில் இருந்து 90% வரை திரும்ப பெறலாம். மேலும் இந்த நடவடிக்கை - அக்கவுண்ட் திறக்கப்பட்ட தேதியிலிருந்து 5 ஆண்டுகள் என்கிற தகுதி காலத்தை 3 ஆண்டுகளாகவும் குறைக்கிறது.

முன்னதாக, வீட்டுவசதிக்கான "பிஎப் வித்டிராவல்" செயல்முறை (Housing withdrawal Process) ஆனது 36 மாத மதிப்புள்ள பணியாளர் மற்றும் முதலாளி பங்களிப்புகள் மற்றும் வட்டியுடன் (எது குறைவாக உள்ளதோ அது) மற்றும் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான இபிஎப் உறுப்பினர் பதவிக்கு பிறகு மட்டுமே நிகழ்த்தப்படும் என்று வரையறுக்கப்பட்டது. இப்போது அவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் முந்தைய விதிகள், வீட்டுவசதி திட்டங்களில் ஏற்கனவே சேர்ந்த உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தின. ஆனால் புதிய விதிகள் ஆனது இப்போது சந்தாதாரர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. அதேசமயம் இந்த ஹவுசிங் வித்ட்ராவலை பெறுதவதை வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என்கிற கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளன.
இபிஎ திரும்பப் பெறுதலில் அமலுக்கு வந்துள்ள மற்ற முக்கிய மாற்றங்கள் (Additional Major Changes to EPF Withdrawal): ஹவுசிங் வித்ட்ராவலுடன் சேர்த்து இபிஎப்ஓ ஆனது பிஎப் திரும்பப் பெறுதலை ஒழுங்குபடுத்தவும், விரைவுபடுத்தவும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்து உள்ளது:
1. யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் (ATM) மூலம் உடனடி வித்ட்ராவல்கள்: ஜூன் 2025 முதல், அவசரத் தேவைகளுக்காக உறுப்பினர்கள் உடனடியாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்.
2. ஆட்டோ செட்டில்மென்ட் லிமிட் (Auto Settlement Limit) உயர்த்தப்பட்டது: ஆட்டோ செட்டில்மென்ட் லிமிட் ஆனது ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது
3. எளிமைப்படுத்தப்பட்ட க்ளைம் செயல்முறை (Claim Process): சரிபார்ப்பு அளவுருக்களின் எண்ணிக்கை 27 இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது 95% உரிமைகோரல்கள் 3 - 4 நாட்களுக்குள் தீர்க்கப்படுகின்றன.
4. வாழ்க்கைத் தேவைகளுக்கான எளிதான வித்ட்ராவல்கள் (Easier Withdrawals for Life Needs): கல்வி, திருமணம் மற்றும் மருத்துவம் தொடர்பான பணம் எடுப்பதற்கான செயல்முறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன, இது ஊழியர்களுக்கு நிதி பணப்புழக்கத்தை அதிகரிக்கிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க முன்னரே குறிப்பிட்டபடி இபிஎப்ஓ ஆனது அதன் குறை தீர்க்கும் முறையை மேம்படுத்தவும், அதற்கான தொடர்பு வழிகளை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த உத்தியின் ஒரு பகுதியாக, "எந்தவொரு குறை அல்லது குறை தொடர்பான ஆவணமும் எந்தவொரு அதிகாரியின் மேசையிலும் ஏழு வேலை நாட்களுக்கு மேல் கவனிக்கப்படாமல் இருக்கக்கூடாது" என்பதை இபிஎப்ஓ உறுதி செய்ய விரும்புகிறது.
இதன்மூலம் தனது அலுவலகங்களில் குறை தீர்க்கும் முறையை மேம்படுத்த முடியும் என்றும், பங்குதாரர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும் என்றும் இபிஎப்ஓ நம்புகிறது. பிராந்திய அலுவலகங்களில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரிகள் (பிஆர்ஓ-க்கள்) சரியான நேரத்தில், திறமையான மற்றும் பயனுள்ள உறுப்பினர் சேவைகளை வழங்குவதன் மூலம் பங்குதாரர்களின் குறைகளை குறைக்க முடியும் என்றும் இபிஎப்ஓ நம்புகிறது.


Click it and Unblock the Notifications








