Home
News

வந்தது மாற்றம்.. இனி Google Pay, Paytm வழியாக பணம் அனுப்ப புதிய முறை.. மொபைல் நம்பர், இமெயில் ஐடிக்கு குட்பை!

இந்தியாவில் யுபிஐ (UPI) வழியாக பணம் செலுத்துவது என்பது மிகவும் சர்வ சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. மேலும் யுபிஐ பணப்பரிவர்த்தனை ஆனது நாளுக்கு நாள் இன்னும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் உடன் சேர்ந்து - யுபிஐ தொடர்பான ஆபத்தும் வளர்ந்து கொண்டே வருகிறது.

குறிப்பாக யுபிஐ ஐடிகள் (UPI IDs) தான் - அதிக அளவில் மோசடிகளில் சிக்குகிறது. இதை சரிசெய்யும் நோக்கத்தின் கீழ், கூகுள் பே (Google Pay) மற்றும் பேடிஎம் (Paytm) ஆகிய 2 நிறுவனங்களும் தனிப்பயனாக்கப்பட்ட யுபிஐ ஐடி-ஐ (Personalized UPI ID) உருவாக்க அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

வந்தது மாற்றம்.. இனி Google Pay, Paytm வழியாக பணம் அனுப்ப புதிய முறை!

நியூஸ்18-ன் சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் பே மற்றும் பேடிஎம் இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெர்சனலைஸ்டு ஐடி அம்சம் ஆனது யுபிஐ பயனர்களின் ப்ரைவஸியை மேலும் வலுப்படுத்தும். இது யுபிஐ பயனர்கள் பரிவர்த்தனைகளை செய்யும்போது தங்கள் மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடியை மறைக்க அனுமதிக்கும்.

அறிமுகமான நேரத்தில் இந்த அம்சம் - யெஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றை மட்டுமே ஆதரித்தது, ஆனால் கேஜெட்ஸ் 360-ன் சமீபத்திய அறிக்கை இது - எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) மற்றும் எஸ்பிஐ வங்கி (SBI) ஆகிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட யுபிஐ அக்கவுண்ட்களில் வேலை செய்கிறது; அதாவது இதன்கீழ் ஏற்கனவே உள்ள யுபிஐ ஐடிகளை மாற்ற முடிகிறது.

ஒரு பயனர் பேடிஎம் ஆப்பில் உள்ள அவருடைய யுபிஐ ஐடியை மாற்றிய உடன், மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடி ஆனது தனிப்பயன் எண்ணெழுத்து உரை (Custom alphanumeric text) கொண்டு மாற்றப்படும். அதை தொடர்ந்து யுபிஐ ஐடி ஆனது "@pt(உங்களுடைய வங்கி பெயர்)" ஆக இருக்கும்.

பேடிஎம் ஆப்பில் உள்ள இதே அம்சம் கூகுள் பே ஆப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த கட்டுரைய எழுதி முடிக்கும் நேரம் வரையிலாக, கூகுள் பே ஆப்பில் தனிப்பயனாக்கப்பட்ட ஐடிகளை பயன்படுத்துவதற்கான விருப்பத்தை நாங்கள் காணவில்லை.

பேடிஎம் ஆப்பில் தனிப்பயனாக்கப்பட்ட யுபிஐ ஐடியை எவ்வாறு பயன்படுத்துவது? நீங்கள் பேடிஎம் ஆப்பில் உள்ள உங்கள் மொபைல் நம்பரை பாதுகாக்கவும், பெர்சனலைஸ்டு யுபிஐ ஐடியை பயன்படுத்தவும் விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேடிஎம் ஆப்பை திறந்து, பின் கீழே உள்ள படிகளை அப்படியே பின்பற்றவும்.

1. பேடிஎம் ஆப்பின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள ப்ரொபைல் ஐகானை (Profile Icon) கிளிக் செய்யவும்
2. யுபிஐ மற்றும் பேமண்ட் செட்டிங்ஸ்-க்கு (UPI & Payment Settings) செல்லவும். யுபிஐ ஐடிக்கு அடுத்துள்ள வியூ (View) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
3. ட்ரை பெர்சனலைஸ்டு யுபிஐ ஐடி (Try Personalised UPI ID) என்கிற உரைக்கு மேலே உள்ள டெக்ஸ்ட் பாக்ஸ்-ஐ கிளிக் செய்யவும்

4 . நீங்கள் விரும்பும் ஐடியை டைப் செய்ய அல்லது பரிந்துரைக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
5. கன்ஃபிர்ம் (Confirm) என்பதை கிளிக் செய்யவும்
6. இப்போது உங்கள் யுபிஐ ஐடி வெற்றிகரமாக மாற்றப்பட்டு இருக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி கூகுள் பே ஆப்பில் இந்த தனிப்பயனாக்கப்பட்ட ஐடியை உருவாக்கம் விருப்பத்தை நாங்கள் இன்னும் காணவில்லை. இப்போதைக்கு யுபிஐ ஐடி-க்கான பக்கத்தை மட்டுமே அடைய முடிகிறது. அதை அடைவதற்கான செயல்முறை மிகவும் எளிதானது. முதலில் கூகுள் பே ஆப்பில் உள்ள உங்கள் ப்ரொபைல்-ஐ கிளிக் செய்யவும். பின் பேங்க் அக்கவுண்ட்-ஐ தேர்ந்தெடுக்கவும். உங்கள் பிரைமரி பேங்க்-ஐ கிளிக் செய்யவும். இப்போது யுபிஐ ஐடி தொடர்பான விருப்பங்கள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Personalised UPI ID in Paytm Google Pay Allow Users to Hide Phone number or email ID
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X