Home
News

ஆக.31 க்கு பிறகு Paytm UPI ஆப் வேலை செய்யாதா? தொடர்ந்து பணம் அனுப்ப இந்த 3 விஷயங்களில் 1-ஐ செய்யவும்!

பேடிஎம் யுபிஐ (Paytm UPI) ஆனது இனி கிடைக்காது என்று கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருந்து வந்த ஒரு சமீபத்திய அறிவிப்பு (Notification) ஆனது பேடிஎம் ஆப் பயனர்களிடையே பெரும் குழப்பம் மற்றும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ச்சியான கட்டளைகளை புதுப்பிப்பதற்கான (Updating Recurring Mandates) காலக்கெடுவானது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி என்பதால் கூகுள் பிளே ஸ்டோர் இந்த எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த புதிய விதி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஆக.31 க்கு பிறகு Paytm UPI ஆப் வேலை செய்யாதா?

கூகுள் பிளே வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் "ஆகஸ்ட் 31 அன்று, @PayTM UPI ஹேண்டில்கள் நிறுத்தப்படும், மேலும் கூகுள் பிளேவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேமண்ட் மோட் ஆக இருக்காது. இது இந்திய தேசிய கட்டணக் கழகங்களின் (National Payment Corporations of India - NCPI) அறிவுறுத்தல்களின்படி உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பேடிஎம் பயனர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேடிஎம் நிறுவனம் ஆகஸ்ட் 31 க்கு பிறகு பேடிஎம் வேலை செய்யாதா என்பது குறித்த குழப்பம் மற்றும் கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளது. பேடிஎம் இல் யுபிஐ வழியாக பணம் செலுத்தும்போது பயனர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்று கூறியுள்ளது.

மேலும் நுகர்வோர் மற்றும் வணிகர் பரிவர்த்தனைகள் (consumer and merchant transactions) இரண்டும் தடையின்றி நடக்கும் என்று பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. சந்தா பில்லிங் போன்ற தொடர்ச்சியான பேமண்ட்களுக்கு மட்டுமே கூகுள் பிளே குறிப்பிட்டுள்ள அப்பாட்ட நடைமுறைக்கு வரும் என்றும் பேடிஎம் தெளிவுபடுத்தி உள்ளது.

இதன் பொருள், ஒரு பயனர் யூட்யூப் பிரீமியம் (YouTube Premium) அல்லது கூகுள் ஒன் (Google One) ஸ்டோரேஜிற்காகவே அல்லது பேடிஎம் யுபிஐ மூலம் ஏதேனும் தொடர்ச்சியான தளத்திற்கு பணம் செலுத்தினால், அவர்கள் தங்கள் பழைய @paytm ஹேண்டிலை தங்கள் வங்கியுடன் இணைக்கப்பட்ட புதிய ஹேண்டுலுக்கு மாற்ற வேண்டும். அதாவது @pthdfc, @ptaxis, @ptyes அல்லது @ptsbi என்று மாற்ற வேண்டும்,

எடுத்துக்காட்டாக, ஒரு யுபிஐ ஐடி muthuraj@paytm ஆக இருந்தால், அது இப்போது muthuraj@pthdfc அல்லது muthuraj@ptsbi (அல்லது அந்தந்த வங்கியின் படி) அப்டேட் செய்யப்பட வேண்டும். இருப்பினும் இந்த அப்டேட் "வழக்கமாக நாம் செய்யும்" ஒன்-டைம் யுபிஐ பேமண்ட்களை பாதிக்காது; வழக்கம் போல் செயல்படும்

மூன்றாம் தரப்பு பயன்பாட்டு வழங்குநராக (Third Party Application Provider - TPAP) செயல்பட தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த மாற்றம் புதிய யுபிஐ UPI ஹேண்டில்களுக்கான இடம்பெயர்வின் ஒரு பகுதியாகும் என்று பேடிஎம் குறிப்பிட்டுள்ளது

ஆகஸ்ட் 31 க்குள் அல்லது செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு பின்னர் பேடிஎம் யுபிஐ பயனர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்? @paytm என்கிற யுபிஐ ஹேண்டில்கள் மூலம் தொடர்ச்சியான (மாதாந்திர பில்லிங்கிற்கு) பணம் செலுத்தும் பேடிஎம் யுபிஐ பயனர்கள் பின்வரும் விஷயங்களில் ஒன்றை செய்யலாம்:

1. தொடர்ச்சியான பணம் செலுத்துதல்களை, அவர்களின் வங்கியுடன் இணைக்கப்பட்ட புதிய பேடிஎம் யுபிஐ ஐடிக்கு அப்டேட் செய்யவும் (மேலே சொன்ன எடுத்துகாட்டின்படி).
2. கூகுள் பே (Google Pay) அல்லது போன்பே (PhonePe) போன்ற பிற யுபிஐ தளங்களில் பணம் செலுத்தவும்.
3. தொடர்ச்சியான பணம் செலுத்துதல்களுக்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு மாறவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Paytm UPI ID Rule Effect From September 1 What should Paytm UPI users do now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X