Home
News

UPI-க்கு வெச்சாச்சு.. இனி பணம் அனுப்புறது.. யாருக்கு அனுப்புறது.. ஸ்டேட்மெண்ட் இருக்கு.. Paytm-க்கு வந்தாச்சு!

பேங்க் அக்கவுண்ட் மூலம் பணம் அனுப்பும் ஒவ்வொரு கஸ்டமர்களும் யாருக்கு பணம் அனுப்புகிறார்கள்? எவ்வளவு பணம் அனுப்புகிறார்கள்? எந்த தேதியில் அனுப்புறார்கள்? போன்ற விவரங்களை பெற்று கொள்ள முடியும். இந்த சேவைக்காக பேங்குகள் கட்டணங்களும் விதிக்கின்றன. ஆனால், இப்போது யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளிலும் யாருக்கு? எவ்வளவு? எந்த தேதியில் பணம் போகிறது என்பது கண்காணிக்கப்பட இருக்கிறது. முதலில் பேடிஎம் (Paytm) மூலம் பணம் அனுப்பும் கஸ்டமர்களுக்கு இது அமலுக்கு வர இருக்கிறது. இதற்கு கட்டணங்கள் இருக்குமா? இதனால் என்ன மாறப்போகிறது? உள்ளிட்ட விவரங்கள் இதோ.

பேடிஎம் வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இனிமேல் யுபிஐ ஸ்டேட்மெண்ட் (UPI Statement) சேவை கொடுக்கப்பட இருக்கிறது. இந்த புது சேவை மூலம் யுபிஐ பரிவர்த்தனைகள் விவரங்களை (UPI Transaction History) கஸ்டமர்கள் தெரிந்து கொள்ள முடியும். இது ஏற்கனவே இருப்பது போல கிடையாது. பேங்க் மூலம் அனுப்பும் பணத்தை ஸ்டேட்மெண்ட்டாக டவுன்லோட் செய்து பார்க்க முடிகிறது.

UPI-க்கு வெச்சாச்சு.. பணம் அனுப்புறது.. யாருக்கு அனுப்புறது.. வருது!

இது குறிப்பிட்ட தேதி வரம்பு அல்லது நிதியாண்டு முழுவதுக்கும் பொருந்தும். இதில் யாருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது? எந்த அக்கவுண்ட்டுக்கு பணம் சென்றுள்ளது? எந்த தேதியில் சென்றுள்ளது? உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இதை டவுன்லோட் செய்து கொள்ள முடியும். இதைப் போலவே இனிமேல் பேடிஎம் ஆப் மூலம் செய்யும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கிடைக்க இருக்கிறது. இதிலும் டவுன்லோட் செய்யலாம்.

ஆகவே, பேடிஎம் கஸ்டமர்கள் பேங்க் ஆப்கள் மூலம் பரிவர்த்தனை ஸ்டேட்மெண்ட்டை பெற வேண்டியது அவசியம் இருக்காது. இந்த ஆப் மூலம் நேரடியாக பெற்று கொள்ளலாம். இந்த யுபிஐ ஸ்டேட்மெண்ட்டில் பரிவர்த்தனை தொகைகள், பெறுநரின் விவரங்கள், பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் டைம்ஸ்டாம்ப்புகள் உள்ளிட்டவை கொடுக்கப்படும். இது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பொருந்தும்.

இதை பிடிஎப் (PDF) அல்லது எக்ஸல் (Excel) டாக்குமெண்ட்களில் கஸ்டமர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்காக கட்டணங்கள் எதுவும் கிடையாது. ஆகவே, பேங்க் ஸ்டேட்மெண்ட்களே தேவை இருக்காது. அதே நேரத்தில் சிறிய தொகைக்காக பரிவர்த்தனை விவரங்களும் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இந்த பேடிஎம் யுபிஐ ஸ்டேட்மெண்ட் (Paytm UPI Statement) விவரங்களை எப்படி டவுன்லோட் செய்வது?

UPI-க்கு வெச்சாச்சு.. பணம் அனுப்புறது.. யாருக்கு அனுப்புறது.. வருது!

பேடிஎம் ஆப்-ஐ ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, பேலன்ஸ் மற்றும் ஹிஸ்டரி (Balance And History) டேப்புக்கு செல்லுங்கள். இப்போது, யுபிஐ ஸ்டேட்மெண்ட் டேப் தோன்றும். அதில் தேதி விவரங்கள் கேட்கப்படும். இதில் எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரையில் யுபிஐ ஸ்டேட்மெண்ட் தேவையோ அதை கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் அல்லது நிதியாண்டின் மொத்த பரிவர்த்தனைகளையும் பெற்று கொள்ளலாம்.

இதை பிடிஎப் அல்லது எக்ஸல் டாக்குமெண்ட்களாக பெற்று கொள்ளலாம். அதேபோல ஷேர் செய்து கொள்ளவும் முடியும். ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) விதிகளுக்கு உட்படாமல் பல்வேறு சிக்கல்களை பேடிஎம் சந்தித்தது. இதனால், அதன் கஸ்டமர்களும் பேடிஎம் ஆப்-ஐ விட்டு வேறு யுபிஐ ஆப்களுக்கு (UPI Apps) மாற தொடங்கினர்.

ஏனென்றால், ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய கஸ்டமர்களை சேர்க்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இப்போது, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா - என்பிசிஐ (National Payments Corporation of India - NCPI) ஆனது புதிய கஸ்டமர்களை சேர்க்க விதிகளுடன் அனுமதி வழங்கிவிட்டது. இதனால், பேடிஎம் மீண்டும் பழைய இடத்தை பிடிக்க இதுபோன்ற சேவைகளை கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Paytm Service For UPI Transactions Users Can Download UPI Statement Including Bank Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X