Home
News

Paytm பயன்படுத்தும் வணிகர்களுக்கு குட் நியூஸ்.. இனி ஈஸி வசூல்.. பாக்கெட்ல வச்சிக்கலாம்.. பாட்டு கேட்கலாம்!

பேடிஎம் க்யூஆர் கோட் ஸ்கேனரை (Paytm QR Code Scanner) பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறும் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.. பேடிஎம் நிறுவனமானது இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக இரண்டு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை.. பட்டித்தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆகிவிட பேடிஎம் நிறுவனமானது உங்கள் பாக்கெட்டில் அடங்கும்படியான.. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஏடிஎம் கார்டு அளவில் உள்ள புதிய பேடிஎம் பாக்கெட் சவுண்ட்பாக்ஸை (Paytm Pocket Soundbox) அறிமுகம் செய்துள்ளது.

Paytm பயன்படுத்தும் வணிகர்களுக்கு குட் நியூஸ்.. இனி ஈஸி வசூல்!

புதிய பேடிஎம் பாக்கெட் சவுண்ட்பாக்ஸ் ஆனது எப்போதுமே பயணத்தில் இருக்கும் அல்லது நடமாடிக்கொண்டே இருக்கும் வணிகர்களுக்கு உடனடி ஆடியோ பேமெண்ட் அறிவுறுத்தல்களை (Instant Audio Payment Alerts) வழங்கும். மறுகையில் உள்ள புதிய பேடிஎம் ம்யூசிக் சவுண்ட்பாக்ஸ் (Paytm Music Soundbox) ஆனது ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth Speaker) போல வேலைசெய்யும்.

அதாவது பேடிஎம் ம்யூசிக் சவுண்ட்பாக்ஸ் ஆனது, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி விட்டார்கள் என்கிற கட்டண அறிவிப்புகளை கொடுப்பதற்கு மட்டுமல்லாமல், ப்ளூடூத்தை பயன்படுத்தி உங்கள் மொபைல் போனுடன் இணையும் ஆதரவையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் இசையை அல்லது உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்க முடியும்.

பேடிஎம் பாக்கெட் சவுண்ட்பாக்ஸின் மற்ற அம்சங்கள்: 5 நாட்கள் பேட்டரி லைஃப் உடன் வரும் இந்த பேடிஎம் பாக்கெட் சவுண்ட்பாக்ஸ் ஆனது 4ஜி கெனெக்டிவிட்டி மற்றும் குறைவான வெளிச்சம் உள்ள பகுதிகளில் உதவக்கூடிய டார்ச் போன்றவைகளையும் தன்வசம் கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டப்படி, இது பயணத்தில் இருக்கும் வணிகர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கால்டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள், எலக்ட்ரீஷியன்கள், டெலிவரி ஏஜென்ட்கள், பார்க்கிங் போன்ற பெரிய இடங்களில் கட்டணம் வசூலிப்பவர்களுக்கு பேடிஎம் பாக்கெட் சவுண்ட்பாக்ஸ் ஆனது ஆகச்சிறந்த வசதியை வழங்கும்.

பேடிஎம் ம்யூசிக் சவுண்ட்பாக்ஸின் மற்ற அம்சங்கள்: 10 நாட்கள் என்கிற பேட்டரி லைஃப் உடன் வரும் பேடிஎம் ம்யூசிக் சவுண்ட்பாக்ஸ் ஆனது 4ஜி கனெக்டிவிட்டி மற்றும் 4W ஸ்பீக்கருடன் வருகிறது. இதில் வாய்ஸ் ஓவர்லே (Voice overlay) என்கிற அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இது பாடல் ஒலிக்கும் அதே நேரத்தில் கட்டண அறிவிப்புகளையும் துல்லியமாக கேட்க அனுமதிக்கும்.

நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் எக்கச்சக்கமான யுபிஐ பேமண்ட் நிறுவனங்கள் இருந்தாலும் கூட, பேடிஎம் தான் சவுண்ட்பாக்ஸை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாகும். இது யுபிஐ வழியிலான பணபரிமாற்றத்தின் மீது இருந்த நம்பிக்கையை ஒரே இரவில் உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது.

சவுண்ட்பாக்ஸ் மற்றும் பேடிஎம் கார்டு மெஷின்கள் போன்ற பேடிஎம் நிறுவனத்தின் கட்டண சாதனங்களுக்கு 79 லட்சம் வணிகர்கள் சந்தா செலுத்துகிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த 2 புதிய அறிமுகம் குறித்து பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா கூறுகையில், "மொபைல் பேமெண்ட்ஸ் மற்றும் க்யூஆர் தொழில்நுட்பத்தின் முன்னோடிகளான நாங்கள் பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் மூலம், கடைகளில் பணம் செலுத்துவதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம்"

"இரண்டு புதிய சாதனங்களான பேடிஎம் பாக்கெட் சவுண்ட்பாக்ஸ் மற்றும் பேடிஎம் மியூசிக் சவுண்ட்பாக்ஸ் மூலம் புதுமைகளை மேலும் மேம்படுத்தி வருகிறோம், இவை இரண்டும் வணிகர்களுக்கு மேலதிக வசதியை கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பேடிஎம் பாக்கெட் சவுண்ட்பாக்ஸ் ஆனது பயணத்தின்போது வணிகர்களுக்கு ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும்":

"அதே நேரத்தில் பேடிஎம் மியூசிக் சவுண்ட்பாக்ஸ் ஆனது கட்டண எச்சரிக்கைகளை அறிவிக்கும் அதே நேரத்தில் வாழ்க்கை முறை அனுபவத்தையும் சேர்க்கிறது. இந்த 2 புதிய சாதனங்களின் மூலம், இந்தியாவில் உள்ள சிறிய கடைகளுக்கான தொழில்நுட்பத்தை நாங்கள் தொடர்ந்து வழிநடத்துகிறோம்" என்றும் விஜய் சேகர் ஷர்மா கூறி உள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Paytm Pocket Soundbox and Paytm Music Soundbox Launched For Indian merchants Uses and Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X