PAN புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் டெபாசிட் லிமிட்.. டெபிட், கிரெடிட் கார்டு சமர்பிப்பு.. என்னென்ன மாறுச்சு?
இந்தியாவில் நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும், வரி ஏய்ப்பை தடுப்பதற்கும் பான் கார்டு (PAN Card) மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதில், வருமான வரித்துறை புதிய பான் கார்டு விதிமுறைகளை (New PAN Norms 2026) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகளின்படி, சில பரிவர்த்தனைகளுக்கான பான் கார்டு வரம்புகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் சில முக்கிய பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேங்க் அக்கவுண்ட் (Bank Account) வழியாக அன்றாடம் மேற்கொள்ளப்படும் எந்தெந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு விவரங்கள் கட்டாயம் தேவைப்படும் மற்றும் தேவைப்படாது என்பது குறித்த விரிவான விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பணப் பரிவர்த்தனைகள் (Cash Transactions): முன்பு பேங்குகள் அல்லது போஸ்ட் ஆபீஸ்களில் ஒரே நாளில் ரூ.50,000 மேல் ரொக்கமாகப் பணம் டெபாசிட் செய்ய பான் கார்டு தேவைப்பட்டது. ஆனால் புதிய விதிகளின்படி, இந்த தினசரி வரம்பு நீக்கப்பட்டு, ஆண்டு வரம்பாக மாற்றப்பட்டுள்ளது. இனி ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம்.
அதேபோல எடுக்கலாம். இதற்கு மேல் பேங்க் அக்கவுண்ட்டில் ரொக்க பணத்தை டெபாசிட் செய்தாலோ அல்லது ரூ.10 லட்சம் மேல் ரொக்கமாக பணத்தை எடுத்தாலோ பான் கார்டு விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். ஆகவே, ரூ.10 லட்சம் வரம்புக்கு மேல் பான் கார்டு இல்லாமல், அந்த பரிவர்த்தனையை செய்து கொள்ள முடியாது.
அசையா சொத்து வாங்குதல் (Immovable Property): வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் போது அல்லது விற்கும் போது, ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு இருந்தால் பான் கார்டு விவரங்கள் தேவைப்பட்டது. இந்த வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே, ரூ.20 லட்சம் மேல் மதிப்புள்ள சொத்து பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பான் நம்பரை குறிப்பிட வேண்டும்.
வாகனங்கள் வாங்குதல் (Motor Vehicles): புதிய விதிமுறைகளின்படி, இருசக்கர வாகனங்கள் உட்பட ரூ.5 லட்சம் மேல் மதிப்புள்ள எந்தவொரு மோட்டார் வாகனத்தை வாங்கும் போதும் பான் கார்டு விவரங்களை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்துக்கு உட்பட்ட பட்ஜெட் வாகனங்களுக்கு இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் மற்றும் உணவகக் கட்டணங்கள் (Hotel Bills): ஹோட்டல்கள், உணவகங்கள் அல்லது திருமண மண்டபங்களுக்கு ஒரே நேரத்தில் ரொக்கமாக பணம் செலுத்துவதற்கான வரம்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இனிமேல் ரூ.1 லட்சம் மேல் ரொக்கமாக பில் செலுத்தும் போது மட்டுமே பான் கார்டு விவரங்கள் கேட்கப்படும். இதற்கு குறைவாக தொகை இருந்தால் தேவைப்படாது.
காப்பீட்டுக் கொள்கைகள் (Insurance Policies): முன்னர் பிரீமியம் தொகையின் அடிப்படையில் பான் கார்டு கேட்கப்பட்டது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, நீங்கள் புதிய ஆயுள் காப்பீடு (Life Insurance) அல்லது எவ்வித காப்பீட்டு கொள்கையை எடுத்தாலும், அக்கவுண்ட் தொடங்கப்படும் ஆரம்ப கட்டத்திலேயே (Onboarding Stage) பான் கார்டு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், டெபிட் கார்டு (Debit Card), கிரெடிட் கார்டு (Credit Card) பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது பான் நம்பரை குறிப்பிடும் தேவை நீக்கப்பட்டுள்ளது.ஆகவே, புதிய பான் கார்டு விதிகள் பொதுமக்கள் தங்களின் அன்றாட நிதி செயல்பாடுகளில் எவ்வித தடையுமின்றி செயல்பட வரம்புகளை நீட்டிப்பு செய்து மட்டுமே உள்ளது.
இந்த புதிய பான் கார்டு வரம்புகளை (New PAN Card Limits) தெரிந்து கொண்டு அதற்கேற்ப தங்களது பண பரிவர்த்தனைகளை பேங்க் கஸ்டமர்கள் திட்டமிட்டு கொள்வது அவசியமாக இருக்கிறது. பான் கார்டு விதிகள் தொடர்ந்து மாறுதலுக்குட்பட்டதாகும். இதேபோல மற்ற பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு விவரங்களை சமர்ப்பிப்பதில் விதிகள் வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications