ஏப்.1 முதல் புது ரூல்ஸ்.. வங்கி கணக்கில் ரூ.50,000.. இனிமே இதுதான் புது லிமிட்.. புது PAN அட்டை ரூல்ஸ் அமல்!
பான் அட்டை (PAN Card) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண்ணை (Permanent Account Number) வைத்து வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்யும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கும் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறையில் இருந்து, ஏற்கனவே இருக்கும் பான் அட்டையை வைத்து பணம் அனுப்புவது வரையில் மாற்றங்கள் வருகின்றன.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணத்தை டெபாசிட் செய்வது & எடுப்பதில் (Cash Deposits & Withdrawals) தினசரிக்கு ரூ.50,000 லிமிட் இருக்கிறது. இதற்கு மேல் பான் அட்டை விவரங்களை கொடுக்க வேண்டும். சொத்து பரிவர்த்தனைக்கு (Property Transactions) ரூ.10 லட்சம் லிமிட் இருக்கிறது. ஹோட்டல் & ரெஸ்டாரன்ட் கட்டணங்களுக்கு (Hotel & Restaurant Bills) ரூ.50,000 லிமிட் இருக்கிறது.

இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்த ரூ.50,000 லிமிட் இருக்கிறது. இந்த லிமிட்களுக்கு மேல் செல்லும்போது கட்டாயம் பான் அட்டை விவரங்களை கொடுக்க வேண்டும். இந்த லிமிட்களிலேயே புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. மேலும், புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் அட்டை (Aadhaar Card) விவரங்கள் மட்டுமே கேட்கப்படுகிறது. இதிலும் புதிய ஆவணங்களை கொடுக்க விதிகள் வருகின்றன.
புது பரிவர்த்தனை லிமிட்: வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தாலும், பணத்தை எடுத்தாலும் ரூ.10 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை நடந்தால் மட்டுமே பான் அட்டை விவரங்களை கொடுக்க வேண்டும். தினசரிக்கு இருந்த ரூ.50,000 லிமிட் ஆனது, ஒரு நிதியாண்டுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையை அதிகரிக்கும்.
அசையா சொத்து பரிவர்த்தனைகள் வங்கி கணக்கு வழியாக செய்யும்போது ரூ.20 லட்சம் மேல் செல்லும்போது மட்டுமே பான் அட்டை விவரங்களை சமர்பித்தால் போதுமானதாகும். இப்போது இருக்கும் ரூ.10 லட்சம் லிமிட் அதிகரிக்கப்படுகிறது. இது சிறிய அளவிலான நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும். பாதுகாப்பாக பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
ஹோட்டல் & ரெஸ்டாரன்ட் கட்டணங்களை செலுத்தும்போது, ரூ.1 லட்சம் மேல் பரிவர்த்தனை சென்றால் மட்டுமே பான் அட்டை விவரங்களை சமர்பிக்க வேண்டும். இப்போது, இருக்கும் ரூ.50,000 லிமிட் அப்படியே இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்த பான் கார்டு விவரங்கள் கட்டாயமாக்கப்படுகிறது. ரூ.50,000 லிமிட் மட்டுமல்லாமல், எல்லா பிரீமியத்துக்கும் இது பொருந்துகிறது.
புது விண்ணப்ப ஆவணங்கள்: புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே போதும் வாங்கிவிடலாம். ஆதார் அட்டையில் இருக்கும் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் ஆகியவற்றின் அடிப்படையில் பான் அட்டை உடனடியாக வழங்கப்படுகிறது. ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு கூடுதலாக ஆவணங்கள் கேட்கப்பட இருக்கிறது.
பிறப்புச் சான்றிதழ், ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் மெட்ரிகுலேஷன் சர்டிபிகேட் அல்லது மார்க்ஸ்சீட் ஆகியவை ஆவணங்களை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த ஆவணங்கள் பிறந்த தேதியை உறுதி செய்ய கேட்கப்படுகிறது. பெயருக்கு வழக்கம்போல ஆதார் கார்டு கேட்கப்படும். ஆகவே, ஆதாருடன் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும்.
இந்த கூடுதல் ஆவணங்களில் பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும். ஆகவே, புதிய பான் அட்டையை விண்ணப்பிக்கும் அட்டைதாரர்களுக்கும் விதிகள் வருகின்றன. ஏற்கனவே, வங்கி கணக்குடன் பான் அட்டையை இணைத்து வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய விதிகள் (2026 April 1 New Rules) அமல் செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








