Home
News

புது PAN ரூல்ஸ்.. இனி ரூ.10000 கட்டணும்.. உங்க கார்டுல உடனே இதை பண்ணுங்க.. வந்தது புதிய மாற்றம்.. இல்லனா என்ன?

பான் (PAN) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் பான் 2.0 (PAN 2.0) மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது. இனிமேல் பான் கார்டு சேவைகள் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகளின்படி கிடைக்க இருக்கிறது. பான் கார்டு வைத்திப்போர், இனிமேலும் இதை செய்யாமல்விட்டால், ரூ.10000 அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள். அது என்ன கட்டாயம்? பான் கார்டுக்கு என்ன சிக்கல்? உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

சிசிஈஏ (CCEA) என்று அழைக்கப்படும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சரவை குழு ஆனது பான் 2.0 திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பான் கார்டு மட்டுமல்லாமல், டிஏஎன் (TAN) அல்லது டேக்ஸ் டிடெக்சன் மற்றும் கலெக்சன் அக்கவுண்ட் நம்பர்கள் (Tax Deduction & Collection Account Numbers) ஆகியவை டிஜிட்டல் மற்றும் கூடுதல் பாதுகாப்பாக மாற இருக்கின்றன.

புது PAN ரூல்ஸ்.. இனி ரூ.10000 கட்டணும்.. உங்க கார்டுல உடனே பண்ணுங்க!

இதில் பாதுகாப்பு விதிகள் மல்டிபிள் பான் கார்டு (Multiple PAN Card) வைத்திருப்போரை எளிதாக அடையாளம் காண இருக்கிறது. அதேபோல இறந்தவரின் பான் கார்டுகளை பயன்படுத்துவது, போலியாக பான் கார்டை வைத்திருப்பது போன்றவற்றையும் அடையாளம் காண இருக்கிறது. ஆகவே, இனிமேல் அபராதம் விதிப்பது உடனடியாக நடக்க போகிறது. இப்போது என்ன செய்ய வேண்டும்?

பான் கார்டு விதிகளின்படி ஒரு நபர் ஒரேவொரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஆனால், டிஜிட்டல் மயமாக்கலுக்கு முன்பு பான் கார்டுகளை பெற்றவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கின்றனர். இந்த கூடுதல் பான் கார்டுகள் போலியாகவே கணக்கில் கொள்ளப்படும். ஆகவே, இந்த பான் கார்டை அவர்கள் நீக்கம் செய்ய வேண்டும்.

அல்லது டீ-ஆக்டிவேட் செய்ய வேண்டும். இது கட்டயாமாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இதை பலர் செய்வது இல்லை. ஆனால், பான் 2.0 திட்டம் அவர்களை விடப்போவது இல்லை. போலி பான் கார்டுகளை கண்டறிய பான் 2.0 திட்டத்தில் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் அளவிலான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இது எளிதாக போலி பான் கார்டுகளை கண்டறியும்.

அதேபோல போலி பான் கார்டுகளின் பயன்பாட்டையும் குறைக்க இருப்பதாக நிதி அமைச்சகம் விளக்கி இருக்கிறது. ஆகவே, தெரியாமல்கூட போலி அல்லது ஒன்றுக்கும் மேற்பட பான் கார்டுகளை வைத்திருக்காதீர்கள். இப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகள் இருந்தால், அதை உடனடியாக சமர்பிப்பு செய்து விடுங்கள். இல்லாதபட்சத்தில் ரூ.10000 அபராதம் இருக்கும்.

எப்படி சமர்ப்பிப்பது? போலி அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால், அதை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறைகளில் சமர்பித்து டீ-ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இங்கு ஆன்லைன் மூலம் எப்படி சமர்ப்பிப்பது என்பதை தெரிந்து கொள்வோம். பான் கார்டு மாற்ற கோரிக்கை படிவம் (PAN Change Request Form) இதற்கு போதுமானது.

ஆகவே, வழக்கமாக வருமான வரித்துறை அல்லது என்எஸ்டிஎல் (NSDL) வெப்சைட்களுக்கு சென்று கொண்டு மேற்கண்ட படிவத்தை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது பான் விவரங்களை கொடுக்க வேண்டி இருக்கும். இது போலி அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளாக இருக்க வேண்டும். இதன் விவரங்களை கொடுத்த பிறகு சமர்பிப்பு கொடுங்கள்.

இப்போது, ஆதார் பேஸ்டு கேஒய்சி அல்லது ஈ-சைன் போன்ற வெரிபிகேஷன்களில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். இதை செய்து முடித்த பிறகு படிவத்தை நிரப்பும்போது அதில் பான் சமர்பிப்பு (PAN Surrender) பாக்ஸ் இடம்பெற்று இருக்கும். அதை மறக்காமல் கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, வேலை முடிந்துவிட்டது. இதர வேலைகளை செய்து விடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New PAN Card Rules For Multiple PAN Card Holders Pay Penalty Rs 10000 How To Surrender PAN Card
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X