இனி PASSPORT நம்பர் கட்டாயம்.. அமலுக்கு வந்தது புது PAN கார்டு ரூல்ஸ்.. யாரெல்லாம் கொடுக்க வேண்டும்?
சமீபத்தில் அமலுக்கு வந்த புதிய வருமான வரி விதிகளின் விளைவாக, இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வெளிநாடு வாழ் தனிநபர்கள், பான் கார்டு (PAN Card) என்கிற பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பரை (Permanent Account Number) பெறுவதற்கான தேவைகள் (Requirements) கடுமையாக்கப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட கட்டமைப்பானது, ஆவணங்கள் மற்றும் அடையாள சரிபார்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. வருமான வரி சட்டம், 2025-இன் கீழ் உள்ள ஒரு முக்கிய மாற்றம் என்னவென்றால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடுபவர்களாக செயல்படும் தனிநபர்கள், இனி பான் மற்றும் முகவரி தகவல் உள்ளிட்ட கூடுதல் தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டும்.

ஏப்ரல் 2026 முதல், அவர்கள் விண்ணப்பத்திற்காக படிவம் 96-ஐ (முன்னர் 49ஏஏ) பயன்படுத்த வேண்டும். இந்த மாற்றம், பான் விண்ணப்ப நடைமுறைகளில் செய்யப்படும் ஒரு பெரிய சீரமைப்பின் ஒரு பகுதியாகும். இதில், 49ஏ மற்றும் 49ஏஏ போன்ற பழைய படிவங்களுக்கு பதிலாக, வகை வாரியான படிவங்கள் (93-96) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதுப்பிக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, செயல்முறையை நெறிப்படுத்துவதையும், குறிப்பாக இந்தியாவில் நிதி தொடர்புகளை கொண்ட வெளிநாடு வாழ் தனிநபர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான இணக்க தேவைகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
புதிய விதிகளின் கீழ் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு என்னென்ன மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளது? திருத்தப்பட்ட பான் விண்ணப்பத்தில், வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான ஆவண தேவைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, வெளிநாட்டு நபர்கள் இப்போது தங்கள் சொந்த நாட்டினால் வழங்கப்பட்ட வரி அடையாள எண் (TIN) அல்லது அதற்கு இணையான எண்ணை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று எம்ஜிஏ-வின் நிர்வாக பங்குதாரர் கௌரவ் மகிஜானி தெரிவித்துள்ளார்.
"கூடுதலாக, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வரி அடையாள எண்ணை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் செல்லுபடியாகும் இந்திய முகவரியை கொண்ட ஒரு பிரதிநிதி மதிப்பீட்டாளர் / அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியையும் நியமிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியும் அடையாள சான்று மற்றும் முகவரி சான்றை சமர்ப்பிக்க வேண்டும்," என்று பான் விண்ணப்பத்திற்கான படிவம்-96-இல் உள்ள விவரங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.
இது முந்தைய கட்டமைப்பில் இருந்து ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவருகிறது, அதில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியை கட்டாயமாக நியமிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதன்மூலம், இது ஒரு கூடுதல் நடைமுறை அடுக்கை சேர்க்கப்பட்டுள்ளது. இதன்கீழ் வெளிநாட்டு நிறுவனம் இப்போது ஒரு பொருத்தமான பிரதிநிதியை அடையாளம் காண வேண்டும்; கூடவே அதற்கான அதிகாரப் பத்திரம் போன்ற ஆவணங்களை செயல்படுத்துவதும், உள் நிர்வாக செயல்முறைகளை கையாளவும் நேரிடும்.
வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு என்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன? புதிய விதிகளின் கீழ், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும் இதே போன்ற மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் (NRI) மற்றும் வசிப்பவர்களாக இருந்தும் சாதாரணமாக வசிப்பவர்கள் அல்லாதவர்கள் (RNOR) என தகுதிபெறும் இந்திய குடிமக்கள், இப்போது பான் விண்ணப்பத்தில் தங்களது கடவுச்சீட்டு எண்ணை (பாஸ்போர்ட் நம்பர்) கட்டாயமாக வழங்க வேண்டும் என்று மேற்குறிப்பிட்ட நிபுணர் கூறுகிறார்.
"வெளிநாட்டு இந்தியர் என்பது வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு மட்டும் உரியதல்ல. அது ஒரு வரி குடியிருப்பு அந்தஸ்து ஆகும். இந்திய வரி சட்டத்தின் கீழ் குடியிருப்பு அந்தஸ்து, இந்தியாவில் உடல் ரீதியாக இருப்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
இதேபோல், நீண்ட காலமாக வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு இந்திய குடிமகன் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியராக தகுதி பெறலாம், அதே நேரத்தில் இந்தியாவில் பணிபுரியும் ஒரு வெளிநாட்டவர், தங்கியிருக்கும் காலத்தை பொறுத்து வரி குடியிருப்பாளராக மாறக்கூடும் என்றும் அவர் கூறினார். எனவே, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு பொருந்தக்கூடிய பான் தேவைகள் வரி குடியிருப்பு அந்தஸ்தை அடிப்படையாக கொண்டவை மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான எந்தவொரு தொடர்பையும் பொருட்படுத்தாமல் பொருந்தும்.


Click it and Unblock the Notifications