Home
News

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. உங்க ஆதார் கார்டுல இதை பண்ணுங்க.. அப்புறம் கஷ்டம்.. இல்லனா, என்ன நடக்கும்?

பான் கார்டு (PAN Card) மற்றும் ஆதார் கார்டு (Aadhaar Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வர இருக்கும் புது பான் கார்டு விதி (New PAN Card Rule) பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத கார்டுகள் செயலிழப்பு செய்யப்பட இருக்கிறது.

ஆகவே, இதை புரிந்து கொண்டு உடனடியாக என்ன செய்ய வேண்டுமோ அதை முடிந்து விடுங்கள். இதுகுறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம். பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் - பான் (Permanent Account Number - PAN) கார்டு இல்லாமல் இப்போது இருக்க முடியாது. ஏனென்றால், பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் கட்டாயம் இதையும் வைத்திருக்க வேண்டி இருக்கிறது.

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. உங்க ஆதார் கார்டுல இத பண்ணுங்க.. இல்ல?

இல்லையென்றால், பரிவர்த்தனைகள் செய்ய முடியாமலும் போகலாம். இதனாலேயே அதை பயன்படுத்தவில்லை என்றாலும் வாங்கி வைத்து கொள்வது நல்லது என்று அனைவரும் நினைக்கின்றனர். அதுவும் உண்மைதான். இந்த பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க (PAN Card Aadhaar Card Link) வேண்டிய காலக்கெடுவானது டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

இதேபோல பல தேதிகள் கடைசி தேதியென்று வந்திருக்கிறது. ஆனால், பான் ஆதார் இணைப்புக்கு அபாராதம் மட்டுமல்லாமல், இப்போது செயலிழப்பு செய்யப்பட இருக்கின்றன. இதனால், பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல்கூட போக வாய்ப்புள்ளது. ஆகவே, உடனடியாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைத்துவிடுவது இப்போது தவிர்க்க முடியாததாகும்.

பான் கார்டு - ஆதார் கார்டு இணைப்பது எப்படி? உங்களது பான் கார்டை இதுவரையில் ஆதார் கார்டுடன் இணைக்காதபட்சத்தில் எளிய முறையில் அதை செய்து கொள்ளலாம். முதலில் இ-பில்லிங் போர்ட்டலான www.incometax.gov.in. வெப்சைட்டுக்கு சென்று கொள்ளுங்கள். இப்போது முகப்பு பகத்திலேயே குயிக் லிங்க்ஸ் டேப் இடம்பெற்று இருக்கிறது. அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இப்போது, லிங்க் ஆதார் டேப் தோன்றும் இதை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதை செய்தவுடன் உங்களது பான் கார்டு நம்பர் கேட்கப்படும். இதை சரியாக டைப் செய்து கொள்ளுங்கள். இதேபோல ஆதார் கார்டு எண் மற்றும் ஆதார் கார்டில் இருக்கும்படி உங்களது பெயரை டைப் செய்து கொடுங்கள். பிறகு ஓடிபி கேட்கப்படும். இதன் மூலம் இணைத்து கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் தாமதமாக பான்-ஆதார் இணைக்கும் நபராக இருந்தால், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். இதை முடித்த பிறகே உங்களது பான் மற்றும் ஆதார் கார்டு இணைத்து கொடுக்கப்படும். இதையும் செய்து முடித்துவிட்டால், 4 அல்லது 5 நாட்களில் உங்களது பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுவிடும். இப்போது பான்-ஆதார் லிங்க் ஸ்டேட்டஸ் பற்றி பார்க்கலாம்.

முதலில் சென்றதை போலவே www.incometax.gov.in. வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அதேபோல குயிக் லிங்க் டேப்பை கிளிக் செய்து ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதையடுத்து பான் ஆதார் லிங்ஸ் ஸ்டேட்டஸ் (PAN Aadhaar Link Status) டேப் தோன்றும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது ஆதார் விவரங்கள் கேட்கப்படும். இதை கொடுத்துவிட்டால் போதுமானதாகும்.

உங்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கபட்டுவிட்டால், ஏற்கனவே இணைக்கப்பட்டுவிட்டது என்று தகவல் தெரிவிக்கப்படும் அல்லது பான் மற்றும் ஆதார் விவரங்களில் ஏதாவது தவறு இருப்பின், பான் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படும். ஆகவே, உங்களது விவரங்களை மீண்டும் சாரிபார்த்து கொள்ளுங்கள். அதன்பிறகு மீண்டும் இணையுங்கள்.

இந்த ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைப்பு பொதுவானதாகும். வரி செலுத்துவோர் மட்டுமே இணைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், அனைவரும் காலகெடுவுக்குள் இணைக்காமல் இருந்தால், வரும் காலங்களில் பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் போகலாம். அதே நேரத்தில் அபராத தொகையையும் செலுத்த வேண்டி இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New PAN Card Rule From January 1 PAN Aadhaar Link Mandatory What Happens If Not Linked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X