புது ரூல்ஸ்.. ஜனவரி 1 முதல் அமல்.. உங்க PAN-க்கு இது கட்டாயம்.. இல்ல, ரூ.1000 அபராதம்.. மத்திய அரசு அதிரடி!
பான் (PAN) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) வைத்திருக்கும் பேங்க் கஸ்டமர்களுக்கு வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் அமலுக்கு வர இருக்கிறது. உங்களது பான் கார்டில் (PAN Card) இந்த டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதை செய்ய தவறினால், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
மத்திய அரசின் கீழ் இருக்கும் வருமான வரித்துறையானது (Income Tax Department) டிசம்பர் 31ஆம் தேதியை பான் ஆதார் இணைப்பை செய்து முடிக்க கடைசி நாளாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த கடைசி தேதிக்குள் இணைப்பை செய்ய தவறினால், பான் கார்டு செயலிழப்பு செய்யப்படுவதுடன் ரூ.1000 அபதார தொகையை செலுத்தி இணைக்க வேண்டி இருக்கும்.

இந்த அபதார தொகையானது, ஆதார் என்ரோல்மெண்ட் ஐடியை (Aadhaar Enrolment ID) பயன்படுத்தி 2024 அக்டோபர் 1 அல்லது அதற்கு முன்பு பான் எண்ணை பெற்ற குடிமக்களுக்கு பொருந்தும். பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது பிரிவு 139ஏஏ-இன் கீழ் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் எண்ணை ஆதருடன் இணைப்பை செய்து முடிக்க தவறாதீர்கள்.
இந்த ரூ.1000 அபராதம் மட்டும் விதிக்கப்படாது. பான் எண் செயலிழப்பு செய்யப்படுவதால், வரிமான வரியை செலுத்த முடியாது. பேங்க் அக்கவுண்ட் மூலம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. புதிதாக பேங்க் அக்கவுண்ட், டீமேட் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய முடியாது. வருமான வரியில் கிடைக்கும் ரீபண்ட்கள் கிடைக்க தாமதமாகும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 206ஏஏ மற்றும் 206சிசி-இன் கீழ் அதிக டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் விகிதங்களின்படி வரிகள் பிடித்தம் செய்யப்படும். ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பாக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டால், இதில் இருந்து தப்பித்து கொள்ளலாம். ஆன்லைனில் பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1. வருமான வரித்துறை (Income Tax Deparment) போர்டலுக்கு செல்லுங்கள். குயிக் லிங்க்ஸ் (Quick Links) விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
2.லிங்க் ஆதார் (Link Aadhaar) விருப்பம் தோன்றும். அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
3.உங்களது பான், ஆதார் நம்பரின் விவரங்கள் (Details) கேட்கப்படும். அதை தவறில்லாமல் கொடுங்கள்.
4.வேலிடேட் (Validate) பட்டன் தோன்றும். இதை கிளிப் செய்து கொள்ளுங்கள். இப்போது, ஆரம்ப கட்ட வெரிபிகேஷன் செய்யப்பட்டு, ஆதார் எண்ணுடன் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வந்த ஒடிபி (OTP) அனுப்பி வைக்கப்படும்.
5.ஓடிபி கேட்கப்படும், இடத்தில் அந்த நம்பரை கொடுத்துவிட்டால் போதும், உங்களது பான் ஆதார் இணைப்பு செயல்முறை முடிந்துவிட்டது.
உங்களது பான் எண் மற்றும் அதில் கொடுக்கப்பட்ட பெயர் மற்றும் மொபைல் நம்பர் விவரங்களும், ஆதார் எண் மற்றும் அதில் கொடுக்கப்பட்ட பெயர் மற்றும் மொபைல் நம்பர் விவரங்களும் சரிபார்க்கப்பட்டே இந்த இணைப்பு செய்து முடிக்கபடும். கொடுக்கப்பட்ட விவரங்கள் சரியாக இருந்தால், உடனடியாக இணைப்பு செய்யப்படும்.
இல்லாதபட்சத்தில் உங்களது படிவம் நிராகரிக்கப்பட்டும். ஆகவே, உங்களது, பான் விவரங்கள் மற்றும் ஆதார் விவரங்களை சரிபார்த்துவிட்டு, இணைக்கும் சேவையை பயன்படுத்த பரிந்துரை செய்கிறோம். நவம்பர் 15ஆம் தேதியில் இருந்து ஃபாஸ்டாக் இல்லாத கார், ஜீப் மற்றும் வேன்களுக்கு புதிய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.
ஆகவே, ஃபாஸ்டாக் இல்லாமல் டோல்கேட்டில் நுழையும்போது, வழக்கமான கட்டணத்தைவிட 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். இது கையில் ரொக்காமாக செலுத்துவோருக்கான கட்டணமாகும். யுபிஐ பரிவர்த்தனை மூலமாக டோல்கேட் கட்டணம் செலுத்தினால் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஃபாஸ்டாக் வழியாக கட்டணம் செலுத்த பரிந்துரை செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








