Home
News

புது PAN கார்டு.. இனி வயசு முக்கியமில்ல.. உங்க குழந்தைக்கும் பொருந்தும்.. இதை வாங்குறது எதுக்கு.. இல்லனா என்ன?

பான் 2.0 (PAN 2.0) திட்டத்தின் கீழ் பான் (PAN) என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) அடங்கிய புது கார்டை வாங்குவதற்கு ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களும் மும்முரம் காட்டிவருகின்றனர். ஆனால், குழந்தைகளுக்கான பான் கார்டு (Minors PAN Card) பற்றி இங்கு பலருக்கு தெரியவில்லை. இது எதற்காக வாங்க வேண்டி இருக்கிறது? எந்தெந்த குழந்தைகளுக்கு கட்டாயம் வாங்க வேண்டும்? அனைத்து குழந்தைகளுக்கும் வாங்க வேண்டுமா? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

பான் கார்டு வாங்குவதற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. ஏனென்றால், நாமினி மற்றும் லீகல் பரிவர்த்தனைகளுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பான் கார்டு அவசியமாக இருக்கிறது. அதாவது, வங்கி சேமிப்புகள், பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற நிதி சார்ந்த நடவடிக்கைகளின்போது, உங்களது குழந்தையை நாமினியாக சேர்க்க விரும்பினால், மைனர் பான் கார்டு கட்டாயமாகும்.

புது PAN கார்டு.. இனிமே வயசு முக்கியமில்ல.. குழந்தைக்கும் பொருந்தும்!

அதேபோல பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளின் பெயரில் நேரடியாக முதலீடு செய்ய திட்டமிட்டாலும், அவர்களும் மைனர் பான் கார்டு வாங்குவது கட்டாயமாகும். ஆகவே, உங்களது குழந்தைகளுக்கு 18 வயது ஆகும் முன்பு, அவர்களை நாமியாகவோ அல்லது நேரடி முதலீட்டுக்கு உட்படுத்த இருந்தாலோ நீங்கள் முன்கூட்டியே மைனர் பான் கார்டு வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

இந்த முதலீட்டு நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், மைனர்களின் வருமானமும் பான் கார்டு வாங்குவதை கட்டாயமாக்குகிறது. அதாவது, 18 வயதுக்கு முன்னதாகவே விளையாட்டு, நடிப்பு போன்றவற்றின் மூலம் சொந்தமாக வருமானம் பெறும் குழந்தைகளுக்கும் மைனர் பான் கார்டு கட்டாயமாகும். அதேபோல ஸ்காலர்ஷிப் மற்றும் அரசு திட்ட நிதி பெற்றாலும் இது பொருந்தும்.

இதுபோன்ற நிதி சார்ந்த நடவடிக்கைகளில் உங்களது குழந்தைகள் இருக்கும்பட்சத்தில், இப்போதே புது பான் கார்டை வாங்கி வைத்து கொள்வது நல்லது. இது அவர்களது எதிர்கால நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கும் முக்கிமயாகும். இப்போது, மைனர்களுக்கான பான் கார்டை ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

நீங்கள், வழக்கமான பான் கார்டு அப்ளை செய்ய பயன்படுத்தும் என்எஸ்டிஎல் (NSDL) வெப்சைட்டுக்கு சென்று கொள்ளுங்கள். புது பான் - இந்திய குடிமகன் டேப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, கீழே தள்ளினால், தனிநபர் (Individual) டேப் தோன்றும், இதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்டெப்பில் உங்களது குழந்தைகளின் விவரங்களை கொடுக்க வேண்டும்.

ஆகவே, எந்த தவறும் இல்லாதபடி பிறந்த தேதி, மொபைல் நம்பர் மற்றும் ஈ-மெயில் ஐடியை உள்ளிட்ட விவரங்களை கொடுத்து விடுங்கள். மொபைல் நம்பர் மற்றும் ஈ-மெயில் பெற்றோருடையதாகவும் இருக்கலாம். இதற்கு பிறகு உங்களது குழந்தையின் மாநிலம், மாவட்டம், இருப்பிடம், முகவரி போன்ற விவரங்களை கொடுக்க வேண்டி இருக்கும்.

இப்போது, கொடுக்கப்பட்ட விவரங்களுக்கான ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டிய ஸ்டெப். ஆகவே, நீங்கள் கொடுத்த விவரங்கள் அடங்கிய ஆவணப்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்து கொள்ளுங்கள். அதேபோல உங்களது குழந்தையின் புகைப்படம் அப்லோட் செய்ய வேண்டும். மேலும், பாதுகாவலர் அல்லது பெற்றோரின் கையொப்பமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதற்கு அடுத்து நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதை செய்து முடிந்த பிறகு உங்களது குழந்தைக்கான பான் கார்டு அப்ளிகேஷன் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் ஈமெயில் மூலம் தெரிவிக்கப்படும். அதன்பிறகு நீங்கள் புது பான் கார்டை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். ஆகவே, அனைத்து குழந்தைகளுக்கும் வாங்க வேண்டியதில்லை. ஆனால், பொருந்தக் கூடியது. நிதி சார்ந்த நடவடிக்கை இல்லாத போதும், நீங்கள் வாங்கு கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New PAN Card For Children Below 18 Years Nominee Legal Transactions How To Get Minors PAN Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X