Home
News

தரமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும் இந்நிறுவனம் கே-சீரிஸ்-இல் புதிய ஒப்போ கே10 மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஒப்போ கே10 மாடல் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் தெரவித்துள்ளது.. அதேபோல் இந்த சாதனம் இந்தியாவில் அதிக எதரிபார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தரமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன்.!

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் ஒப்போவின் புதிய கே10 ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கலாம். மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் இப்போது பார்ப்போம்.

தரமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன்.!

ஏஐ மேம்படுதப்பட்ட கேமரா அம்சங்கள்
உயர் ரக ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அதே கேமரா அம்சங்கள் இந்த ஒப்போ கே10 ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றுள்ளது. அதாவது தொழில்துறை-முன்னணி அம்சங்களைக் கொண்ட AI (ஏஐ) மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனில் 50எம்பி கேமரா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 50எம்பி உயர்
தெளிவுத்திறன் கொண்ட படங்களை பிடிக்க இந்த ஸ்மார்ட்போன் உதவும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஒரு டிஎஸ்எல்ஆர் கேமரா கொடுக்கும் அதே தெளிவுத்திறனை இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனும் கொடுக்கும்.

தரமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன்.!

அதேபோல் செல்பீ கேமரா பிரிவில் ஒப்போ நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்றே கூறலாம். அதன்படி இந்த ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் 16எம்பி ஏஐ செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும் இந்த செல்பீ கேமராவுடன் தனித்துவமான கேமரா அம்சங்களும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன்.!

மிகவும் எதிர்பார்த்த சிப்செட் வசதி
ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிபியு வசதி இருக்கிறது. மேலும் இது 6-நானோமீட்டர் செயல்முறை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக 8-கோர் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் இருக்கும் ரேம் தவிர விரிவாக்கக்கூடிய ரேம் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம்

தரமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங்தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட ஒப்போ நிறுவனம் பேட்டரி திறன் மற்றும் மின்னல் வேகமாக சார்ஜ்செய்யும் வசதி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது.மேலும் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்யம் ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் ஆனது 33W SUPERVOOCTM lightning பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வெளிவரும். குறிப்பாக இதன் உதவியுடன் மிக வேகமாக சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அதேபோல் ஒப்போ கே10 ஸ்மார்ட்போனில் உள்ள மின்னல்-வேக சார்ஜிங் வசதியான ஒரு தனி அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம். விரைவில் சார்ஜ் செய்து எளிமையாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வடிவமைப்புடன் அறிமுகமாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்

தரமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன்.!

இந்த புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போன் ஆனது புதிய வடிவமைப்புடன் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பளபளப்பான மற்றும் மேட் பூச்சு போன்ற அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் கவர்ச்சிகரமான வண்ணங்களுடன் கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஒப்போ கே10
ஸ்மார்ட்போனில் க்ளோ டிசைன் உள்ளதால் சிறந்த உயர் ரக ஸ்மார்ட்போன் அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் இந்த புதிய ஸமார்ட்போன் தனித்துவமான நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என ஒப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்போது அறிமுகம்
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ கே10 ஸ்மார்ட்போனை 2022 மார்ச் 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபிளாக்ஷிப் போன்களில் இருந்து பெறப்பட்ட AI-மேம்படுத்தப்பட்ட கேமரா, சக்திவாய்ந்த சிப்செட் வசதி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, சிறந்த வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை கொடுக்கும் என்று ஒப்போ நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
New OPPO K10 to offer Limitless Features & Unmatched Performance: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X