புதிய வகை ஒன் பிளஸ் 3 மிக விரைவில்..!

Written By:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன் பிளஸ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடும் முன் ட்விட்டரில் பயனர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன் படி அந்நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஒன் பிளஸ் 3 கருவியினை வெளியிட இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய வகை ஒன் பிளஸ் 3 மிக விரைவில்..!

அதன் படி புதிய கருவியில் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, AMOLED ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருவியில் 6.0 இன்ச் அளவு பெரிய திரை இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு ஒன் பிளஸ் சார்பில் ஒரே ஒரு கருவி மட்டுமே வெளியிடப்படும் என அந்நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. AMOLED பேனல் பற்றாக்குறை காரணமாக அந்நிறுவனம் LCD பேனல்களுக்கு மாறுவதே மட்டுமே வாய்ப்பாக இருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிய வகை ஒன் பிளஸ் 3 மிக விரைவில்..!

ஒன் பிளஸ் 3 கருவியானது இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கருவியில் ஸ்னாபடிராகன் 820 குவாட்கோர் பிராசஸர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

ஒன் பிளஸ் 3 கருவியின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடல் ஒன்று வெளியாகும் என அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்English summary
New OnePlus 3 variant with Snapdragon 821 reportedly under works
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot