இனி இந்த 11 Jio திட்டங்களையும் அடிச்சு பிடிச்சு ரீசார்ஜ் செய்வாங்களே! மறுபடியும் இலவசத்துக்கு இறங்கிய அம்பானி!
ஜியோ ஹோம் (Jio Home) சேவையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையின் கீழ் - நீண்ட கால திட்டங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு 3 மாதங்கள் அல்லது 30 நாட்கள் அல்லது 15 நாட்கள் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சலுகையின் கீழ் - 3 மாத, 6 மாத அல்லது 12 மாத திட்டங்களை தேர்ந்தெடுக்கும் ஜியோஹோம் சந்தாதாரர்களுக்கு எக்ஸ்ட்ரா செலவில்லாமல் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி கிடைக்கும்
காலாண்டு திட்டத்தை (3 மாத திட்டத்தை) தேர்வு செய்யும் பயனர்கள் கூடுதலாக 3 மாத இலவச வேலிடிட்டியை பெறுவார்கள். அரையாண்டு திட்டத்தை (6 மாத திட்டத்தை) தேர்வு செய்யும் பயனர்கள் கூடுதலாக 15 நாட்கள் இலவச வேலிடிட்டியை பெறுவார்கள். ஓராண்டு திட்டத்தை (12 மாத திட்டத்தை) தேர்வு செய்யும் பயனர்கள் கூடுதலாக 30 நாட்கள் அல்லது 1 மாதம் இலவச வேலிடிட்டியை பெறுவார்கள்.

ஜியோஹோம் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 11 திட்டங்கள் மீதும் இந்த சலுகை கிடைக்கிறது.
1. 30 எம்பிபிஎஸ் திட்டங்கள் - ரூ.399, ரூ.599 மற்றும் ரூ.888
2. 100 எம்பிபிஎஸ் திட்டங்கள் - ரூ.699, ரூ.899 மற்றும் ரூ.1199
3. 150 எம்பிபிஎஸ் திட்டம் - ரூ.999
4. 300 எம்பிபிஎஸ் திட்டம் - ரூ.1499
5. 500 எம்பிபிஎஸ் திட்டம் - ரூ.2499
6. 1 ஜிபிபிஎஸ் திட்டங்கள் - ரூ.3999 மற்றும் ரூ.8499
100 மில்லியன் ஜியோஹோம் பயனர்களை அடைய வேண்டும் என்கிற புதிய இலக்கின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகை பலரையும் ஜியோஹோம் சேவைக்குள் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் ஜியோ சிம் பயனர்களுக்கான 50 நாள் இலவச ஜியோஹோம் சலுகை இன்னும் தொடர்கிறது. இதன்கீழ் நீங்கள் ஜியோஹோம் சேவையை இலவசமாக முயற்சி செய்து, பயன்படுத்தி பார்க்கலாம்.
இலவச ஓடிடி தளங்களுக்கான அணுகல்களை தேடுகிறீர்களா? ஆமென்றால் ஜியோ சேவையின் கீழ் 2 அருமையான திட்டங்கள் உள்ளன. முதலில் ஜியோ ரூ.175 பிளான் - ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது அதிக செலவு இல்லாமல் பல்வேறு ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களை வழங்குகிறது. இந்த பிளானின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதன்கீழ் உங்களுக்கு 10 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.
இதுவொரு டேட்டா பிளான் என்பதால், இதன்கீழ் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் கிடைக்காது
இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை சோனி லைவ், ஜீ5, லயன்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் என்எக்ஸ்டி, காஞ்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்டவைகள் இலவசமாக கிடைக்கும்.
இரண்டாவது ஜியோ ரூ.445 பிளான் - ஒருவேளை உங்களுக்கு ரூ.175 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதே ஓடிடி நன்மைகளும் வேண்டும். கூடவே டெய்லி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் வேண்டும் என்றால்.. நீங்கள் ரூ.445 பிளானை ரீசார்ஜ் செய்யலாம். முந்தைய திட்டத்தைப் போலவே இந்தத் திட்டமும் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
நன்மைகளை பொறுத்தவரை இது எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை வழங்கும். மேலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. டேட்டா நன்மையை பொறுத்தவரை இந்த திட்டம் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதாவது செல்லுபடியாகும் 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி டேட்டா கிடைக்கும்.
எண்டர்டெயின்மெண்ட் நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் சோனி லைவ், ஜீ5, லயன்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் என்எக்ஸ்டி, காஞ்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால் மற்றும் பேன் கோட் உள்ளிட்ட தளங்களுக்கான இலவச அணுகல்களை கொடுக்கும். குறிப்பிடத்தக்க வகையில், இது ஜியோ ஹாட்ஸ்டாருக்கான 90 நாள் இலவச சந்தாவையும் கொண்டுள்ளது . மேலும் இது அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








