Home
News

Jio சேப்டர் க்ளோஸ்.. 3 மாசத்துக்கு இலவச சேவை.. டேட்டா, 18 ஓடிடி, 150 டிவி சேனல்.. Excitel-ன் அடேங்கப்பா ஆபர்!

Excitel 3 Months Free Service: 2016-ல் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டபோது முகேஷ் அம்பானி கட்டவிழ்த்துவிட்ட வியாபார தந்திரத்தை உங்களில் பலரும் மறந்து இருக்கலாம்; அதில் தவறில்லை. ஏனென்றால் இந்தாண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய விலை உயர்வையே நம்மில் பலரும் மறந்துவிட்டு, புதிய திட்டங்களின் விலைக்கு பழகிவிட்டோம். ஜியோ தனது 4ஜி சேவைகளை 2016-ல் அறிமுகப்படுத்திவிட்டு, ஜியோ சிம் கார்டுகளை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 2017 ​​மார்ச் 31 ஆம் தேதி வரை 4ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை முற்றிலும் இலவசமாக வழங்கியது:

அதே பாணியை.. எண்ட் ஆப் சீசன் சேல் (End-of-season sale) என்கிற பெயரின் கீழ் ஒரு புதிய சலுகையாக அறிமுகப்படுத்தியுள்ளது எக்ஸைடெல் (Excitel) நிறுவனம். வேகமாக வளர்ந்து வரும் இண்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர் ஆன எக்ஸைடெல் பிராட்பேண்ட் ஆனது தனது 9 மாத திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாத கால சேவை முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

3 மாசத்துக்கு இலவச சேவை.. Excitel-ன் அடேங்கப்பா ஆபர்!

மேலும் இந்த சலுகை எக்ஸைடெல் நிறுவனத்தின் 300 எம்பிபிஎஸ் திட்டத்திற்கு (300 Mbps Plan) மட்டுமே பொருந்தும். சுவாரசியமாக இந்நிறுவனத்தின் 300 எம்பிபிஎஸ் திட்டமானது பல வகையான ஓடிடி (OTT) தளங்களுக்கான அணுகல்களுடன் வருகிறது. இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் என்ன? இதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

எக்ஸைடெல் நிறுவனம் அறிவித்துள்ள எண்ட் ஆப் சீசன் விற்பனையின் கீழ் 3 மாத கால இலவச சேவையை பெற விரும்பும் பயனர்கள், 300 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீட்டை வழங்கும் பிராட்பேண்ட் கனெக்ஷனை பெற வேண்டும். இந்த திட்டத்தின் விலை மாதம் ரூ.499 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் 18 ஓடிடி இயங்குதளங்களான இலவச அணுகல்கள் மற்றும் 150 லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும்.

இதன்கீழ் கிடைக்கும் ஓடிடி தளங்களில் அமேசான் ப்ரைம் (Amazon Prime), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனி லைவ் (SonyLIV), ஆல்ட் பாலாஜி (ALTBalaji) ஆகியவைகளும் அடக்கம். எக்ஸைடெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையானது இந்தியாவில் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் அணுக கிடைக்கிறது. இந்நிறுவனம் ஒரு எப்டிடிஎச் (ஃபைபர்-டு-தி-ஹோம்) சேவை வழங்குநராகும் இது மிகவும் மலிவு விலையில் அதிவேக பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குவதற்கு பெயர்போன நிறுவனமும் கூட!

இதேபோல ஜியோவிற்கு போட்டியாக வோடாபோன் ஐடியாவும் சமீபத்தில் ஒரு தரமான புதிய திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது. அதன் விலை ரூ.175 ஆகும். இது ஆக்டிவ் சர்வீஸ் வேலிடிட்டி இல்லாத.. எக்கச்சக்கமான ஓடிடி சந்தாக்களை வழங்கும்.. ஒரு டேட்டா வவுச்சராகும். இதன் கீழ் ஒரே லாக்இன்-ஐ பயன்படுத்தி விஐ மூவீஸ் & டிவி சூப்பர் சந்தாவை இலவசமாக அணுகலாம்.

அதன்கீழ் ஜீ5 (ZEE5), சோனி லைவ் (SonyLIV), பேன்கோட் (FanCode), அட்ராங்கி (Atrangi), கிளிக் (Klikk), சாவ்பால் (Chaupal), நம்மபிளிக்ஸ் (NammaFlix), மனோரமா மேக்ஸ் (Manorama MAX), பிளேபிலிக்ஸ் (PlayFlix), டிஸ்ட்ரோ டிவி (Distro TV), ஷீமாரூ மீ (Shemaroo Me), ஹாங்காமா (Hungama), யப் டிவி (YuppTV), நெக்ஸ்ஜிடிவி (NexGTv) மற்றும் பாக்கெட் பிலிம்ஸ் (Pocket Films) போன்ற ஓடிடி நன்மைகள் கிடைக்கும்.

டேட்டா நன்மையை பொறுத்தவரை ரூ.175-ன் கீழ் 10ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். தற்போது இந்த திட்டம் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளம் (Vi Website) மற்றும் மொபைல் ஆப் (Mobile app) வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மேலும் இது அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள விஐ பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. Photo Courtesy: https://www.excitel.com/

More from GizBot

Best Mobiles in India

English summary
New Offer Excitel Broadband Announced 3 Months Free Service With 9 Month Plan Check Out Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X