Home
News

இன்னும் அந்த ஸ்டைல் உங்கள விட்டு போகல.. அறிமுகமானது புதிய Nokia 4ஜி பீச்சர் போன்.!

உலகம் முழுவதும் பல்வேறு முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இப்போதும் கூட பீச்சர்போன் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரணம் என்னவென்றால், ஸ்மார்ட்போன்களில் பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது, ஆனால் இந்த பீச்சர் போன்கள் மூன்று நாட்கள் அல்லது 5நாட்கள் கூட பேக்கப் கொடுக்கும். பின்பு ஸ்மார்ட்போன்களை விட இந்த பீச்சர் போன்களின் எடை குறைவு. அதேபோல் சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகின்றன இந்த பீச்சர் போன்கள்.

அறிமுகமானது புதிய Nokia 4ஜி பீச்சர் போன்.!

இதுதவிர ஸ்மார்ட்போன்களில் இணையம் அதிக நேரம் பயன்படுத்தினால் விரைவாக சார்ஜ் தீர்ந்துவிடும். எனவே மக்கள் இதுபோன்ற ஒரு பீச்சர் போன்களை ஸ்மார்ட்போன் உடன் கூடவே வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இப்போது அறிமுகமாகும் 4ஜி பீச்சர் போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 105 4ஜி (2023) பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய போன் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

அதேபோல் 1.8-இன்ச் கலர் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா 105 4ஜி (2023) பீச்சர் போன். மேலும் 120 x 160 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா போன். குறிப்பாக வழக்கம் போல் நோக்கியா பீச்சர் போன்களில் கிடைக்கும் அனைத்து கேம்களும் இந்த நோக்கியா 105 4ஜி (2023) போனிலும் கிடைக்கும். அதாவது ஸ்னேக் கேம் வசதியும் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

அறிமுகமானது புதிய Nokia 4ஜி பீச்சர் போன்.!

நோக்கியா 105 4ஜி (2023) போன் ஆனது டூயல் 4ஜி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் டூயல் நானோ-சிம் கார்டு ஸ்லாட்டுகள் கொண்டுள்ளன. பின்பு இந்த போனில் VoLTE HD குரல் அழைப்புகளும் ஆதரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போன் சிறந்த வாய்ஸ் கால் அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக இந்த நோக்கியா 105 4ஜி (2023) போனில் 32ஜிபி மெமரி கார்டை கூட பயன்படுத்தலாம். பின்பு புளூடூத் 5.0 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான பீச்சர் போன். இதுதவிர ஹெட்ஃபோன்கள் இணைக்கப்படாமல் எஃப்எம் ரேடியோவை கேட்க முடியும். அதாவது இதன் ஸ்பீக்கர் மூலம் எஃப்எம் ரேடியோ கேட்கலாம்.

அறிமுகமானது புதிய Nokia 4ஜி பீச்சர் போன்.!

UNISOC இன் T107லைட்வெயிட் சிப் வசதி கொண்டு இந்த அசத்தலான நோக்கியா 105 4ஜி (2023) போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த பீச்சர் போனை நம்பி வாங்கலாம். அதேபோல் 1450 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய பீச்சர் போன். எனவே இந்த போன் சில நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் விலை 229 Yuan(இந்திய மதிப்பில் ரூ.2,700) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
New NOKIA 105 4G (2023) phone launched: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X