பேங்க் பணம் அனுப்ப புது நடைமுறை.. ஐடி & பாஸ்வேர்ட் இப்படி ஆகிடுச்சே.. இப்போ ஆன்லைன் பேமெண்ட் எப்படினு பாருங்க?
பேங்க் பணத்தை அனுப்புவதற்கு என்பிசிஐ பாரத் பில்பே லிமிடெட் ஆனது புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இனி பேங்குகளின் வலைப்பக்கங்களுக்கு சென்று ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுப்பது அடியோடு மாற இருக்கிறது. அடிக்கடி ஐடி மற்றும் பாஸ்வேர்டை மறக்கும் பேங்க் கஸ்டமர்களாக நீங்கள் இருந்தால், இது உங்களுக்கு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளில் வழியாக பணம் அனுப்பும்போது அதிகபட்சம் ஒரு நாளுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே அனுப்ப முடிகிறது. இந்த வரம்பை எட்டிவிட்டால், அடுத்த 24 மணி நேரத்துக்கு பணத்தை அனுப்ப முடியாது. இதனாலேயே கூடுதலாக பணத்தை அனுப்ப நெட்பேங்கிங் (NetBanking) பயன்படுத்தப்படுகிறது.

இது அந்தந்த பேங்குகளின் வலைப்பக்கங்கள் வழியாக கொடுக்கப்படுகிறது. ஆனால், அதில் ஐடி (ID) மற்றும் பாஸ்வேர்ட் (Password) உள்ளிட்ட பாதுகாப்புகள் இருக்கும். இதை பேங்க் கஸ்டமர்கள் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை நெட்பேங்க் சேவையை பயன்படுத்தும்போதும், இந்த ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.
இங்குதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. பெரும்பாலான பேங்க் கஸ்டமர்கள் இந்த ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை நினைவில் வைத்து கொள்வது கிடையாது. ஏனென்றால், அது எழுத்துக்கள், எண்கள், கேரக்டர்கள் போன்றவற்றால் உருவாக்கப்பட்டிருக்கும். இதனால், அப்போதைக்கு பயன்படுத்திவிட்டு, பிறகு மறந்துவிடுகிறார்கள். இது மாற இருக்கிறது.
புதிய நெட்பேங்க் சிஸ்டம் என்றழைக்கப்படும் நெட்பேங்கிங் 2.0 (Netbanking 2.0) வழியாக ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க நேரடியாக மொபைல் செயலிகளுக்கு அந்த சேவை கொண்டு செல்லப்படுகிறது. இதை NPCI பாரத் பில்பே லிமிடெட்டின் எம்டி மற்றும் சிஇஓ நூபூர் சதுர்வேதி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த நூபூர் சதுர்வேதி, இப்போது இருக்கும் நெட் பேங்கிங் செயல்முறை கஸ்டமர்களை ஒரு வலைப்பக்கத்திற்கு கொண்டுசெல்கிறது, அங்கு அவர்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை கொடுக்க வேண்டி இருக்கும். பலர் இதை மறந்துவிடுகிறார்கள், இதனால் பணப்பரிவர்த்தனை பாதியில் நின்றுவிடுகிறது.
ஆனால், புதிய நெட்பேங்கிங் சிஸ்டம் கஸ்டமர்களை நேரடியாக அவர்களது சொந்த பேங்க் செயலிகளுக்கு அழைத்து செல்கிறது. இதன் மூலம் இந்த சிரமம் நீக்கப்படுகிறது. இது பணப்பரிவர்த்தனையை எளிதாக ஆக்குகிறது. கஸ்டமர்கள் அவர்களுக்கு தெரிந்து பேங்க் செயலிகளுக்குள் இருப்பதால், அது பழக்கமான ஒன்றாகவும் இருக்கிறது.
ஆகவே, எளிதாக பரிவர்த்தனையை முடிக்க முடியும் என்கிறார். மேலும், நூபூர் சதுர்வேதி, இந்த சிஸ்டமானது கியூஆர் பேஸ்டு ஆப்ஷனை (QR based option) சேர்த்துள்ளது. இது ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் முடிக்க டைனாமிக் கியூஆர் கோடை ஜெனரேட் (Dynamic QR Code Generate) செய்கிறது. இது பேங்க் கஸ்டமர்களுக்கு பழக்கமான ஒன்றாகவும் இருக்கிறது.
கஸ்டமர்கள் அவர்களது பேங்க் செயலியை பயன்படுத்தி கியூஆர் ஸ்கேன் செய்து பரிவர்த்தனையை செய்து முடிக்க முடியும். ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்தியா முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த மொபைல்-முதல் அணுகுமுறையை (Mobile-first Approach) கட்டமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஆகவே, மொத்தமாக மூன்று நடைமுறைகள் இருக்கப்போகிறது.
அதாவது, பேங்க் கஸ்டமர்கள் நெட்பேங்கிக்கு பதிலாக அவர்களது பேங்க் செயலியை பயன்படுத்துவார்கள், கியூஆர் கோட் ஸ்கேனிங் வழியாக பரிவர்த்தனைகளை செய்து முடிப்பார்கள் மற்றும் அவர்களது பேங்கில் நெட் பேங்கிங் வலைத்தளம் மூலமாக மட்டுமே பரிவர்த்தனை கொடுக்கப்பட்டால், பழைய முறையையே தொடர்ந்து பின்பற்றுவார்கள்.
இது அந்தந்த பேங்குகளின் வசதிக்கு ஏற்ப கொண்டுவரப்பட இருப்பது தெரிகிறது. ஆகவே, நெட்பேங்கிங் நேரடியாக பேங்க் செயலிகளுக்கு கொண்டுவருவது அந்தந்த பேங்குகளின் கையில் இருக்கிறது. பெரும்பாலான பேங்குகள் இதை செய்ய தொடங்கிவிட்டன. ஆகவே, வரும் காலங்களில் வலைத்தளத்துக்கு சென்று ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுப்பது மாறிவிடும்.


Click it and Unblock the Notifications








