Home
News

பாகிஸ்தான், சீனாவுக்கு ஆப்பு வைத்த இந்தியாவின் புதிய விமான தளம்.!

8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572 ஆகும். இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும்.

அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் இந்தியா சார்பில் அடுத்த ராணுவ தளம் அமைக்கப்படுகின்றது. மேலும், இது கடற்படைக்காக புதிய விமான தளமாக அமைக்கப்படுகின்றது.

பாகிஸ்தான், சீனாவுக்கு ஆப்பு வைத்த இந்தியாவின் புதிய விமான தளம்.!

8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572 ஆகும். இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும்.

அவ்வப்போது, பாகிஸ்தான், சீனா அத்துமீறி நமது கடல் பகுதியில் நுழைகின்றது. இதை தடுக்கும் விதமாகவும், கடல் பாதுகாப்பு, தீவிர வாத நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்தியா.

 பாகிஸ்தான்:

பாகிஸ்தான்:

பாகிஸ்தான் தனது எல்லை மீறிய பயங்கரவாத்தை இந்தியா மீது வன்புணர்ச்சியால் அரங்கேற்கி வருகின்றது. இதில், மும்பை, பாதான்கோட் விமானதளம், பாராளுமன்றம், ஜம்மு-காஸ்மீர் எல்லை, கடல் வழி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது.

இதில் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் பயிற்சி கொடுத்து, இந்தியா மீது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது.

சீனா:

சீனா:

சீனா தனது ராணுவ பலத்தை காட்டி இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்து தான் பரப்பை விஸ்தரிப்பு செய்து வருகின்றது. மேலும், இந்தியாவின் கடல் பகுதியில் நுழைந்து, தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.

அவ்வப்போது, இந்தியா எல்லைப்பகுதிக்குள் தனது ராணுவ கப்பல், வணிக கப்பலைகளை அனுப்பியும் இந்தியாவை கண்காணித்து வருகின்றது. இந்திய எல்லைக்குள் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.

24 ரோமியோ ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா:

24 ரோமியோ ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா:

அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

6 ஆயிரம் டன் எடையுள்ள அரிஹந்த்:

6 ஆயிரம் டன் எடையுள்ள அரிஹந்த்:

முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடியது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக இயக்கப்படுகின்றது. இது எதிரி நாட்டு நீர்மூழ்க்கி கப்பலையும் தாக்கி அழித்து விடும். இதை கண்டும் பாகிஸ்தானும், சீனாவும் பீதியில் உள்ளன.

 4 கிரிக்கோரோவிக் போர் கப்பல்:

4 கிரிக்கோரோவிக் போர் கப்பல்:

ரஷ்யாவின் கிரிகோரோவிக் வகைப் போர்க்கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கோவா கப்பல்கட்டும் தளத்தில் அவ்வகைக் கப்பல்களைக் கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோன்எக்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கான 3565கோடி ரூபாய் மதிப்புள்ள உடன்படிக்கையும் கையெழுத்தாகியுள்ளது.

இதை தொடர்ந்து ரஷ்யாவில் மேலும் இரண்டு கிரிகோரோவிக் கப்பல்களும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் 7131 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பு வைக்கின்றது:

ஆப்பு வைக்கின்றது:

அந்தமான் நிகோபர் தீவுகளில் புதிதாக கடற்படையின் விமான தளம் அமைக்கப்படுகிறது. வரும் 24ம் தேதி அந்தமான் நிகோபர் ராணுவத் தலைமை தளபதி வைஸ் அட்மிரல் பிம்லா வர்மா இதனைத் தொடங்கி வைக்க உள்ளார்.
இப்பகுதியில்தான் 70 சதவீத சரக்கு கப்பல்கள் கடந்து செல்கின்றன. இதனால் கடல்வழி பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், இந்த விமான நிலையம் அமைக்கப்பட இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய ராணுவ தளம்:

புதிய ராணுவ தளம்:

ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக ராணுவ சரக்கு விமானங்கள் இந்த தளத்தில் இருந்து செயல்படும். சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீவுகளுக்கு இந்த தளம் பாதுகாப்பாக விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அந்தமான் கடல்பகுதியில் இந்தியா தனது கடற்படையின் பலத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானுக்கும், சீனாவும் ஆப்பு:

பாகிஸ்தானுக்கும், சீனாவும் ஆப்பு:

இந்தியாவில் கடல் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டாலும், இந்த புதிய ராணுவ தளம் பாகிஸ்தான், சீனாவுக்கும் பேரடியாகவும் இருக்கும் என்று எதிர்பார்கலாம்.

Best Mobiles in India

English summary
New Naval air force At Andaman And Nicobar Islands: Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X