விநாடிக்கு 2ஜிபி டேட்டா ஸ்பீட் வழங்கும் எல்இடி..!!

|

வினாடிக்கு இரண்டு ஜிகாபைட் தரவு வேகம் வழங்கும் திறமையான லைட்டிங் அதுவும் கம்பியில்லா இணைய சக்தி மூலம் வழங்கும் ஒரு புதிய நானோ பொருள் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (KAUST) பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தான் நீல ஒளிக்கு மாறாக வெள்ளை ஒளியை தொடர்ச்சியாக வெளியேற்றும் ஒரு புதிய நானோகிரிஸ்டலின் பொருளை உருவாக்கியுள்ளனர்.

பல நன்மை :

பல நன்மை :

வை-பை மற்றும் ப்ளூடூத் ஆகியவைகள் இப்போது நன்கு நிறுவப்பட்ட தொழில்நுட்பங்களாகும், ஆக, இந்த தரவு கடத்த பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகளின் அலைநீளம் குறைக்கப் படுவதின் மூலம் பல நன்மைகளை பெற முடியும்.

ஆற்றல் திறன் :

ஆற்றல் திறன் :

தெரியும் ஒளி தொடர்பு எனப்படும் விசிபிள் லைட் கம்யூனிக்கேஷனின் (VLC) மின்காந்த நிறமாலையின் பாகங்கள் முறைப்படுத்தப்படாத மற்றும் அதிக ஆற்றல் திறன் ஆகியவைகளை வழங்கும் என்று ஆராச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இணைய இணைப்பு :

இணைய இணைப்பு :

விஎல்சி (VLC) ஆனது வெளிச்சம் மற்றும் காட்சி தொழில்நுட்ப தகவல் ஒலிபரப்பை இணைக்கவும் உதவும். எடுத்துக்காட்டாக, மின் விளக்குகள் பயன்படுத்தி மடிக்கணினிகளுக்கு இணைய இணைப்புகளை வழங்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தேவை :

தேவை :

பெரும்பாலான விஎல்சி பயன்பாடுகளுக்கு வெள்ளை ஒளி உற்பத்தியினை நிகழ்த்த ஒளி உமிழும் டயோடுகள் (LED) தேவைப்படும்.

ஒளி :

ஒளி :

அவைகள் தான் வழக்கமான பாஸ்பரஸ் நீல நிற வெளியேற்றத்தை ஒரு டையோடு இணைப்பின் மூலம் சிவப்பு மற்றும் பச்சை ஒளியாக மாற்றும்.

விவாதம் :

விவாதம் :

எனினும், மறுபக்கம் இந்த மாற்ற செயல்முறையானது எல்இடி ஆன் மற்றும் ஆஃப் செய்யப்படும் வேகத்திற்கு பொருந்தாது என்ற விவாதமும் எழுந்தது.

சீசியம் லீட் பிரோமைட் :

சீசியம் லீட் பிரோமைட் :

அதனை தொடர்ந்து ஒரு எளிய மற்றும் செலவு குறைந்த தீர்வை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர், சுமார் எட்டு நானோமீட்டர் அளவு உள்ள சீசியம் லீட் பிரோமைட் (cesium lead bromide) நானோபடிகங்களை உருவாக்கினர்.

40 மடங்கு :

40 மடங்கு :

இதன் மூலம் பாஸ்பரஸ் பயன்படுத்தி அடையும் இணைய சாத்தியத்தை விட 40 மடங்கு வேகமாக அதாவது 491 மெகா ஹெர்ட்ஸ் அளவிலான ஒரு அலைவரிசை ஆப்டிகல் உமிழ்வை ஒழுங்குப்படுத்த முடியும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அமெரிக்க மாண்டேக் திட்டம், பரிசோதிக்கப்பட்டவரின் 'பதற வைக்கும்' அனுபவம்..!


உண்மையை நாசா மறைக்கலாம் ஆனால், கேமிராக்கள் காட்டித்தான் கொடுக்கும்.!


'போக்கிமான் கோ'வை கோ சொல்லும் இந்திய கேம் வெளியானது!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
New nano-material promises 2GB data speed per second. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X