Home
News

புது ரூல்ஸ்.. நவம்பர் 1 முதல் அமல்.. இனி பேங்க் பணம் அனுப்ப படாதபாடு.. இல்லனா என்ன நடக்கும்.. என்னென்ன மாறுது!

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒவ்வொரு கஸ்டமர்களுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) புதிய பணப் பரிமாற்ற விதிகளை (New Money Transfer Rules) கொண்டு வந்துள்ளது. இனிமேல் அவ்வளவு எளிதாக ஒரு பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து மற்றொரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணம் அனுப்பிவிட முடியாது. இந்த புதிய விதிகள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகளால் என்னென்ன மாற்றங்கள் வருகின்றன?

இப்போதெல்லாம், கை நீட்டி காசு வாங்கும் பழக்கத்தை பார்ப்பது அரிதாகிவிட்டது. பேங்க் அக்கவுண்ட் மூலம் பணம் வாங்குவதும், கொடுப்பதுமாக மாறிவிட்டது. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களை பயன்படுத்தினாலும், பேங்க் அக்கவுண்ட் மட்டுமே இந்த சேவைகளுக்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதனால், அதில் கட்டுப்பாடுகளும் அதிகரித்துவிட்டன.

புது ரூல்ஸ்.. நவம்பர் 1 முதல் அமல்.. இனி பேங்க் பணம் அனுப்ப படாதபாடு.!

இப்போது, ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் புதிய பணப் பரிமாற்ற விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால், நவம்பர் 1ஆம் தேதியில் அமலுக்கு வர இருக்கிறது. இருப்பினும், இப்போதே பேங்க் கஸ்டமர்களின் வயிற்றில் புளியை கரைக்கும்படி என்னென்ன விதிகள் வரப்போகிறது என்பது தெரிந்துவிட்டது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவானது, இந்த புதிய பணப் பரிமாற்ற விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதில் கேஒய்சி விதிகள் (KYC Rules) பேங்க் கஸ்டமர்களை கடுப்பாக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், பாதுகாப்புக்குத்தான் விதிகள் வருகின்றன. ஆகவே, பணப் பரிவர்த்தனைகளின் போது கூடுதல் கேஒய்சி விவரங்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

என்னென்ன விதிகள் அமலுக்கு வரும்? இந்த புதிய பணப் பரிமாற்ற விதிகளின்படி பேங்க் அக்கவுண்ட், மொபைல் நம்பர், பேங்க் கிளை மட்டுமல்லாமல், கஸ்டமர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் வங்கிகளால் சேகரிக்கப்படும். ஆகவே, பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது, கேஒய்சி விவரங்களை பதிவு செய்வதில் கூடுதல் கட்டுப்பாடுகள் இனிமேல் விதிக்கப்படும்.

புது ரூல்ஸ்.. நவம்பர் 1 முதல் அமல்.. இனி பேங்க் பணம் அனுப்ப படாதபாடு.!

அதேபோல மொபைல் நம்பர் மற்றும் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் - ஓவிடி (Officially Valid Document- OVD) ஆவணங்களை கட்டாயம் அப்டேட் செய்திருக்க வேண்டி இருக்கும். இல்லையென்றால், பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் போகலாம். ஆகவே, பேங்கில் கேட்கப்படும் கேஒய்சி ஆவணங்கள் அனைத்தையும் அப்டேட் செய்து வைத்து கொள்ளுங்கள்.

இதுபோக கூடுதல் காரணி அங்கீகாரம் - ஏஎப்ஏ (Additional Factor of Authentication - AFA) கொண்டு வரப்பட இருக்கிறது. அதாவது, பணப் பரிமாற்றத்தின் போது ஓடிபி (OTP) அங்கீகாரம் கேட்கப்படும். இதில், இப்போது கூடுதலாக அங்கீகாரம் சேர்க்கப்பட இருக்கிறது. ஆதார் வெரிபிகேஷன் போன்று ஏதாவது ஒரு கூடுதல் அங்கீகாரம் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.

ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் என்இஎப்டி (NEFT) பரிவர்த்தனைகளின்போது, வங்கி விவரங்கள் மட்டுமல்லாமல், பணம் அனுப்புபவர் விவரங்களையும் கொடுக்க வேண்டும். இந்த புதிய விதிகள் உள்நாட்டு பணப் பரிமாற்றம் - டிஎம்டி (Domestic Money Transfer - DMT) செய்யும் கஸ்டமர்களுக்கு விதிகப்படுகிறது. ஆகவே, இந்தியாவின் அனைத்து பேங்க் கஸ்டமர்களுக்கும் அமலாக இருக்கிறது.

ஆகவே, ஒட்டுமொத்தமாக கேஒய்சி விதிகளில் மாற்றங்கள் வர இருக்கின்றன. இப்போதே பேங்க் கஸ்டமர்கள் தங்களது அக்கவுண்ட்டின் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்து கொள்ளுங்கள். பேங்கில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பர் மட்டுமல்லாமல், ஆதார், பான் கார்டு போன்றவற்றில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பரையும் தயாராக வைத்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X