Home
News

TRAI புது ரூல்ஸ்.. இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ்.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு.. இதோ முழு விவரம்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிகளில் 13-வது திருத்தத்தை 2026-ஆம் ஆண்டுக்காக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய திருத்தத்தின்படி, மொபைல் சேவை நிறுவனங்கள் கட்டாயமாக 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது அதிகமாக 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை தான் வழங்கி வருகின்றன. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களால் வாடிக்கையாளர்கள் ஒரு ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தனர்.

TRAI புது ரூல்ஸ்.. இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ்..

இந்நிலையில் டிராய் அமைப்பு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 28 நாட்கள் மொபைல் ரீசார்ஜ்க்கு பதிலாக இனி கட்டாயம் 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் வழங்க வேண்டும் என டிராய் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ஆகவே இதனால் ஆண்டுக்கு 13 ரீசார்ஜ்களுக்கு பதிலாக 12 ரீசார்ஜ்கள் மட்டுமே செய்யும் நிலை உருவாகும்.

அதேபோல் 2024-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 12-வது திருத்தத்துக்குப் பிறகு, மொபைல் டேட்டாவை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்டவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். இதற்கு தீர்வு காணும் வகையில், டேட்டா வசதி இல்லாமல் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டும் பயன்படுத்தும் வகையிலான குறைந்த விலை சிறப்புத் திட்டங்களை வழங்க TRAI அறிவுறுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் வேலிடிட்டி 30 நாட்கள் மற்றும் விலை குறைவாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய 30 நாள் ரீசார்ஜ் விதிகளுக்கு ராஜ்யசபா எம்.பி. ராகவ் சத்தா உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் முதியவர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட்டில் மொபைல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய விதிகள் பயனுள்ளதாக இருக்கும் என்று ராகவ் சத்தா தெரிவித்துள்ளார். குறிப்பாக, டேட்டா வசதி தேவையில்லாமல் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு மட்டும் செல்போனை பயன்படுத்துபவர்களுக்கு இந்த மாற்றம் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு தனது முந்தைய கட்டமைப்பின் அடிப்படையிலேயே டிராய்-ன் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

TRAI-ன் புதிய விதிகள் மூலம் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதால், மாதந்தோறும் ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

TRAI புது ரூல்ஸ்.. இனி 30 நாட்களுக்கு ரீசார்ஜ்..

மேலும், டேட்டா வசதி தேவையில்லாதவர்கள் மற்றும் குறைந்த கட்டணத்தில் மொபைல் சேவையை பயன்படுத்த விரும்புபவர்களுக்காகத் தனி வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். திட்டங்கள் வழங்கப்படுவது பயனுள்ளதாக இருக்கும். இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதன் மூலம், பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்வது வாடிக்கையாளர்களுக்கு எளிதாகும்.

இது தொடர்பாக டிராய் அதிகாரிகள் கூறுகையில், புதிய கட்டண முறையானது வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், இணையதள வசதி தேவையில்லாதவர்கள் மற்றும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்தி வருபவர்கள் இந்த புதிய கட்டணத் திட்டத்தின் மூலம் அதிக பயன் பெறுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Best Mobiles in India

English summary
New Mobile Recharge Rules: 30-Day Plans, Voice-Only Options and More; TRAI Rules Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X