Home
News

புது சிம் கார்டு ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் உடன் லிங்க் செஞ்ச மொபைல் நம்பருக்கு வருது மாற்றம்.. DoT வச்ச செக்!

டாட் (DoT) என்கிற இந்திய தொலைத்தொடர்பு துறை (Department of Telecommunications) ஆனது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உட்பட, தொழில்நுட்ப துறைக்கான புதிய சைபர் பாதுகாப்பு விதிகளை இறுதி செய்துள்ளது.

புதிய சைபர் பாதுகாப்பு விதிகளின் (New cybersecurity rules) கீழ் டாட் ஆனது எம்என்வி (MNV) என்கிற மொபைல் எண் சரிபார்ப்பு தளத்தை (Mobile Number Validation Platform) உருவாக்குகிறது. இந்த எம்என்வி தளத்தின் கீழ் 2 வகையான சரிபார்ப்புகள் செய்யப்படும்.

புது சிம் கார்டு ரூல்ஸ்.. DoT வச்ச செக்!

முதல் சரிபார்ப்பு: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வைத்திருக்கும் கேஒய்சி (KYC - Know Your Customer) விவங்களின் அடிப்படையில், ஒரு மொபைல் நம்பர் ஆனது சரியான பயனருக்கு சொந்தமானதா என்பதை இந்த தளம் சரிபார்க்கும். இந்த தளம் வரும் மாதங்களில் தொடங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவது சரிபார்ப்பு: இந்த எம்என்வி தளமானது - வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் புதிய கணக்குகளை திறக்கும்போது அவர்களுடைய மொபைல் எண்ணை சரிபார்க்கவும் அனுமதிக்கும். இது பரவலான சைபர் மோசடியை தடுப்பதற்கு மிகவும் முக்கியமான செயல்முறையாக கருதப்படுகிறது

தற்போது ​​வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் ஆனது உண்மையிலேயே அந்த அக்கவுண்ட்டை வைத்திருப்பவருக்குச் சொந்தமானது தானா என்பதை சரிபார்க்க நிறுவனங்களுக்கு எந்த சட்டப்பூர்வ வழிமுறையும் இல்லை. இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே டாட் ஆனது என்என்வி தளத்தை தொடங்குறது.

இதனால் வங்கிகள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடியாக தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன் மொபைல் நம்பர்களை சரிபார்க்க முடியும். இது சைபர் குற்றங்களை பெருமளவில் தடுக்கவும் உதவும். இருப்பினும், தொலைத்தொடர்பு அல்லாத நிறுவனங்களை தொலைத்தொடர்புத் துறையின் கீழ் கொண்டு வருவது பயனர் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று சில தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் கவலைப்படுகிறார்கள்.

இடி டெலிகாம் அறிக்கையின்படி, தொலைத்தொடர்பு துறையின் உரிமம் பெற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை - வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதே இந்த புதிய விதிகளின் நோக்கமாகும் என்று டாட் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். டாட் இன் ஒழுங்குமுறை இலக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோல பேங்கிங் தொடர்மாக அமலுக்கு வரும் புதிய விதிகளை பொறுத்தவரை எஸ்பிஐ (SBI - State Bank of India) வங்கி ஆனது எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிகள் (SBI Credit Card New Rules) அமலுக்கு கொண்டு வருகிறது. இவைகள் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.

எஸ்பிஐ அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் முக்கியமாக மூன்றாம் தரப்பு செயலிகள் (Third Party Apps) மூலம் பள்ளி அல்லது கல்லூரி கட்டணங்களை செலுத்துதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் டிஜிட்டல் வாலட்களில் பணத்தை லோட் செய்தல் போன்ற பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டுவருகின்றன.

முதல் மாற்றம் - கல்வி சார்ந்த பேமண்ட்களுக்கான கட்டணத்தில் செய்யப்பட்டு உள்ளது. கிரெட் (CRED), செக் (Cheq) மற்றும் மொபிக்விக் (MobiKwik) போன்ற தேர்ட் பார்ட்டி ஆப்கள் மூலம் செய்யப்படும் எஜுகேஷன் பேமண்ட்களுக்கு பரிவர்த்தனை தொகையில் 1% கட்டணம் பொருந்தும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இருப்பினும், கல்லூரிகள் அல்லது பள்ளிகளுக்கான கட்டணத்தை அந்தந்த கல்லூரி மற்றும் பள்ளியின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது பிஓஎஸ் (POS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாயிண்ட் ஆப் சேல் (Point of sale) இயந்திரங்கள் மூலம் நேரடியாக செய்யப்படும் பேமண்ட்களுக்கு எந்த கட்டணமும் இருக்காது.

இரண்டாவது மற்றம் - வாலட் லோட்க்கான (Wallet load) கட்டணத்தில் செய்யப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இது ரூ.1,000 க்கு மேலாக உள்ள ஒவ்வொரு வாலட் லோட் பரிவர்த்தனைக்கும் (Wallet load transaction) பொருந்தும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Mobile Number Validation Platform From DoT to verify mobile number linked with Bank Account
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X