Home
News

மொபைல் நம்பரை PORT செய்ய புது ரூல்ஸ்.. 3 மாசத்துல எல்லாமே மாறும்!

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது மொபைல் நம்பரை போர்ட் செய்வது தொடர்பான புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதென்ன விதிகள்? இனிமேல் என்னென்ன மாறும்? புதிய விதிகள் எப்போது முதல் அமலுக்கு வரும்? இதோ விவரங்கள்:

எம்என்பி (MNP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (Mobile number portability) விதிகளில் தான் புதிய மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. அறியாதோர்களுக்கு எம்என்பி என்றால்.. உங்களுடைய மொபைல் நம்பரை மாற்றாமலேயே, நீங்கள் தற்போது இருக்கும் ஒரு டெலிகாம் நிறுவனத்தின் சேவையில் இருந்து வேறொரு டெலிகாம் நிறுவனத்தின் சேவைக்கு மாற உதவும் ஒரு செயல்முறையாகும்.

மொபைல் நம்பரை PORT செய்ய புது ரூல்ஸ்.. 3 மாசத்துல எல்லாமே மாறும்!

எம்என்பி விதிகளில் டிராய் செய்துள்ள புதிய மற்றும் ஒன்பதாவது திருத்தத்தின்படி, வாடிக்கையாளர்கள் கடந்த 7 நாட்களில் தங்கள் சிம் கார்டை மாற்றி இருந்தால் (ஸ்வாப்டு அல்லது ரீப்பிளேஸ்டு செய்து இருந்தால்) அவர்கள் தங்கள் மொபைல் எண்ணை வேறு தொலைத்தொடர்பு ஆபரேட்டருக்கு போர்ட் (Port) செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இதோடு சேரத்து ஒரு தொலைத்தொடர்பு ஆபரேட்டரிடமிருந்து மற்றொரு மொபைல் எண்ணை மாற்ற உதவும் யுனிக் போர்டிங் கோட்-ஐ (Unique Porting Code) ஒதுக்குவதற்கான கோரிக்கையை நிராகரிப்பதற்கான கூடுதல் அளவுகோலையும் டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது. சிம் மாற்றப்பட்ட நாளிலிருந்து அல்லது மொபைல் எண்ணை மாற்றிய நாளிலிருந்து 7 நாட்கள் காலாவதியாகும் முன் யுபிசி-க்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால், யுபிசி ஒதுக்கப்படக்கூடாது என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

மொபைல் நம்பரை PORT செய்ய புது ரூல்ஸ்.. 3 மாசத்துல எல்லாமே மாறும்!

டிராயின் கூற்றுப்படி இந்த இந்த திடீர் திருத்தங்கள் ஆனது, சிம் பரிமாற்ற மோசடி மற்றும் நேர்மையற்ற வழியில் நிகழ்த்தப்படும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த புதிய எம்என்பி விதிமுறையானது 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் எம்என்பி-க்கான விதிமுறைகள் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்னரே குறிப்பிட்டபடி எம்என்பி வசதி மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்றாமலேயே தங்கள் சேவை வழங்குநரை மாற்றலாம். போர்ட் (PORT) என்று டைப் செய்து அதனை தொடர்ந்து உள்ளிட்டு 1900 என்கிற எண்ணிற்கு எஸ்எம்எஸ அனுப்புவதன் உங்கள் மொபைல் நம்பரை போர்ட் செய்வதற்கான செயல்முறையை தொடங்க முடியும்.

மொபைல் நம்பரை PORT செய்ய புது ரூல்ஸ்.. 3 மாசத்துல எல்லாமே மாறும்!

இப்படி செய்வதன் மூலம் உங்கள் கோரிக்கைக்கான யுபிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிக் போர்டிங் கோட் உருவாக்கப்படும் மற்றும் அது எஸ்எம்எஸ் வழியாக உங்களுக்கு அனுப்பியும் வைக்கப்படும். பின்னர் இதை வைத்தே உங்களுக்கான மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி கோரிக்கையை விடுக்க முடியும்.

கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு டிராய் உத்தரவு ஒன்றும் உள்ளது. நாடு முழுவதும் 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டாலும் கூட, முக்கிய நகரங்களில் உள்ள பலரும் 4ஜி நெட்வொர்க்கை மட்டுமே பெறுகின்றனர். இந்த குழப்பத்திற்கு முடிவு கட்ட ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தத்தம் 4ஜி மற்றும் 5ஜி கவரேஜ் மேப்களை (4G and 5G Network Coverage Maps) உருவாக்க வேண்டுமென்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் 2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்பங்களானது, நடைமுறையில் இருந்து படிப்படியாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளின் "கிடைக்கும் தன்மையை" பற்றி மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்பதே டிராயின் நோக்கமாகும். இதுகுறித்த கவரேஜ் மேப்கள் விரைவில் ஜியோ மற்றும் ஏர்டெல் வலைத்தளங்களில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New MNP Rules From July 1 TRAI Announced Big Change in Mobile number Porting Facility All Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X