Home
News

கெத்து காட்டிய தமிழ்நாடு கஸ்டமர்கள்.. சிலிர்த்து போன BSNL அதிகாரிகள்.. ரூ.50 கேப்புல அம்பானிக்கு வச்ச ஆப்பு!

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது தமிழ்நாடு வட்டத்தில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. அதென்ன மைல்கல்? பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கஸ்டமர்கள் அப்படி என்ன செய்தனர்? இதனால் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் சுனில் மிட்டல் (Sunil Mital) தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய நிறுவனங்களுக்கு என்ன சிக்கல்? இதோ விவரங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனமானது தமிழ்நாடு வட்டத்தில் அணுக கிடைக்கும் ஃபைபர் பிராட்பேண்ட் பிரிவின் (Fiber Broadband Segment) கீழ் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்த்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது தற்போது தமிழ்நாடு வட்டத்தில் 0.5 மில்லியன் பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் பயனர்கள் உள்ளனர்.

கெத்து காட்டிய தமிழ்நாடு கஸ்டமர்கள்.. சிலிர்த்து போன BSNL அதிகாரிகள்!

இதுகுறித்த சமூக ஊடகப் பதிவில், "இந்த மைல்கல்லை அடைய எங்களை நம்பி ஆதரவளித்த எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகக் கூட்டாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று பிஎஸ்என்எல் தமிழ்நாடு (BSNL Tamil Nadu) கூறியுள்ளது. கொல்கத்தா வட்டத்திற்கும் இதேபோன்ற ஒரு அறிவிப்பை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. கொல்கத்தா வட்டத்தில் 60,000 பாரத் ஃபைபர் வாடிக்கையாளர்கள் என்கிற மைல்கல்லை எட்டியுள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஜியோ மற்றும் ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குகிறது.அறியாதோர்களுக்கு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவங்களின் திட்டங்கள் ரூ.300 முதல் தொடங்கும் மறுகையில்.. பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் சென்னை வட்டத்தில் ரூ.249 முதல் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது போட்டியாளர்களுக்கும் தனுக்குமான இடைவெளியில் ரூ.50 ஆக வைத்துள்ளது.

ரூ.249-க்கு கிடைப்பது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூரல் எப்டிடிஎச் வாய்ஸ் அன்லிமிடெட் (Rural FTTH Voice Unlimited) திட்டமாகும். மற்ற திட்டங்களை பொறுத்தவரை, எப்டிடிஎச் வாய்ஸ் அன்லிமிடெட் (FTTH Voice Unlimited) திட்டமானது மாதம் ரூ.299-க்கும், பைபர் ரூரல் ஹோம் வைஃபை (Fibre Rural Home WiFi) திட்டமானது மாதம் ரூ.399-க்கும் மற்றும் பைபர் பேஸிக் நியோ (Fibre Basic Neo) திட்டமானது மாதம் ரூ.449-க்கும் கிடைக்கிறது.

மேற்கண்ட அனைத்து திட்டங்களுமே 1 மாத கால செல்லுபடியுடன் வரும் திட்டங்கள் ஆகும். இதே திட்டங்கள் 6 மாத கால வேலிடிட்டி, 12 மாத கால வேலிடிட்டி மற்றும் 24 மாத கால வேலிடிட்டியின் கீழும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. 24 மாதங்கள் செல்லுபடியாகும் பைபர் பேஸிக் நியோ திட்டத்தின் விலை ரூ.10776 ஆகும். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு.. ரூ.249 முதல் ரூ.10776 வரையிலால பல்வேறு வகையான ரீசார்ஜ் விருப்பங்களை கொடுக்கிறது.

இதுபோன்ற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் யுக்திகள் மற்றும் வளர்ச்சிகள் ஆனது பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவிற்கான தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் போட்டியிடுவதை உறுதி செய்வதற்காக பிஎஸ்என்எல் நிறுவனமானது அக்டோபர் 2020-இல் தான் அதன் பாரத் ஃபைபர் சேவைகளை வழங்க தொடங்கியது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருக்கும் பணபலம், அவைகளால் அணுக முடியும் சிறந்த பிராண்ட் மற்றும் ஆக்ரோஷமான மார்க்கெட்டிங் யுக்திகள் போன்ற காரணங்களால்.. ஹோம் பிராட்பேண்ட் பிரிவில் பிஎஸ்என்எல் நிறுவனம் பின்தள்ளப்பட்டது. இருப்பினும் கூட பிஎஸ்என்எல் நிறுவனமானது இன்னமும் நாட்டின் மூன்றாவது பெரிய எப்டிடிஎச் (FTTH - Fiber-to-the-home) வழங்குநராக உள்ளது. மேலும் இந்த பிரிவில் மீண்டும் "ராஜாவாக" மாறவும், அதிக சந்தைப் பங்கை கைப்பற்றவும் கடுமையாக போராடி வருகிறது.

ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு பெரிய ஹோம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் தளத்தை கொண்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொலைதொடர்பு வட்டத்திலும் சேவைகளை வழங்கி வருகிறது. இருந்தாலும் கூட ஜியோ மற்றும் ஏர்டெலுக்கு கீழேதான் உள்ளது. பான்-இந்தியா அடிப்படையிலான 4ஜி அறிமுகம் மற்றும் 5ஜி அறிமுகம் நிகழ்த்தப்படாத வரை பிஎஸ்என்எல்-ன் இந்த தடுமாற்றம் தொடரும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
ew Milestone For BSNL Reached 5 Lakh Bharat Fibre Customers in Tamil Nadu Circle
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X