Home
News

மறந்து போச்சா? அப்புறம் AI எதுக்கு? Facebook, WhatsApp போதும்.. மறந்ததை சொல்லும் Meta AI-இன் மெமரி பீச்சர்!

அடிக்கடி எதையாவது நினைத்து கொண்டிருக்கும் பலருக்கு சில நேரங்களில் முக்கியமான விஷயங்கள்கூட மறந்துவிடுகிறது. அதற்கு சில நிமிடங்கள் செலவு செய்து மூளையை அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், ஏஐ சாட்பாட்கள் இதை அப்படியே மாற்ற இருக்கின்றன. இப்போது, மெட்டா ஏஐ சாட்பாடில் (Meta AI Chatbot) புதிய மெமரி பீச்சர் (Memory Feature) களமிறங்கி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் மெசேஞ்சர் (Messenger) ஆகிய ஆப்களில் மெட்டா ஏஐ சாட்பாட் பயன்படுத்த கிடைக்கிறது. ஏதாவது, சந்தேகம் வந்தால் கூகுளில் எப்படி டைப் செய்து தேடுவீர்களோ அதையே இந்த ஏஐ சாட்பாடில் செய்து கொள்ளலாம். அதிலும், செயற்கை நுண்ணறிவு கொண்டிருப்பதால், எதிரே ஆள் இருப்பதை போல உங்களுக்கு பதில்களை கொடுக்கிறது.

மறந்து போச்சா? அப்புறம் AI எதுக்கு? Facebook, WhatsApp போதும் பாஸ்!

இதனால், யூசர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது, வந்துள்ள மெமரி பீச்சர் அடுத்த லெவலுக்கு ஏஐ சாட்பாடை எடுத்து சென்றுள்ளது. அதாவது, நீங்கள் அடிக்கடி மெட்டா ஏஐ சாட்பாடில் எதையாவது தேடி இருந்தால், அதை மெமரியாக சேமித்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை நீங்கள் டைப் செய்யாமலேயே அதை எடுத்து பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த மெமரி பீச்சரானது, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டும் இப்போதைக்கு கிடைக்கிறது. மற்ற நாடுகளில் விரைவில் அப்டேட் மூலம் கொடுக்கப்பட இருக்கிறது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) யூசர்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இது மறந்துபோன கேள்விகளை நொடியில் நினைவுபடுத்த கூடியது. இதை நீங்கள் சேமிக்கலாம் அல்லது டெலிட் செய்யலாம்.

அதாவது, மெமரி பீச்சரில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கேள்விகளை சேமித்து கொள்ள முடியும். பிறகு சாட் செய்யும்போது, மெமரி பீச்சரில் இருக்கும் ஆப்ஷன்களை நீங்கள் கிளிக் செய்து அதன் விவரங்களை பெற்று கொள்ளலாம். இந்த மெமரி பீச்சர் குரூப் சாட்களுக்கு பொருந்தாது. 1 டூ 1 சாட் செய்யும் பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் மெசேஞ்சர் யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இந்த பீச்சர் மூலம் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதாக கேள்வி எழுந்தாலும், உங்களுக்கு அதை பயன்படுத்தவும் அல்லது டெலிட் செய்யவும் மெட்டா ஆப்ஷன்களை கொடுக்கிறது. அதேபோல உங்களுக்கு பிடித்தமான சாட்களை மட்டுமே அனுமதியுடன் இது சேமிக்கிறது. இந்தியாவில் இந்த மெமரி பீச்சரானது பலருக்கு உதவியாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.

உதாரணத்துக்கு இந்த மெட்டா ஏஐ சாட்பாடில் உங்களுக்கு பிடித்தமான நபர்கள் அல்லது உங்களது பிறந்த நாளை குறிப்பிட்டு அன்றைய நாளில் நீங்கள் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதை சேமித்து வைக்கலாம். ஆகவே, அடுத்த முறை மெமரி பீச்சருக்கு சென்று எப்போது எனது பிறந்த நாள்? (When is my birthday?) என்று சேமிக்கப்பட்டிருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்தால் விவரங்கள் வரும்.

இது மாதக் கணக்கில் சேமித்து வைத்து கொள்ளப்படும். ஆகவே, தேவைப்படும்போது நீங்கள் அதை பயன்படுத்தலாம், இப்படி 'எனது பிறந்த நாள் எப்போது?' என்பது போல நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சாட் கேள்விகளை இப்படி மெமரி பீச்சரில் சேமித்து கொள்ளலாம். அதை தேவைப்படும்போது பயன்படுத்தவும், நீக்கவும் உங்களுக்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகிறது.

உண்மையில், ஏஐ சாட் பாடில் தனிப்பட்ட விவரங்களை பகிர்வது உகந்தது அல்ல. அதேபோல உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பாஸ்வேர்ட் போன்ற விவரங்களையும் ஏஐ சாட்பாடில் பகிரக் கூடாது. மெட்டா ஏஐ, ஜெமினி ஏஐ, சாட்ஜிபிடி போன்ற முன்னணி சாட்பாட்கள் இந்த விவரங்களை கொடுத்தால் அதை தவிர்த்துவிடுகின்றன. ஆனால், மற்ற ஏஐ சாட்பாட்கள் அப்படியில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Memory Feature From Meta AI Chatbot For Facebook Messenger and WhatsApp To Remember Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X