புது UPI ரூல்ஸ்.. ரூ.2,000 மேல் போச்சுனா கட்டணம் வருது.. GPay, PhonePe, Paytm-க்கு மாற்றம்.. என்னென்ன வருது?
இந்திய அரசு ஆனது பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைமைகள் சட்டத்தில் (Payment and Settlement Systems Act) திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த சட்டத் திருத்தம், யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் மீது வணிகர் தள்ளுபடி கட்டணம் (Merchant Discount Rate - MDR) வசூலிப்பதற்கு வழிவகுத்துள்ளது.
இருப்பினும், இந்தக் கட்டண விதிப்பு அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தாது. அதாவது, ரூ.2,000 மேல் செய்யப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு (Merchant Payment) மட்டுமே பொருந்தக்கூடிய வகையில் திட்டமிட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களிடமிருந்தோ அல்லது வாடிக்கையாளர்களிடமிருந்தோ எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வணிகர்களுக்கான எம்டிஆர் கட்டணத்தை இந்திய அரசு முழுமையாக ரத்து செய்தது. ஆனால், இப்போது யுபிஐ பரிவர்த்தனைகள் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டன. பெட்டி கடைகள் முதல் சூப்பர் மார்கெட்கள் வரையில் வந்துவிட்டன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.2,370 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் ரூ.29.9 லட்சம் கோடி மதிப்பிலான பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
ஆகவே, இவ்வளவு பெரிய தொகை கையாளப்படுதல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இணையப் பாதுகாப்பு அம்சங்களின் தேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு யுபிஐ பரிவர்த்தனைகளை பராமரிக்க கணிசமான நிதி தேவைப்படுவதால், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.
இதன் காரணமாகவே, சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு மட்டும் கட்டணம் விதிக்க அனுமதி கொடுக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ரூ.2,000 மேல் மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.5% வரை எம்டிஆர் கட்டணம் விதிக்கப்பட வாய்புள்ளது. இது இறுதி விகிதமோ அல்லது எந்தெந்த வணிகர்களுக்கு பொருந்தும் என்பதையோ இந்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
இந்த புதிய மசோதா அன்றாடம் ரூ.10, ரூ.100 அல்லது ரூ.500 போன்ற பரிவர்த்தனைகளை செய்யும் பொதுமக்களையோ அல்லது சிறு வணிகர்களையோ பாதிக்காது என்றும் சொல்லலாம். அதாவது, யுபிஐ மூலம் நடக்கும் மொத்த பரிவர்த்தனைகளில் ரூ.2,000 மேல் நடக்கும் வணிகப் பரிவர்த்தனைகள் வெறும் 4 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால், பண மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் இவை மொத்த பரிவர்த்தனை மதிப்பில் 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றன.
ஏனென்றால், யுபிஐ பரிவர்த்தனைகள் என்றாலே பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்குதல், ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணம் செலுத்துதல், ஆன்லைனில் ஆர்டர் செய்தல் போன்ற அன்றாடச் சிறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. இது கிட்டத்தட்ட முக்கால் வாசி பரிவர்த்தனைகளாக இருந்தாலும் ரூ.2,000 மேல் செல்வது மிகவும் குறைவாகவே இருக்கிறது.
ஆகவே, இது வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணத்தையும் விதிக்காது. அதேபோல ரூ.2,000 மேல் செல்லும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் என்று வணிகர்களுக்கான கட்டணமாகவே இருக்கிறது. ஆகவே, ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பணம் அனுப்பும் பர்சன்-டு-பர்சன் (P2P) பரிவர்த்தனைகளுக்கு வழக்கம்போல எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆகவே, இதில் பெரிதாக கட்டணம் வசூலிப்பு இருக்காது.
சொல்ப்போனால், எம்டிஆர் கட்டணம் என்பது வணிகர்கள் தங்களது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக வங்கிகளுக்கும் கட்டணச் சேவை நிறுவனங்களுக்கும் செலுத்தும் ஒரு கட்டணமாகும். ஆகவே, இது நேரடியாக வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பிடிக்கப்படாது. இருப்பினும், வணிகர்களுக்கு ஏற்படும் செலவை பொறுத்து, விலை நிர்ணயம் மறைமுகமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதையும் கவனித்து இந்திய அரசு மாசோதாவை கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications