புது ரூல்ஸ்.. செப்.1 முதல் அமல்.. LPG கேஸ் புக்கிங், மானிய தொகை.. கேஸ் வராமல் போகலாம்.. என்னென்ன செய்யனும்?
இண்டேன் (Indane), பாரத் கேஸ் (Bharat Gas) மற்றும் எச்பி கேஸ் (HP Gas) ஆகிய முன்னணி சமையல் எரிவாயு நிறுவனங்களின் இணைப்பை பெற்றுள்ள எல்பிஜி (LPG) கஸ்டமர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி முக்கியமான நாளாக இருக்கப் போகிறது.
வாடிக்கையாளர் சரிபார்ப்பு எனப்படும் ஈ-கேஒய்சி (e-KYC) செயல்முறையை முடிப்பதற்கான காலக்கெடுவை எண்ணெய் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. முன்னதாக ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், எல்பிஜி கஸ்டமர்களுக்கு தேவைப்படும் அவகாசத்தை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த அவகாச நீட்டிப்பு கஸ்டமர்களுக்கு வசதியாக இருந்தாலும், இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக அதை செய்து முடிப்பது பாதுகாப்பானது. ஏனென்றால், இந்த சரிபார்ப்பு செயல்முறையானது எல்ஜிபி சிலிண்டர் புக்கிங் மற்றும் மத்திய அரசு வழங்கும் மானிய தொகை (Subsidy) ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கிறது.
வீட்டிலிருந்தபடியே ஸ்மார்ட்போனில் ஈ-கேஒய்சி செயல்முறையை முடித்த கொள்ளலாம். இதற்கு ஆதார் கார்டு, ஆதார் கார்டுடன் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் 16 இலக்க எல்பிஜி ஐடி (LPG ID) ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் எச்பி கேஸ் ஆகியவற்றின் பிரத்யேக ஆப்களையும் வைத்திருக்க வேண்டும்.
1. இண்டேன் (Indane): உங்கள் மொபைலில் IndianOil ONE ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து, ஓடிபி (OTP) வழியாக லாகின் செய்யலாம். 16 இலக்க எல்பிஜி ஐடியை இணைத்து அக்கவுண்ட்டை லிங்க் செய்து கொள்ளவும். ஆப்பில் இருக்கும் e-KYC / Aadhaar Authentication என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
ஆதார் வெரிபிகேஷனுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, Aadhaar FaceRD ஆப் வழியாக முகத்தை ஸ்கேன் (Face Scan) செய்ய வேண்டும். இதையடுத்து கேட்கப்படும் விவரங்களை கொடுக்க வேண்டும். அனைத்து விவரங்களும் சமர்ப்பிக்கப்பட்டதும், ஈ-கேஒய்சி முடிந்ததற்கான உறுதிப்படுப்பட்ட தகவல் டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும்.
2. பாரத் கேஸ் (Bharat Gas): Hello BPCL ஆப்பை டவுன்லோட் செய்து ஓபன் செய்யவும். எல்பிஜி இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பர் மூலம் லாகின் செய்யவும். உங்களது பாரத் கேஸ் இணைப்பை தேர்ந்தெடுத்து, e-KYC / Aadhaar Authentication பகுதிக்கு செல்லவும். பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்து, முக அங்கீகாரத்துக்கு (Face Authentication) ஸ்கேன் செய்து முடிக்கவும்.
3. எச்பி கேஸ் (HP Gas): HP Pay ஆப்பை டவுன்லோட் செய்து ஓப்பன் செய்யவும். பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மூலம் உள்ளே நுழையவும்.எச்பி கேஸ் இணைப்பை தேர்ந்தெடுத்து, e-KYC விருப்பத்தை கிளிக் செய்யவும். ஆதார் அங்கீகாரத்திற்கு தேவையான ஒப்புதலை வழங்கி, Aadhaar FaceRD ஆப் வழியாக முக ஸ்கேன் செய்து சமர்ப்பிக்கவும்.
புதிய காலக்கெடுவான ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இந்த ஈ-கேஒய்சி செயல்முறையை செய்து முடித்துவிடுங்கள். இல்லையென்றால், எல்பிஜி கேஸ் சிலிண்டர் விநியோகம் மற்றும் அரசு மானியம் பெறுவதில் தற்காலிகத் தடை அல்லது தாமதம் ஏற்படக்கூடும். ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், கேஸ் ஏஜென்சிக்கு செல்லவும்.
சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இந்தச் சரிபார்ப்பை முடிக்க முடியும். போகும்போது, ஆதார் கார்டு, கேஸ் இணைப்பு எண் மற்றும் லிங்க் செய்யப்பட்ட மொபைல் நம்பர் ஆகியவற்றை எடுத்து செல்வது அவசியமாகும். தேதி நீட்டிக்கப்படும் என்று நினைத்து ஈ-கேஒய்சி செயல்முறையை முடிக்காமல் விட்டுவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications