Home
News

கேஸ் சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. 25 நாட்களுக்கு மாற்றம்.. உடனே இதை பண்ணிடுங்க.. அப்புறம்?

இந்திய அரசாங்கமானது, எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) விதிகளில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. புக்கிங் செய்வதற்கான இடைவெளியை அதிகரித்துள்ளது. ஆகவே, புதிய கேஸ் சிலிண்டர் வாங்குவதில் தாமதம் ஏற்படும். இந்த நேரத்தில் இந்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் கேஸ் உள்பட எச்பி கேஸ், இண்டேன் கேஸ் ஆகியவற்றில் எப்படி கேஸ் புக்கிங் (Gas Booking) செய்வது என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

எல்பிஜி கேஸ் சிலிண்டர் வைத்து இருப்பவர்கள் 21 நாட்களுக்கு ஒரு முறை புதிய சிலிண்டரை ரீபில் செய்து கொள்ளலாம். இந்த விதிகளை இந்திய அரசானது, இப்போது 25 நாட்களாக மாற்றி இருக்கிறது. ஆகவே, முன்கூட்டியே கேஸ் சிலிண்டர் தீர்ந்தாலும், வாங்குவதில் தாமதம் ஏற்படும். இதனால், அதிகளவில் சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. எப்படி செய்வது?

கேஸ் சிலிண்டர் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. 25 நாட்களுக்கு!

பாரத் கேஸ் (Bharat Gas), எச்பி கேஸ் (HP Gas), இண்டேன் கேஸ் (Indane Gas) ஆகிய நிறுவனங்களில் அதிகளவில் புக்கிங் நடக்கின்றன. இவற்றில் போன் கால்கள் (Phone Calls), எஸ்எம்எஸ் (SMS), வாட்ஸ்அப் (WhatsApp), மொபைல் ஆப் (Mobile App) அல்லது ஐவிஆர்எஸ் (IVRS) சேவைகள் வழியாக கேஸ் புக்கிங் செய்து கொள்ளலாம்.

பாரத் கேஸ் சிலிண்டர் புக்கிங் (Bharat Gas Cylinder Booking): பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது, இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் 77150 12345 அல்லது 77180 12345 ஆகிய எண்களில் ஐவிஆர்எஸ் வழியாக புக்கிங் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் வழியாக புக்கிங் செய்து கொள்ள 1800 224 344 எண்ணை பயன்படுத்தலாம்.

மேலும், ஹலோ பிபிசிஎல் மொபைல் ஆப் (Hello BPCL Mobile App) ஆப் வழியாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம். மேலும், பாரத் கேஸ் போர்ட்டலுக்கு சென்று புக்கிங் செய்து கொள்ளலாம். ஹோம் பேஜ்ஜில் இருக்கும் புக் யூவர் சிலிண்டர் (Book Your Cylinder) விருப்பத்தை கிளிக் செய்து, ரீபில் செய்து கொள்ளலாம்.

இண்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் (Indane Gas Cylinder Booking): கால்/எஸ்எம்எஸ் வழியாக புக்கிங் செய்ய 77189 55555 எண்ணை தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ்அப் வழியாக புக்கிங் செய்ய 75888 88824 எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதில் ரீஃபில் என்று டைப் செய்து வாட்ஸ்அப் மெசேஜ் செய்ய வேண்டும்.

84549 55555 என்கிற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, இண்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்து கொள்ளலாம். ஐவிஆர்எஸ் புக்கிங்குக்கும் 77189 55555 எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம். அதிகாரப்பூர்வ போர்டல் மற்றும் மொபைல் ஆப் வழியாகவும் புக்கிங் செய்யலாம். புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 1800 2333 555 எண்ணை அழைக்கலாம்.

எச்பி கேஸ் சிலிண்டர் புக்கிங் (HP Gas Cylinder Booking): 7718955555 எண்ணுக்கு கால் செய்து புக்கிங் செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் வழியாக புக்கிங் செய்ய 92222 01122 எண்ணை தொடர்பு கொள்ளலாம். மிஸ்டு கால் வழியாக புக்கிங் செய்ய 94936 02222 எண்ணை அழைக்கலாம். சந்தேகங்களுக்கு 1800 233 3555 என்னும் ஹெல்ப்லைன் நம்பரை அழைக்கலாம்.

எச்பி கேஸ் மொபைல் ஆப் அல்லது அதிகாரப்பூர்வ போர்ட்டல் வழியாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம். இப்படி புக்கிங் செய்ய கேஒய்சி வெரிபிகேஷனை (KYC Verification) செய்திருக்க வேண்டும். ஏற்கனவே, கஸ்டமர்களாக இருக்க வேண்டும். ஆப், போர்டலில் ஆன்லைன் பேமெண்ட்களை (Online Payment) செய்ய வேண்டி இருக்கும். 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X