9 ஆயிரம் ரூபாய்க்கு வெளிவரும் புது POCO போன்.. என்னென்ன பெஸ்டாக இதில் இருக்கிறது?
போக்கோ (POCO) என்ற பிராண்ட் இந்தியாவிலும் உலகளவிலும் பேமஸ் ஆனதற்கு ஒரு முக்கிய பங்கு சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமானது. சியோமியின் துணை பிராண்ட் ஆனா போக்கோ இப்போது இந்தியாவில் புத்தி போனை அறிமுகம் செய்யவுள்ளது.
போக்கோவின் ஸ்மார்ட்பொங்கல் போக்கோ போன் (Pocophone) அல்லது போக்கோ ஸ்மார்ட்போன்கள் (POCO smartphones) என அழைக்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போன்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சீன நிறுவனமாகும். POCO பிராண்ட் முதன்முதலில் ஆகஸ்ட் 2018 இல் Xiaomi இன் கீழ் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் வரிசையாக அறிவிக்கப்பட்டது. POCO இந்தியா 17 ஜனவரி 2020 அன்று ஒரு சுயாதீன நிறுவனமாக மாறியது.

அதற்கு பிறகு போக்கோ நிறுவனம் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை மலிவு விலையிலும், மிட் ரேஞ் செக்மென்ட் எண்டு பட்ஜெட் விலையிலும் தரமான அம்ஸங்களுடன் அறிமுகம் செய்து வருகிறது. போக்கோ (Poco) தனது அடுத்த C-சீரிஸ் ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அறிமுகத்திற்கு முன்பாக, இந்த புதிய ஸ்மார்ட் போன் சாதனத்தைப் பற்றிய சில விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
பிக்கோ நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படும் போக்கோ சி65 (Poco C65) நவம்பர் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி55 (Poco C55) என்ற ஸ்மார்ட்போனின் வாரிசாக இது வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . வரவிருக்கும் புதிய ஸ்மார்ட் போன் மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், இதன் ஸ்டோரேஜ் விருப்பத்தை பொறுத்தவரை, போக்கோ நிறுவனம் அதன் புதிய போக்கோ சி65 சாதனத்தை 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் அப்டேட் செய்யப்பட்ட புதிய வகை கேமரா ஐலேண்ட் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும்.
இரண்டு குறிப்பிடப்படாத மாட்யூல்களுடன் பின்புறம் 50MP பிரதான கேமராவைக் கொண்டிருக்கும். Poco C65 ஆனது செப்டம்பரில் மீண்டும் கசிந்த Redmi 13C போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது . ஊகங்களின் அடிப்படையில், Redmi 13C மற்றும் Poco C65 ஆனது FHD+ தெளிவுத்திறனுடன் 6.74' இன்ச் IPS LCD டிஸ்பிளே உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதத்தைக் கொண்டிருக்கும்.
இந்த புதிய போக்கோ சி65 ஸ்மார்ட்போன் சாதனம் 18W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைப் பெருமைப்படுத்துகிறது மற்றும் MIUI 14 உடன் Android 13 இல் இது இயங்கும் என்பதை லீக் தகவல் உறுதியாகியுள்ளது. பூக்கோ சி 65 (POCO C65) போனுக்கான ஆரம்பகால விலையானது 6 ஜிபி ரேம் மற்றும் 128GB மாடலுக்கு $109 விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மாடல் $129 ஆவிலையில் வரும்.
இந்திய மதிப்பின் படி, போக்கோ சி65 சாதனத்தின் விலை ரூ.9000 விலையில் வரும். அதேபோல், இதன் 8ஜிபி ரேம் மாடல் ரூ.10,000 விலை புள்ளியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications