Home
News

Google செய்ததை நாங்க செய்ய மாட்டோம் - OnePlus! புது போல்டப்பில் போன் பெயர் இது தானா?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அந்த வகையில், OnePlus நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கும் முதல் போல்டபில் போனின் பெயர் என்ன என்ற விபரம் இப்போது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி, OnePlus நிறுவனம் அதன் முதல் ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை இந்த 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் கால் பாதியில் அறிமுகம் செய்யும் என்று சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இந்த புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் உலக சந்தை மற்றும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் அறிமுகம் செய்யலாம் என்று வதந்திகளும் பரவி வருகிறது.

Google செய்ததை நாங்க செய்ய மாட்டோம் - OnePlus! போல்டப்பில் போன் பெயர்?

இதற்கு மத்தியில், OnePlus நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய தயாராகும் புதிய ஒன்பிளஸ் போல்டபில் ஸ்மார்ட்போனின் பெயர் பொதுவாக ஒன்பிளஸ் வி போல்ட் (OnePlus V Fold) என்ற பெயரிலும் மற்றும் ஒன்பிளஸ் வி ஃபிலிப் (OnePlus V Flip) என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்படும் என்று இதற்கு முன்பு வெளியான லீக் தகவல்கள் குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக, சீனா தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகத்துடன் இந்த பெயரை OnePlus வர்த்தக முத்திரை செய்துள்ளது.

ஆனால், இப்போது, ​​நம்பகமான OnePlus லீக்கர் வெளியிட்ட தகவலின் படி, முதல் OnePlus போல்டபில் ஸ்மார்ட்போன் சாதகமானது "ஒன்பிளஸ் ஓப்பன்" (OnePlus Open) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்படும் என்ற புதிய தகவல் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது OnePlus Fold என்று அழைக்கப்படும் என்று முன்பு கூறிய வதந்திகளை மாற்றியுள்ளது. சரி, OnePlus நிறுவனத்தின் இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

காரணம் என்று பார்க்கையில், கூகுள் நிறுவனம் சமீபத்தில் அதன் கூகுள் பிக்சல் ஃபோல்ட் (Google Pixel Fold)
ஸ்மார்ட்போன் சாதனத்தை வெளியிட்டது. இதன் காரணமாக தான் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் போல்டபில் ஸ்மார்ட் போனின் பெயரை எளிமையாகவும் வித்தியாசமாகவும் மாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் ஒன்பிளஸ் ஓபன் போல்டபில் ஸ்மார்ட்போன் பெரிஸ்கோப் கேமரா, ஹாஸ்லேப்ளாட் ட்யூனிங் உள்ளிட்ட டிரிபிள் ரியர் கேமராக்களுடன் வரும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், இந்த புதிய போல்டபில் கேமராவின் கட்-அவுட்டுக்கு வெளியே இடது மூலையில் ஃபிளாஷ் உள்ளது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் சில தினங்களுக்கு முன்பு லீக் செய்யப்பட்டுள்ளது. லீக் ஆனா ரெண்டர் புகைப்படங்களை வைத்து பார்க்கையில், பவர் பட்டனில் உட்பொதிக்கப்பட்ட பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருப்பது போல தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிஸ்பிளேக்கான பஞ்ச்-ஹோல் கேமரா மேல் மையத்தில் இருந்தாலும், படங்களின்படி, வெளிப்புறத் டிஸ்பிளேக்கு இடது பக்கத்தில் ஒரு கேமரா இருப்பது போல் தெரிகிறது. இது அறிமுகத்திற்கு முன்பாக தெளிவு பெரும் என்று கூறப்படுகிறது. OnePlus Foldable Smartphone பற்றிய உங்கள் கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Leak Confirms OnePlus Foldable Phone Will Just Be Called OnePlus Open
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X