Home
News

50எம்பி ரியர் கேமராவுடன் 5G போனை அறிமுகம் செய்து தெறிக்கவிட்ட இந்திய நிறுவனம்: கம்மி விலை.!

இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா (Lava) புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது.

Lava Blaze 5G விலை

Lava Blaze 5G விலை

அதாவது gadgets360 தகவலின்படி, 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Lava Blaze 5G ஸ்மார்ட்போன் ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அறிமுக சலுகையாக இந்த போன் ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

விற்பனை?

விற்பனை?

இருந்தபோதிலும் Lava Blaze 5G போனின விற்பனை தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் விற்பனை தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது Lava Blaze 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

Dimensity 700 சிப்செட்

Dimensity 700 சிப்செட்

Lava Blaze 5G ஸ்மார்ட்போன் ஆனது கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் கிரீன் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் 7என்எம் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

 128ஜிபி ஸ்டோரேஜ்

128ஜிபி ஸ்டோரேஜ்

அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஐபிஎஸ் டிஸ்பிளே

ஐபிஎஸ் டிஸ்பிளே

புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல்ஸ்,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு அறிமுகமானது இந்த லாவா ஸ்மார்ட்போன்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

இந்தLava Blaze 5G ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் உதவியுடன் தரமான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ்அன்லாக் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5ஜி-கனெக்டிவிட்டி..

5ஜி-கனெக்டிவிட்டி..

5ஜி, புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 802.11, ஜிபிஆர்எஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதேபோல் GIF, HDR, மேக்ரோ, மோஷன், நைட், பனோரமா, போர்ட்ரெய்ட், ஸ்லோ மோஷன் டைம்லேப்ஸ் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Lava Blaze 5G smartphone launched at Rs 9,999: Specifications, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X