புது ரூல்ஸ்.. உங்க PAN கார்டுல KYC பதிவு.. இனி செயல்படாத கார்டுகளுக்கு வருது.. SEBI கொண்டுவந்த மாற்றம்!
ஆதார் கார்டுடன் இணைக்கப்படாத பான் (PAN) கார்டுகள் செயல்படாத கணக்குகளாக மாற்றப்பட்டு முதலீட்டு திட்டங்களில் பரிவர்த்தனைகளை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நேரத்தில் செபி (SEBI) முக்கிய திருத்தத்தை செய்துள்ளது. பான் கார்டுகளுக்கான கேஒய்சி அப்டேட்களில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பு பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. மத்திய அரசின் கீழ் செயல்படும் வருமான வரித்துறை தொடர்ந்து இந்த ஆவணங்களை இணைக்குமாறு வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே, பல முறை இணைக்க அவசாகம் வழங்கப்பட்டிருந்தது. இப்போது, மே 31ஆம் தேதி கடைசி தேதியாக இருக்கிறது.

இப்படி இணைக்கப்படாத கார்டுகளால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிருக்கிறது. இதில் முக்கியமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் கேஒய்சி பதிவு (KYC Registration) செய்ய முடியாமல் தவித்தனர். ஏனென்றால், மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை தொடரும் போதும், கேஒய்சி ஆவணங்களாக பான் மற்றும் ஆதார் கார்டுகள் முக்கியமாக கேட்கப்படுகின்றன.
இந்த கார்டுகள் வருமான வரித்துறையின் உத்தரவின்படி இணைக்கப்படவில்லை என்றால், அந்த முதலீட்டாளர்களின் பான் கார்டு செயல்படாத கணக்குகளாக எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளின் ஆவணங்கள் சரிபார்ப்பானது, எந்தவித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாதபடி கேஒய்சி ஆன்-ஹோல்டு (KYC On-hold) செய்யப்பட்டது.
விதிகளை திருத்திய செபி: இப்படிப்பட்ட சூழலில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் - செபி (Securities and Exchange Board of India - SEBI) மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி விதிகளில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் மூலம் பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றாலும், மியூச்சுவல் ஃபண்ட்களில் பரிவர்த்தனைகளை செய்யலாமென உத்தரவிட்டது.
இந்த புதிய விதிகளுக்கு மே 31ஆம் தேதிக்குள் உட்பட்டு செயல்படுமாறு கேஒய்சி பதிவு ஏஜென்சிக்கு (KYC Registration Agency) செபி உத்தவிட்டது. ஆகவே, இனிமேல் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளை தொடங்கும்போது, பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க வேண்டிய கட்டாயமில்லை. அதேபோல ஏற்கனவே கேஒய்சி ஆன்-ஹோல்டு செய்யப்பட்டிருக்கும் கணக்குகளும் மாற்றப்படும்.
மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி ஸ்டேட்டஸ் (Mutual Fund KYC Status) சரிபார்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு தொடங்கி கேஒய்சி வெரிபிகேஷனுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள் உடனே www.cvlkra.com வெப்சைட்டுக்கு செல்லுங்கள். கேஒய்சி இன்குவைரி (KYC inquiry) பக்கத்தை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
இப்போது, உங்களது பான் கார்டு எண், பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை கேட்கப்படும். இதை கொடுத்த பிறகு கேஒய்சி சரிபார்க்கப்பட்டது (KYC Validated), கேஒய்சி பதிவு செய்யப்பட்டது (KYC Registered) அல்லது கேஒய்சி ஆன்-ஹோல்டு (KYC On-Hold) ஆகியவற்றில் ஏதாவது ஒன்று தோன்றும். இதில் சரிபார்க்கப்பட்டது என்றால், நீங்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்.
பதிவு செய்யப்பட்டது என்று தோன்றினால், ஏற்கனவே முதலீடு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களில் பரிவர்த்தனைகளை செய்யலாம். ஆனால், புதிய முதலீடு செய்ய வேண்டுமானால் உங்களது கணக்கானது, கேஓய்சி சரிபார்க்கப்பட்டது என்ற நிலைக்கு செல்ல வேண்டும். அதாவது, வழக்கம் போல பான் கார்டு, ஆதார் கார்டு விவரங்களை மீண்டும் அப்டேட் செய்ய வேண்டும்.
இப்படி செய்தால், உங்களது ஆவணங்கள் விரைவில் சரிபார்க்கப்பட்டுவிடும். ஆனால், இதிலும் பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் அதன் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். இறுதியாக ஆதார் பான் இணைக்கப்படாத காரணத்தால் கேஒய்சி ஆன்-ஹோல்டு என்று தோன்றினால், அது வரும் நாட்களில் சரிபார்க்கப்பட்டுவிடும். இதுதவிர மொபைல் நம்பர், இமெயில் போன்ற விவரங்களை நீங்கள் சரி பாருங்கள்.
இவை சரியாக இல்லை என்றாலும், கேஒய்சி ஆன்-ஹோல்டு செய்யப்படும். ஆகவே, இதற்கும் பான் கார்டு ஆதார் கார்டு இணைப்புக்கும் தொடர்பில்லை என்பதால், மொபைல் நம்பர், இமெயில் விவரங்களில் குளறுபடி இருப்பின் அதை உடனடியாக முடித்துவிட்டு, மீண்டும் கேஒய்சி ஆவணங்களை அப்டேட் செய்து, சரிபார்ப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








