Home
News

புது ரூல்ஸ்.. வங்கி கணக்கு.. ஆயுள் காப்பீடு.. மியூச்சுவல் ஃபண்ட்.. பங்கு சந்தை முதலீடு.. மாறும் கேஒய்சி விதி!

பேங்க் அக்கவுண்ட் ஓப்பனிங், இன்சூரன்ஸ் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகளில் முதலீடு போன்றவற்றில் மத்திய அரசின் நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலானது (Financial Stability and Development Council) புதிய கேஒய்சி ரூல்ஸ்களை (New KYC Rules) கொண்டுவருகிறது.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டங்களில் கீழ் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறோம். இப்போது, பேங்கிங் முதல் பங்கு சந்தை வரையில் நிதித்துறை தொடர்பான அனைத்துமே டிஜிட்டல் முறையில் மாறிவிட்டன. இருப்பினும், மத்திய அரசு அதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் குறைகளை தவிர்க்க மேலும் விதிகளையும் மாற்றி வருகிறது.

புது KYC ரூல்ஸ்.. வங்கி கணக்கு.. ஆயுள் காப்பீடு.. மியூச்சுவல் ஃபண்ட்!

இப்போது, பழைய கேஒய்சி விதிகளை ஒட்டுமொத்தமாக மாற்ற இருக்கிறது. இந்த புதிய விதிகளை கொண்டுவர நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலானது (FSDC), அண்மையில் நடைபெற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம் தலைமையிலான கூட்டத்தில் முன்மொழிந்துள்ளது.

ஏற்கனவே, நிதித் துறை முழுவதிலும் கேஒய்சி நெறிமுறைகளில் (KYC Norms) புதிய கட்டுப்பாடுகளையும், விதிகளையும் கொண்டுவர நிதிச் செயலாளர் டி.வி. சோமநாதன் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளதால், இந்த புதிய மாற்றங்கள் கூடிய விரைவில் அமலுக்கு வர இருப்பது தெரிகிறது.

இந்த குழுவானது, பழைய கேஒய்சி விதிகளுக்கு பதிலாக யுனிபார்ம் கேஒய்சி (Uniform KYC) என்னும் புதிய விதிகளை கொண்டுவர இருக்கிறது. முன்னதாக, பேங்க் அக்கவுண்ட் ஓப்பனிங், இன்சூரன்ஸ் டெபாசிட், ஃமியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யும் தனிநபர்களுக்கு கேஒய்சி வெரிபிகேஷன் கட்டாயமாக்கப்பட்டது.

புது KYC ரூல்ஸ்.. வங்கி கணக்கு.. ஆயுள் காப்பீடு.. மியூச்சுவல் ஃபண்ட்!

இதற்கு ஆதார் கார்டு, பேன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற பல்வேறு ஆவணங்கள் எடுத்து கொள்ளப்பட்டன. இந்த ஆவணங்களை ஒவ்வொரு புதிய முதலீட்டு நடவடிக்கைகளின் போதும் வெரிபிகேஷன் செய்யும் சூழல் இப்போதைய கேஒய்சி விதிகளில் இருக்கிறது. இதற்கு பதிலாகவே யுனிபார்ம் கேஒய்சி வருகிறது.

யுனிபார்ம் கேஒய்சி என்றால் என்ன? இந்த புதிய கேஒய்சி முறையில் தனிநபர்களின் ஒட்டுமொத்த ஆவணங்களும் இணைக்கப்பட்டு ஒரேவொரு கேஒய்சியாக மாற்றப்பட இருக்கிறது. இதற்கு 14 இலக்க எண் கொடுக்கப்படும் என்றும் இந்த எண்ணை வைத்தே கேஒய்சி வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஏனென்றால், இந்த 14 இலக்க எண் வெரிபிகேஷன் நடைமுறையானது, 2016ஆம் ஆண்டே மூலதன சந்தையில் (Capital Markets) மட்டும் அமலுக்கு வந்துவிட்டது. அதாவது, தனிநபர் அல்லாத இடைத்தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இந்த விதிமுறைகள் நடைமுறையில் இருக்கின்றன. இவர்களின் ஆவணங்கள் செபி (SEBI) மூலம் சரிபார்க்கப்பட்ட பின்பே 14 இலக்க எண்ணாக வழங்கப்படுகிறது.

இவர்கள் புதிய நிதி தொடர்பான நடவடிக்கைகளின்போது, தனித்தனி ஆவணங்களுக்கு பதிலாக இந்த எண்ணை பயன்படுத்தி கொள்ளலாம். இதே நடைமுறையே தனிநபர்களுக்கு கொண்டுவரப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த புதிய கேஒய்சி விதிகள் அமலுக்கு வந்தால், தனிநபர் நிதி செயல்பாடுகளில் எனென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை இப்போது பார்ப்போம்.

வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் புதிய அக்கவுண்ட் ஓப்பன் செய்யும்போது, கேஒய்சி வெரிபிகேஷனுக்கு பல்வேறு ஆவணங்களை சமர்பிக்க வேண்டியது கிடையாது. இது கஸ்டமர்களின் நேரத்தையும், நடைமுறை சிக்கலையும் குறைக்கும். அதேபோல பாதுகாப்பையும் அதிகரிக்கிறது. ஆகவே, வரும் காலங்களில் ஆவணங்களை ஒன்றிணைக்கும் விதிகளுக்கு தனிநபர்கள் கட்டுப்பட வேண்டிருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New KYC Rules For Bank Accounts Opening To Insurance Policy, Mutual Funds Check Uniform KYC Norms
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X