புது ரூல்ஸ்.. நவ.6-க்கு மேல.. பேங்க் அக்கவுண்ட்.. 7 நாட்கள் கெடு.. ஆதார், பான் கேஒய்சி விடாது.. என்ன மாறுது?
இந்திய ரிசர்வ் பேங்க் - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) ஆனது, பேங்க் கஸ்டமர்களின் கேஒய்சி (KYC) விதிகளில் புது மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது. இந்த மாற்றங்கள் நவம்பர் 6ஆம் தேதிக்கு பிறகு அனைத்து கஸ்டமர்களுக்கும் பொருந்துகிறது. இனிமேல் பேங்க் கஸ்டமர்கள் என்னென்ன செய்ய வேண்டி இருக்கும்? ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற முக்கிய கேஒய்சி ஆவணங்களில் என்னென்ன மாறப் போகிறது? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
பணம் அனுப்புதல், பெறுதல் போன்றவற்றில் கஸ்டமர்களை அடையாளம் காண கேஒய்சி விதிகள் கொண்டுவரப்பட்டன. பேங்க் சேவைகள் முதல் நிதி நிறுவன சேவைகள் வரையில் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் செய்ய இந்த கேஒய்சி விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த விதிகளில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவானது புது வழிகாட்டுதல்களை கொண்டுவந்து இருக்கிறது.

ஆர்பிஐ புது கேஒய்சி விதிகள் (RBI New KYC Rule): இந்த புதிய விதிகளின்படி குறிப்பட்ட கால இடைவெளியில் கேஒய்சி அப்டேட்களை செய்ய வேண்டும். அதாவது, அதிகப் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் கஸ்டமர்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். அதேபோல நடுத்தர பண பரிவர்த்தனை கஸ்டமர்கள் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.
குறைந்த பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். ஏற்கனவே, ஒரு பேங்க் அல்லது நிதி நிறுவனங்கள் அக்கவுண்ட் ஓப்பன் செய்த கஸ்டமர்கள் மீண்டும் மற்றொரு அக்கவுண்ட் அல்லது புதிய சேவையை பெறுவதற்கு கஸ்டமர்கள் டியூ டிலிஜென்ஸ் - சிடிடி (Customer Due Diligence - CDD) செய்ய வேண்டியது கிடையாது.
இதனால், புது அக்கவுண்ட் ஓப்பன் செய்யும் ஏற்படும் காலதாமதம் மற்றும் அதற்கான கேஒய்சி ஆவணங்கள் சமர்பிப்பு போன்றவை இருக்காது. இது பேங்க் கஸ்டமர்களுக்கும் பொருந்தும். ஒரே பேங்கில் வேறு சேவைகளை பெறுவதற்கு இனிமேல் கேஒய்சி விதிகள் சுலமாக இருக்கும். ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கின்றன.

மேலே பார்த்த, கேஒய்சி ஆவணங்கள் எந்தவொரு அக்கவுண்ட்டுக்கும் முக்கியமாக இருக்கின்றன. இதில் பிழைகள் அல்லது மாற்றம் இருந்தால் உடனடியாக கஸ்டமர்கள் அதை மாற்றி கொள்ள வேண்டும். இதை செய்த பிறகு அதை அக்கவுண்ட்டில் அப்டேட் செய்ய வேண்டும். இந்த கஸ்டமர்களின் அப்டேட்டை உறுதி செய்ய 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், இது கஸ்டமர்களுக்கு கிடையாது. பேங்குகள், நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே. உங்களது கேஒய்சி அப்டேட்களை 7 நாட்களில் அந்த நிறுவனங்கள் முடிக்க வேண்டும். அதாவது, உங்களது அப்டேட் செய்யப்பட்ட கேஒய்சி விவரங்களை சென்ட்ரல் கேஒய்சி ரெக்கார்ட்ஸ் ரிஜிஸ்டரி - சிகேஒய்சிஆ (Central KYC Records Registry - CKYCR) இல் பதிவு செய்ய வேண்டும்.
இதில் பதிவு செய்யப்பட்டுவிட்டால், உங்களது விவரங்களை அதில் இருந்து எப்போது வேண்டுமானாலும், பேங்க் மற்றும் நிதி நிறுவனங்கள் பெற்று கொள்ள முடியும். இது கஸ்டமர்களை மீண்டும் மீண்டும் ஆவணங்கள் சமர்பிப்பதில் இருந்து பாதுகாக்கும். இப்படி ஏகப்பட்ட கேஒய்சி விதிகள் மாறி இருக்கின்றன. இதனால், பண பரிவர்த்தனைகளில் எந்தவித இடையூறுக்கும் வாய்ப்பில்லை.
இருப்பினும், பான் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஒட்டர் ஐடி போன்ற புகைப்பட அடையாளங்களை கொண்ட கேஒய்சி ஆவணங்களில் பிழையில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அல்லது பிழை இருந்தால் உடனடியாக அதை மாற்றி கொண்டு, அதை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், கஸ்டமர்களுக்கு சிரமம் இருக்கும்.


Click it and Unblock the Notifications