Home
News

கேபிள் TV, DTH-க்கு ஆப்பு.. 365 நாட்கள்.. 1000 TV சேனல்கள்.. ரூ.2000-க்கு முடித்த அம்பானி.. சன் TV, KTV வருது!

கேபிள் டிவி, டிடிஎச் வழியாக லைவ் டிவி சேனல்களை வருடம் முழுவதும் பெற வேண்டுமானால், ரூ.2,000 போதாது. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், அந்த விலைக்கு லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் ஓடிடி சந்தாவையும் கொடுத்து இருக்கிறது.

ஜியோ ரூ.2000 திட்ட விவரங்கள் (Jio Rs 2000 Plan Details): இது டேட்டா திட்டமாக இருக்கிறது. ஆகவே, பேஸ் திட்டம் இருக்க வேண்டும். 365 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுக்கிறது. இந்த டேட்டாவுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல லைவ் டிவி மற்றும் ஓடிடி ஆப்களுக்கும் கிடைக்கும்.

கேபிள் TV, DTH-க்கு ஆப்பு.. 365 நாட்கள்.. 1000 TV சேனல்கள்.. ரூ.2000..

1000+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். இதில் பிரீமியம் சேனல்களும் கிடைக்கும். பிரீமியம் தமிழ் சேனல்கள் கிடைக்கும் சோனிஎன்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் (Sony Entertainment Network) மற்றும் சன்டிவி நெட்வொர்க் (Sun TV Network) நிறுவனங்களின் சேனல்களும் இதில் கிடைக்கும். மேலும், வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி (Discovery) சேனல்கள் கிடைக்கும்.

ஈடிவி நெட்வொர்க் (ETV Network) நிறுவனத்தின் சேனல்களும் கிடைக்கும். ஜியோ டிவியில் இந்த ஒட்டுமொத்த லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதேபோல பிரீமியம் ஓடிடி ஆப்களை தவிர இதர ஓடிடி ஆப்களையும் ஜியோ டிவி ஆப் வழியாக அணுகலாம். அதாவது, யூடியூப் பிரீமியம் (YouTube Premium), பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile) ஆப்களின் சந்தா கிடைக்கிறது.

இதை மைஜியோ ஆப் வழியாக ஆக்டிவ் செய்து கொண்டு, பிரத்யேகமாக கிடைக்கும் ஆப்கள் வழியாக பயன்படுத்தலாம். அதேபோல ஜியோ மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்து ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக சோனி லிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) ஓடிடி சந்தா கிடைக்கிறது.

மேலும், டிஸ்கவரிபிளஸ் (Discovery+), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஈடிவி வின் (ETV Win), சாவ்பால் (Chaupal), ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கேட் (FanCode), டைம்ஸ் பிளே (Times Play) மற்றும் தாரங் பிளஸ் (Tarang Plus) ஓடிடி சந்தா கிடைக்கிறது. இந்த சந்தாக்களை ஜியோ டிவி ஆப் வழியாகவே பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

ஆகவே, லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், ஓடிடி ஆப்களையும் வருடம் முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடி திட்டமானது, டேட்டா திட்டமாகவே இருப்பதால், ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும். இது அன்லிமிடெட் 5ஜி திட்டமாக இருந்தால், இந்த ஓடிடி திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் தொடர்ந்து கிடைக்கும்.

அதேபோல 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் மட்டுமே இதை பெற்று கொள்ள முடியும். அதிலும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களில் இதை பெற்று கொள்ள முடியாது. ஆகவே, ஜியோ ரூ.3599 திட்டம், ஜியோ ரூ.3999 திட்டம் ஆகியவற்றை பேஸ் திட்டமாக வைத்திருக்கும் கஸ்டமர்கள் மட்டுமே இந்த ஓடிடி திட்டத்தை பெற்று கொள்ள முடியும்.

இதில் ஓடிடி ஆப்கள் மற்றும் லைவ் டிவி சேனல்களை ஸ்மார்ட் டிவியிலும் பார்த்து கொள்ள முடியும். ஆனால், டேட்டா கூடுதலாக தேவைப்படும். இருப்பினும், ரூ.2,000 செலவில் வருடம் முழுவதும் லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்கள் கிடைப்பதால், மற்ற டெலிகாம் நிறுவனங்களைவிட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஒருபடி முந்தி சென்றுவிட்டது என்பதை மறுக்க முடியாது.

Best Mobiles in India

English summary
New Jio Rs 2000 Plan With 365 Days Validity 1000 TV Channels 15 OTT 365GB Data Check OTT Pass Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X